சூப்பர்.. சென்னையில் பிரபல டோல்கேட்டை மூடுறாங்களாமே.. திணறிய மக்கள்.. அரசு எடுக்க போகும் முடிவு?
சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் மெட்ரோ பணிகள் நடக்கும் நிலையில் முக்கியமான டோல்கேட் ஒன்றை மூட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசும் இது தொடர்பான பரிசீலனையில் ஈடுப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
சென்னை ஓஎம்ஆர் சாலையில் பல்வேறு டோல் கேட்டுகளில் சுங்கக்கட்டணம் நீக்கப்படுவதாக கடந்த 2021ல் அமைச்சர் ஏவ வேலு அறிவித்து இருந்தார். இது தொடர்பாக சட்டசபையில் பேசிய அவர், சில இடங்களில் ஒரு கோட்டம் முழுக்க சாலை பணிகளை ஒரே நிறுவனமே எடுத்து செய்கிறது. அதை மாற்ற உள்ளோம்.

ஒரு கோட்டத்தில் மொத்தமாக ஒரே நிறுவனம் சாலை டெண்டர் பணிகளை இனி எடுக்க முடியாது. பல்வேறு இடங்களில் சாலைகளை விரிவாக்கும் பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. சென்னையில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஓ.எம்.ஆர் சாலையில் 4 இடங்களில் சுங்க வசூல் நிறுத்தப்படுகிறது. மக்கள் அங்கு பயணம் செய்ய டோல் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை.
பெருங்குடி, துரைப்பாக்கம், கலைஞர் சாலை, மேடவாக்கம் சாலைகளில் இனி சுங்க கட்டணம் வசூலிக்கப்படாது. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் தொடங்க உள்ளன. இதை முன்னிட்டு இங்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டது. மக்களின் போக்குவரத்தை இது இனி எளிதாக்கும்.
இன்னும் பல டோல்களை அகற்றுவது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். சூரப்பட்டு, பரனூர், சென்னசமுத்திரம், நெமிலி, வானகரம், சுங்கச் சாவடியை அகற்ற மத்திய அரசிடம் வலியுறுத்த உள்ளோம். இது தொடர்பாக ஏற்கனவே மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு தமிழ்நாடு அரசு சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
நாவலூர்: சென்னையில் பல்வேறு இடங்களில் மெட்ரோ பணிகள் நடக்கும் நிலையில் தற்போது நாவலூர் டோல் கேட்டை தற்காலிகமாக மூட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசும் இது தொடர்பான பரிசீலனையில் ஈடுப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இங்கே மெட்ரோ பணிகள் நடக்கிறது.
இதன் காரணமாக மக்கள் சாலைகளில் பயணம் செய்ய முடியவில்லை. இந்த சாலையில் வாகனங்கள் மிக மிக மெதுவாக செல்ல வேண்டிய நிலை உள்ளது. வாகனங்கள் இங்கே ஊர்ந்து செல்லும் போதும் கூட இங்கே டோல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில்தான் நாவலூர் டோல் கேட்டை தற்காலிகமாக மூட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசும் இது தொடர்பான பரிசீலனையில் ஈடுப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
சென்னை மெட்ரோ பணிகள்: சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. சென்னை மெட்ரோ 2ம் கட்ட பணிகளுக்கான ஒப்பந்தங்கள் அடுத்தடுத்து கையெழுத்தாகி வருகின்றன. அடுத்தடுத்து 3 நிறுவனங்களுடன் இதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
அந்த வகையில் சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2-ல் மாதவரம் பணிமனையில் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையம் அமைப்பதற்காக யுஆர்சி கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் நிறுவனத்திற்கு ரூ. 65.80 கோடி மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பு கடிதம் யுஆர்சி கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் நிறுவனத்திற்கு 08.06.2023 அன்று வழங்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications