சென்னைக்கு நிறைய சம்பவங்களை செய்யப்போறோம்..காத்திருங்கள்..மு.க ஸ்டாலின் அதிரடி ட்வீட்
சென்னை: நீங்க எதிர்பார்க்கும் இன்னும் நிறைய சம்பவங்களை சென்னைக்கு செய்யப் போறோம். காத்திருங்கள் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகத்தின் தலைநகரம் சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னைப் பட்டினம் 1639-ம் ஆண்டு உருவானது. 383 ஆண்டுகளில் சென்னை மாநகரம் பல்வேறு நிலைகளில் வளர்ச்சி அடைந்து சாதித்துள்ளது. எத்தனையோ இயற்கை இடர்பாடுகளை சந்தித்தாலும் அதிலிருந்து விரைவில் மீண்டு விடும் சென்னை மாநகரம். சுனாமியோ, பெருவெள்ளமோ, புயல் மழையோ எதையும் சமாளித்து விடுவார்கள் சென்னை மாநகர மக்கள்.
இன்று சென்னைக்கு 383வது பிறந்த நாள் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22-ம் தேதி சென்னை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சென்னை தினத்தை கொண்டாடும் வகையில் மாநகராட்சி இந்திய தொழில் கூட்டமைப்புடன் இணைந்து பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தன.

சென்னை ஒரு ரோல் மாடல்
கொட்டித்தீர்த்த கனமழையிலும் பெசன்ட் நகர் கடற்கரையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வெகு சிறப்பாக நடைபெற்றது. மழையில் ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டங்கள் அமர்க்களப்பட்டன.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரிட்டிஷார் கட்டமைத்த மெட்ராஸை சென்னையாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர். அதற்கு இன்னைக்கு 383வது பிறந்தநாள். திராவிட மாடல் ஆட்சிக்காலத்தின் திட்டங்களுக்கு சென்னை ஒரு ரோல் மாடல் என்று குறிப்பிட்டுள்ளார்.

நிறைய சம்பவங்கள்
இப்ப நீங்க பார்க்கும் இந்த நவீனச் சென்னையை வடிவமைப்பதில், மேயராக இருந்த என் பங்களிப்பும் இருக்கு என்பதில் பெருமை. நீங்க எதிர்பார்க்கும் இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போறோம். காத்திருங்கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சென்னை மேயர்
கடந்த 1996ல் மாநகர் மேயர் பதவியில் இருந்தபோது ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்கள் சென்னை மக்களிடையே பெருத்த வரவேற்பு கிடைத்தது. அவர், 5 ஆண்டுகள் செய்த சாதனைகள் இன்றளவும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. பீட்டர்ஸ் சாலை -கான்ரான் ஸ்மித் சாலை சந்திப்பு, பீட்டர்ஸ் சாலை -வெஸ்ட்காட் சாலை சந்திப்பு, பாந்தியன் சாலை - காசா மேஜர் சாலை சந்திப்பு, புரசைவாக்கம் நெடுஞ்சாலை - ஆண்டர்ஸ் சாலை சந்திப்பு, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை - ராயப்பேட்டை நெடுஞ்சாலை சந்திப்பு, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை - டி.டி.கே சாலை சந்திப்பு, டி.டி.கே.சாலை - சி.பி.ராமசாமி சாலை சந்திப்பு, சர்தார் பட்டேல் சாலை - டாக்டர் முத்துலட்சுமி சாலை சந்திப்பு, சர்தார் பட்டேல் சாலை - காந்தி மண்டபம் சாலை சந்திப்பு ஆகிய 10 இடங்களில் மேம்பாலங்கள் கட்டி திறந்து வைக்கப்பட்டன. மேயராக செய்த சாதனைகளுக்காக "நவீன சென்னை மாநகரத்தின் தந்தை" என்று போற்றப்பட்டார் மு.க. ஸ்டாலின். சிங்கார சென்னை என்ற முழக்கத்தை முன்னெடுத்து அதை மக்களிடையே பரவலாக்கினார்.

திமுக அரசின் பங்களிப்பு
கடந்த ஆண்டு சென்னை தினம் கொண்டாட்டத்தை முன்னிட்டு சீர்மிகு, சிங்கார வந்தாரை வாழவைக்கும் தருமமிகு சென்னை, பல அடையாளங்களுக்கும் சிறப்புகளுக்கும் சொந்தமானது.தொலைநோக்குப் பார்வையுடன் சென்னையின் வளர்ச்சிக்குப் பங்களித்தது திமுக அரசு; இனியும் தொடரும் என்று பதிவிட்டிருந்தார். இந்த ஆண்டு நிறைய சம்பவங்கள் சென்னைக்கு செய்யப்போறோம் என்று கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications