களமிறங்கிய பெரிய கை.. சென்னைக்கு அருகே அமையும்.. மிகப்பெரிய குளோபல் சிட்டி.. எங்கே வருது?
சென்னை: சென்னையில் உலகளாவிய நகரத் திட்டத்தின் பணிகள் தற்போது முழுவீச்சில் தொடங்கியுள்ளன. மதுராந்தகத்தில் அமையவுள்ள சென்னை உலகளாவிய நகரத்திற்கான மாஸ்டர் பிளானை தயாரிக்கும் ஒப்பந்தத்தை நிப்பான் கோயீ நிறுவனம் வென்றதன் மூலம், இத்திட்டம் ஒரு படி முன்னேறியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலுகாவில் உலகளாவிய நகரம் (Global City) அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. பரந்தூர் பசுமை விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணி ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் வேளையில், இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாலையனூர், ஜானகிபுரம், அட்டிமணம், படலம், கல்லபிரன்புரம், புல்பரக்கோயில் ஆகிய ஆறு கிராமங்களில் 787.52 ஹெக்டேர் நிலம் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் (TIDCO) மூலம் கையகப்படுத்தப்படவுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை உலகளாவிய நகரம் (Global City)
இதில், பாலையனூரில் அதிகபட்சமாக 406 ஹெக்டேர் நிலமும், அதைத் தொடர்ந்து ஜானகிபுரத்தில் 162.65 ஹெக்டேர் நிலமும் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்தக் கிராமங்களை அடையாளம் கண்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, முன்னதாக 2025 பட்ஜெட் உரையில், சென்னை அருகே 2,000 ஏக்கர் பரப்பளவில் இந்த உலகளாவிய நகரம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார். இந்த நகரத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், வர்த்தக மண்டலங்கள் மற்றும் குடியிருப்பு வளாகங்கள் அமைக்கப்படும்.
எங்கே வருகிறது உலகளாவிய நகரம் (Global City)?
மெட்ரோ ரயில், சாலை மற்றும் விரைவுப் பேருந்து சேவைகள் மூலம் சென்னையுடன் இணைப்பை உறுதி செய்யும் வகையில், திட்டத்தின் முதல் கட்டப் பணிகளை TIDCO விரைவில் தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த திட்டம் வெற்றியடைந்தால், மாநில அரசின் முதல் முயற்சியாக இது அமையும். இதற்கு முன், 1972-ல் மறைமலைநகரில் துணைநகரம் அமைக்கவும், 1990-களின் முற்பகுதியில் வட சென்னையில் உள்ள மணலி புதிய நகரத்தில் ஒரு திட்டம் என இரு முயற்சிகள் தோல்வியடைந்தன. மறைமலைநகரில் உள்ள மஹிந்திரா வேர்ல்ட் சிட்டி மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் தடாவில் உள்ள ஸ்ரீ சிட்டி ஆகியவை தற்போது வெற்றிகரமாக செயல்படும் ஒருங்கிணைந்த நகரங்களாகும்.
டெண்டர் வெளியிடப்பட்டு உள்ளது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய சர்வதேச நகரம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர் கோரியது டிட்கோ நிறுவனம்.
பொதுமக்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்திடும் வகையில் ஒருங்கிணைந்த புதிய நகரங்கள் உருவாக்கப்படும் என்று ( தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
நகரமயமாக்கலால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், சென்னை அருகே 2,000 ஏக்கர் பரப்பளவில் ஒரு புதிய ஒருங்கிணைந்த நகரத்தை உருவாக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. 'குளோபல் சிட்டி' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டம், உலகத் தரத்திலான வசதிகளை பொதுமக்களுக்கு வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குளோபல் சிட்டி
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் (TIDCO) இந்த திட்டத்தை செயல்படுத்தும். வரும் நிதியாண்டில் இதற்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னைக்கு அருகில் சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் ஒரு புதிய நகரத்தை உருவாக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (Tidco) நான்கு இடங்களை அடையாளம் கண்டுள்ளது. இந்த இடங்களின் பட்டியல் தற்போது மாநில அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், ஃபின்டெக் மண்டலங்கள் மற்றும் நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் நன்கு கட்டமைக்கப்பட்ட ஒரு நகரத்தை உருவாக்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். மேலும், சிறந்த போக்குவரத்து மற்றும் இணைப்பு வசதிகளையும் உறுதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
திருமழிசை போன்ற முந்தைய ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட துணைக்கோள் நகரத் திட்டங்கள் இன்னும் முழுமையடையாத நிலையில், இந்த புதிய திட்டம் குறித்த தகவல்கள் வெளியிடப்படாதது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில்தான் இந்த குளோபல் சிட்டி குறித்து டெண்டர் வெளியிடப்பட்டு உள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications