சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கின்னஸ் உலக சாதனை: பெண்கள் பாதுகாப்புக்கு 24 மணி நேரம் கராத்தே பயிற்சி

பள்ளி, கல்லூரி மாணவர்கள் இணைந்து, 24 மணி நேரம் தொடர்ந்து நிகழ்த்திய கராத்தே தற்காப்புக்கலை நிகழ்வு உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தது.

Google Oneindia Tamil News

சென்னை: இன்றைக்கு பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி சென்னையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பங்கு பெற்ற 24 மணி நேர தொடர் கராத்தே நிகழ்ச்சி உலக சாதனை புத்தகத்தில் பதிவானது. நவம்பர் 29, வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குத் தொடங்கிய நிகழ்ச்சி, மறுநாள் 30.11.19 சனிக்கிழமை மாலை 5 மணி வரையிலும் தொடர்ந்து நடைபெற்றது. சென்னை அடையாறில் உள்ள கராத்தே பயிற்சி மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வை, பார்ன் டு ஃபைட் கராத்தே பயிற்சி மையம் ஏற்பாடு செய்திருந்தது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் இணைந்து, 24 மணி நேரம் தொடர்ந்து நிகழ்த்திய கராத்தே தற்காப்புக்கலை நிகழ்வு உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தது.

Chennai Students Create Guinness World Record

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், பெண்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு எதிரான குற்றச் செயல்களின் போது பாதுகாப்பாக இருக்க வேண்டியது மற்றும் தற்காப்புக் கலையின் அவசியத்தையும் வலியுறுத்தி இந்த நிகழ்வு நடைபெற்றது.

Chennai Students Create Guinness World Record

சென்னை அடையாறில் உள்ள கராத்தே பயிற்சி மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வை, பார்ன் டு ஃபைட் கராத்தே பயிற்சி மையம் ஏற்பாடு செய்திருந்தது. அந்த மையத்தின் பயிற்சியாளர் கராத்தே மாஸ்டர் ஐயப்பன் வழிகாட்டுதலில், 20 பேர் வீதமாகப் பிரிக்கப்பட்ட பல்வேறு குழுவினர், தொடர்ந்து கராத்தே தற்காப்புக் கலையைச் செய்து காட்டினர். 7 வயது முதல் 30 வயது வரையிலுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.

Chennai Students Create Guinness World Record

சட்டக்கல்லூரி, ஆடிட்டிங் உள்ளிட்ட பல்வேறு கலைப் பிரிவுகளில் பயிலும் மாணவர்களும், பெண்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு காரத்தே கலையை நிகழ்த்திக் காட்டினர். உலக அளவில் நடைபெற்ற கராத்தே போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களைப் பெற்ற மாணவ, மாணவியர்கள் பலரும் இதில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

Chennai Students Create Guinness World Record

உலக சாதனை மையத்தினரின் மேற்பார்வையில் நடைபெற்ற இந்நிகழ்வு, சோழன் உலக சாதனைப் பட்டியலில் இடம் பெற்றது. பின்னர், மாணவ, மாணவிகளுக்கு உலக சாதனை சான்றிதழ்களை அதன் நிர்வாகிகள் வழங்கினர்.

English summary
Chennai Students Create Guinness World Record
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X