Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காயம் அடைந்த காவலர்.. வீட்டுக்கு நேரில் போன சென்னை காவல் ஆணையர்.. சூப்பர் சர்ப்ரைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் , தேனாம்பேட்டையில் சைக்கிள் ரோந்தின்போது, இருசக்கர வாகனம் மோதி தோள்பட்டை எலும்பு முறிவடைந்து சிகிச்சை பெற்று வரும் தலைமைக் காவலரின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறி, அவருக்கு புதிய சைக்கிள் பரிசளித்தார் . இதனால் அந்த காவலரின் குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தலைமைக் காவலர் M.செந்தில்குமார். த/பெ.முனுசாமி என்பவர், E-3 தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். தலைமைக் காவலர் செந்தில்குமார் தினந்தோறும் சைக்கிளிலியே ரோந்து பணி மேற்கொண்டு வருவது வழக்கம்.

இந்நிலையில் செந்தில்குமார், நேற்று முன்தினம்(12.10.2021) மதியம் சுமார் 12.30 மணியளவில், பணியின்போது, தேனாம்பேட்டை, அண்ணாசாலை, அண்ணா அறிவாலயத்திலிருந்து காவல் நிலையம் நோக்கி சைக்கிளில் ரோந்து சென்று கொண்டிருந்தபோது பின்னால் வேகமாக வந்த இருசக்கர வாகனம், தலைமைக் காவலரின் சைக்கிள் மீது மோதியதில், இருவரும் நிலை குலைந்து கீழே விழுந்து காயமடைந்தனர்.

ஆம்புலன்ஸ்

ஆம்புலன்ஸ்

காயமடைந்த இருவரையும். ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, பரிசோதனை செய்ததில், தலைமைக் காவலர் செந்தில்குமாருக்கு இடது தோள்பட்டை அருகில் Collar Bone முறிவடைந்தது தெரியவந்தது. இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த பசுல்லா என்பவருக்கு உடலில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டது.

செந்தில்குமார்

செந்தில்குமார்

எலும்பு முறிவுக்கான சிகிச்சை பெற்ற தலைமைக் காவலர் செந்தில்குமார் மருத்துவர்கள் ஆலோசனைப்படி வீட்டில் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டார். மேலும், மேற்படி விபத்து சம்பவம் குறித்து, தலைமைக் காவலர் செந்தில்குமார் கொடுத்த புகாரின்பேரில், R-4 பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வுப்பிரிவில், வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

நேரில் சென்றார்

நேரில் சென்றார்

இந்நிலையில் சென்னை பெருதகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் ஐபிஎஸ் நேற்று (13.10.2021) மாலை ஆலந்தூர், M.K.N. சாவையிலுள்ள காவலர் குடியிருப்பிற்கு சென்று, அங்கு வசித்து வரும் தலைமைக் காவலர் செந்தில்குமாரை நேரில் சந்தித்து, காயம் குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினார். பின்னர் மருத்துவ பரிசோதனைகள். ஊடுகதிர் படங்களை (X-ray) பார்வையிட்டு மருத்துவ ஆலோசனைப்படி நடந்து கொள்ள அறிவுறுத்தினார்.

கொடுத்த பரிசு

கொடுத்த பரிசு

மேலும், மேற்படி தலைமைக் காவலர் செந்தில்குமார் பெரும்பாலும் சைக்கிளில் ரோந்து செல்வது தெரியவந்ததால் காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் ஐபிஎஸ் , விபத்தின்போது சேதமடைந்த சைக்கிளுக்கு பதிலாக புதிய சைக்கிளை தலைமைக் காவலர் செந்தில்குமாருக்கு பரிசாக வழங்கி, விரைவில் குணமடைய வாழ்த்தினார். பின்னர் ஆலந்தூர் குடியிருப்பில் வசிக்கும் காவலர் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்து, விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்" இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக அக்கறை

அதிக அக்கறை

காவலர்கள் உடல் மற்றும் மனநலனில் அதிக அக்கறை காட்டி வரும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அண்மையில் சென்னையில் பெண் போலீஸாருக்கான 3 நாள் சிறப்பு பயிற்சி முகாமையும் செயல்படுத்தினார். அப்போது பேசிய அவர், பெண் போலீஸார் காவல் பணி, சொந்த வாழ்வில் திறம்பட செயல்பட்டு, இரண்டிலும் சம வெற்றி பெறுவதற்காக இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது என்றார். திறமையாக செயல்படும் காவலர்களை நேரில் அழைத்து பாராட்டி ஊக்குவித்தும் வருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+