'வாவ்' அறிவிப்பு.. பாஸ்போர்ட் பிரச்சினையா? இனி அப்பாயின்ட்மென்ட் இல்லாமலேயே அதிகாரியை சந்திக்கலாம்
சென்னை: புதிய பாஸ்போர்ட்டை பெறுவது, இருக்கும் பாஸ்போர்ட்டை புதுப்பிப்பது உள்ளிட்டவற்றில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், நேரடியாக சம்பந்தப்பட்ட அதிகாரியை சந்திக்கும் புதிய திட்டத்தை சென்னை பாஸ்போர்ட் அலுவலகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இவ்வாறு அதிகாரிகளை சந்திக்க எந்தவித அப்பாயின்ட்மெட்டையும், யாருடைய முன் அனுமதியையைும் பொதுமக்கள் பெற வேண்டியதில்லை என்பதுதான் இந்த திட்டத்தின் சிறப்பம்சம் ஆகும்.
'உங்கள் பாஸ்போர்ட் அதிகாரியை சந்திக்கவும்' என்ற பெயரிலான இந்த புதிய திட்டத்தால் பொதுமக்களின் அலைச்சல் குறைவதுடன், பாஸ்போர்ட் அலுவலர்களின் பணிச்சுமையும் குறையும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

'பாஸ்போர்ட்' அலைச்சல்
வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதுதான் பாஸ்போர்ட்டின் முக்கிய நோக்கம் என்றாலும், அதையும் தாண்டி முக்கிய அடையாள ஆவணமாகவும் அது பயன்படுவதை யாரும் மறுக்க முடியாது. ஒருகாலத்தில், பாஸ்போர்ட் வாங்குவது என்பது மிகவும் கடினமான காரியமாக இருந்தது. ஆனால், தற்போதைய ஆன்லைன் யுகத்தில் எளிதாகவே பாஸ்போர்ட் வாங்க முடிகிறது. ஆனால், பிறப்பு சான்றிதழில் இருக்கும் பெயர், தந்தை - தாய் பெயர் ஆகியவற்றில் சிறு முரண்பாடு இருந்தாலும் கூட அலைந்து திரிந்துதான் பாஸ்போர்ட்டை பெற வேண்டியுள்ளது.

புதிய திட்டம் அறிமுகம்
அதேபோல, பாஸ்போர்ட்டில் பெயரை மாற்றுவது, முகவரியை மாற்றுவது போன்ற திருத்தம் மேற்கொள்வதிலும் சில நடைமுறை சிக்கல்கள் நீடிக்கின்றன. மேலும், பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு நேரடியாக சென்றாலும் அங்கு கூட்டம் அதிகமாக இருப்பதால் 2, 3 நாட்கள் அலுவலகங்களுக்கு விடுமுறை எடுக்காமல் இந்த பிரச்சினையை நிவர்த்தி செய்வது முடியாத காரியமாக உள்ளது. மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் இந்த பிரச்சினையை கருத்தில்கொண்டு, வேற லெவல் திட்டத்தை சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது.

வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை..
'உங்கள் பாஸ்போர்ட் அதிகாரியை சந்திக்கவும்'(Meet your RPO) என்ற பெயரிலான இந்த திட்டத்தின் கீழ் சென்னை அண்ணாசாலை, எண். 158, ராயலா டவர்ஸ் என்ற முகவரியில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி கோவேந்தன் மற்றும் உயரதிகாரிகளை வாரம்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் நேரடியாக சந்தித்து குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

அப்பாயின்ட்மென்ட் தேவையில்லை
நண்பகல் 12 முதல் மதியம் 1 மணி வரை மேற்குறிப்பிட்ட அதிகாரிகளை பொதுமக்கள் சந்திக்கலாம். அதிகாரிகளை சந்திக்க எந்தவித அப்பாயின்ட்மென்ட்டையும் மக்கள் வாங்க தேவையில்லை. ஆனால், நேரில் செல்வதற்கு முன்பாக, பொதுமக்கள் 73053 30666 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு தங்கள் குறைகளை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கோவேந்தன் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications