Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீலாங்கரை வீட்டு மொட்டை மாடியில் தெரிந்த உருவம்.. உற்றுப் பார்த்து பதறிய விஜய்.. சென்னையில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக ஓட்டுக்கள் உடைந்து விஜய் பக்கம் பெரும்பாலும் தாவக்கூடும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.. அதற்கேற்றவாறு விஜய்யின் பிரச்சாரம், சுற்றுப்பயணங்கள் சூடுபிடித்துள்ளன. இதனால் தவெக தலைவர் விஜய் குறித்த பேச்சானது, அரசியல் கட்சிகளால் கவனிக்கப்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில் விஜய்யின் சென்னை வீட்டிற்குள்ளேயே ஒரு பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

விரைவில் தமிழகத்துக்கு தேர்தல் வரப்போகிறது.. இந்த முறை தவெக தேர்தலை சந்திக்க தயாராகி கொண்டிருக்கிறது.. முதல்முறையாக தேர்தலை விஜய் சந்திப்பதால், எதிர்பார்ப்புகள் அதிகமாகி வருகின்றன..

Chennai Neelankarai Vijay

ஓட்டுக்களை உடைக்கும் விஜய்

அதற்கேற்றபடி விஜய்யும், தன்னுடைய பிரச்சாரங்களை துவங்கியிருக்கிறார்.. விஜய் நடத்தும் மாநாடு, பிரச்சாரங்கள் என எதுவானாலும் அவை மற்ற அரசியல் கட்சிகளால் உற்று நோக்கப்பட்டு வருகின்றன.. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

அதேபோல விஜய் யாருடன் கூட்டணி வைக்க போகிறார்? என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.. மற்றொருபுறம், விஜய்யின் வருகையானது, சிறுபான்மையினர் ஓட்டுக்களை பிரதானமாக இழுக்கும் என்றும், இது திமுகவுக்கு கலக்கத்தை தந்துள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள். இதனால் விஜய் என்றாலே அவரை சுற்றின செய்திகளும், பரபரப்புகளும், சர்ச்சைகளும் மீடியாவில் வட்டமிடுவது இயல்பாகிவிட்டது.

நீலாங்கரை வீட்டு மொட்டை மாடி

இந்நிலையில் மீண்டும் ஒரு பரபரப்பு சம்பவம் விஜய் வீட்டிலேயே நடந்துள்ளது.. அதாவது, சென்னை நீலாங்கரை பங்களாவில் விஜய் வசித்து வருகிறார்.. நேற்று மாலை வீட்டின் மொட்டை மாடியில் விஜய் வாக்கிங் செல்ல வந்துள்ளார்.. அப்போது மொட்டை மாடியில் ஒரு இளைஞர் உட்கார்ந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

விஜய்யை பார்த்ததுமே அந்த இளைஞர் எகிறி குதித்து ஓடி வந்து கட்டிப்பிடித்து விட்டார்.. இதனால் ஒரு நிமிடம் பதறிய விஜய், தன்னுடைய ரசிகர் என்று தெரிந்து கொண்டு அவரை மெதுவாக வீட்டின் கீழே அழைத்து வந்துள்ளார்..

இதற்குள் விஜய்யின் வீட்டில் பாதுகாப்புப் பணியில் இருந்த செக்யூரிட்டிகள், உடனடியாக போலீசாருக்கு தகவல் தந்தனர்.. சிறிது நேரத்தில் அங்கு விரைந்து வந்த போலீசார், அங்கிருந்த இளைஞரை நீலாங்கரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்திருக்கிறார்கள்..

விஜய் வீட்டில் நுழைந்த மர்ம நபர்

அந்த இளைஞரின் பெயர் அருண்.. 24 வயதாகிறது.. கடந்த 4 வருடங்களாகவே மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறாராம்.. தற்போது வேளச்சேரியில் உள்ள சித்தி வீட்டில் தங்கியிருப்பதும், விஜய்யை பார்ப்பதற்காகவே தனியாக கிளம்பி, விஜய் வீட்டிற்குள்ளே நுழைந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

எனினும் இவர் எப்படி மொட்டை மாடிக்கு போனார் என்பது பலருக்கும் வியப்பை தந்துள்ளது.. விஜய் வீட்டிற்குள் நுழைந்து அதற்கு பிறகுதான் மொட்டை மாடிக்கு செல்ல வேண்டுமாம்..

அதுமட்டுமல்ல, விஜய்க்கு ஏற்கனவே மத்திய அரசு சார்பாக Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.. இதனால் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படியிருந்தும்கூட, அந்த நபர் எப்படி மொட்டை மாடிக்கு சென்றிருப்பார்? என்று பாதுகாப்பு போலீசாரும் குழம்பிவிட்டனர்.

எப்படி மொட்டை மாடிக்கு வந்தார்

பலத்த போலீஸ் பாதுகாப்பு ஒருபக்கம் இருந்தாலும், விஜய்யின் வீட்டை சுற்றிலும் கட்டப்பட்டுள்ள மதில் சுவர், கோட்டை போல உயர்ந்து காணப்படும்.. நுழைவாயிலின் கதவுகளே பல அடி உயரமாக இருக்கும்.. இவ்வளவு செக்யூரிட்டிகள், கட்டுப்பாடுகள் இருந்தும் இந்த இளைஞர் எப்படி மொட்டை மாடிக்கு சென்றிருப்பார் என்பதே அனைவரின் குழப்பமாக இருந்தது.

பிறகுதான், விஜய் வீட்டின் பின்புறம் பகுதியில் உள்ள கேட் வழியாக இளைஞர் உள்ளே நுழைந்திருப்பது தெரியவந்துள்ளது... இதில் ஹைலைட் என்னவென்றால், இவர் நேற்று முன்தினமே விஜய் வீட்டுக்கு வந்துவிட்டாராம்.. ஒருநாள் முழுக்க விஜய்யை பார்க்க, அவர் வீட்டு மொட்டை மாடியிலேயே தங்கியிருந்தாராம்.

மருத்துவமனையில் சிகிச்சை

நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மக்களை விஜய் நாளைய தினம் சந்திக்கவுள்ளார். இதற்கான பணிகளிலும் விஜய் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இப்படிப்பட்ட சூழலில் விஜய் வீட்டில்., இளைஞர் ஒருவர் நுழைந்த சம்பவம் பரபரப்பை தந்து வருகிறது.

இளைஞரின் நிலைமையை நேரில் கண்டு உணர்ந்த விஜய், இளைஞரை உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்க அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து. போலீசார், கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் இளைஞரை தற்போது ஒப்படைத்துள்ளனர்.. அங்கு இளைஞருக்கு சிகிச்சையும் நடந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+