சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மெரினா பீச்சில் நவம்பர் முதல் மக்களை அனுமதிக்க வாய்ப்பு - சென்னை மாநகராட்சி

நவம்பர் 1ம் தேதி முதல் மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை ஹைகோர்ட்டில் மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: மெரீனா கடற்கரையில் மக்களுக்கு எப்போது அனுமதி வழங்கப்படும் என்று சென்னை ஹைகோர்ட் நதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு நவம்பர் முதல் அனுமதிக்க வாய்ப்பு உள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளை சுத்தப்படுத்தி அழகானதாக மாற்ற வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

சென்னைவாசிகளுக்கு அதிகம் செலவில்லாத இடம் மெரீனா கடற்கரை. கடல் காற்று வாங்குவதற்காக பலரும் குடும்பத்தோடு குவிந்து விடுவார்கள். கொரானா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மெரினா கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தடையை மீறி நுழைந்த பொதுமக்களை காவல்துறையினர் அப்புறப்படுத்திவந்தனர்.

Chennai Marina Beach open for Public from November says Chennai Corporation

இருப்பினும் மீனவர்கள் மற்றும் சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் மெரினாவில் பொதுமக்களை அனுமதிக்க கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், மெரினா கடற்கரையில் நவம்பர் மாதம் முதல் மக்கள் அனுமதிக்கப்படுவார்களா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு நவம்பர் 1ம் தேதி முதல் மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

இந்த இந்த "பற்ற வைக்கும்" முயற்சி வெற்றி தராது.. இது எஃகு கோட்டை.. பாஜக, அதிமுகவை தெறிக்க விட்ட கி.வீரமணி

மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளை சுத்தப்படுத்தி அழகானதாக மாற்ற வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையர் நேரில் சென்று ஆய்வு செய்யவும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

English summary
Chennai Marina Beach open for Public from November says Chennai Corporation
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X