கும்மிருட்டு! தனியே நின்று லிப்ட் கேட்ட பெண்.. வண்டியை நிறுத்திய வாகன ஓட்டி.. சட்டென நடந்த ட்விஸ்ட்!
சென்னையில் லிப்ட் கேட்டு தனியே நின்ற பெண் மீது இரக்கப்பட்டு வண்டியை நிறுத்தியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
சென்னை: சென்னை சாலைகளில் லிப்ட் கேட்டு இரவு நேரங்களில் பெண் கையை நீட்டினால் ஆபத்து அழைக்கிறது என்று அர்த்தமாகும்.
சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் கணேஷ்குமார். இவர் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். கடந்த மாதம் 24 ஆம் தேதி வேலையை முடித்துக் கொண்டு செங்குன்றத்தில் இருந்து தனது வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
புழல் அருகே கணேஷ் குமார் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு இருட்டில் தனியாக நின்றிருந்த பெண் ஒருவர் கணேஷ்குமாரிடம் லிப்ட் கேட்டுள்ளார். நடுராத்திரி என்பதால் இரக்கப்பட்ட கணேஷ்குமார் வாகனத்தை அந்த பெண் அருகே நிறுத்தினார்.

எங்கே செல்ல வேண்டும்
இதையடுத்து எங்கே செல்ல வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார். அதற்கு அந்த பெண் நீட்டி முழக்கி ஏதோ ஒரு இடத்தை கூறியுள்ளார். அந்த இடம் குறித்து கணேஷ் குமார் புரிந்து கொள்வதற்குள் பின்னால் இருந்து வந்த ஒரு இளைஞர் கணேஷ்குமாரின் கழுத்தில் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இதனால் கணேஷ் குமார் ஒன்றும் புரியாமல் விழித்தார்.

பணத்தை கேட்ட காதலன்
பின்னர் அந்த இளைஞர், கையில் இருக்கும் பணத்தை கொடுக்குமாறு கணேஷ்குமாரிடம் கேட்டுள்ளார். அதற்கு கணேஷ் குமார் அதிர்ச்சி அடைந்து தன்னிடம் பணம் எதுவும் இல்லை என கூறியுள்ளார். பின்னர் அவரிடம் இருந்த செல்போனை பறித்த அந்த இளைஞர் அந்த பெண்ணை அழைத்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் பறந்துவிட்டார்.

வழிபறி
அப்போதுதான் அந்த பெண்ணுக்கும் இந்த வழிபறியில் பங்குண்டு என்பதையும் லிப்ட் கேட்டது எல்லாமே இந்த ஜோடியின் பிளான் என்பதையும் அறிந்தார். இதையடுத்து அந்த காதல் ஜோடி குறித்து புழல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகார் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புழல் போலீஸார்
இந்த நிலையில் புழல் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஆணும் பெண்ணும் போலீஸை பார்த்ததும் தப்பியோடினர். அவர்களை போலீஸார் துரத்தி பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் பெயர் அபினேஷ், வாணி என்பது தெரியவந்தது. புழல் பகுதியை சேர்ந்தவர் அபினேஷ் என்றும் கண்ணகி நகரை சேர்ந்த வாணி என்பது தெரியவந்தது.

ஆடம்பரம்
இருவரும் ஆடம்பரமான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இரவு நேரங்களில் தனியாக வரும் ஆண்களை குறி வைத்து லிப்ட் கேட்பது போல் நடித்து அவர்களிடம் இருந்து பணம் ,நகை, போன் உள்ளிட்டவற்றை பறித்து சென்றதும் தெரியவந்தது. இந்த ஜோடிதான் கணேஷ்குமாரிடம் செல்போனை பறித்தது என்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் இது போல் பல வழிப்பறிகளில் ஈடுபட்டது தெரியவந்தது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications