சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புள்ளயே பொறக்கல.. அதுக்குள்ளயா.. எடப்பாடியாருக்கு வரிந்து கட்டி வந்த வேல்முருகன்.. பரபர தேனி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி என தேனியில் வைத்த கல்வெட்டால் பரபரப்பு ஏற்பட்டது

Google Oneindia Tamil News

சென்னை: தேனியில் ஒரு கல்வெட்டு வைத்திருக்கிறார்கள்.. நாளை மறுநாள் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்கும் பரபரப்பில் தமிழகம் உள்ள நிலையில், இந்த கல்வெட்டு சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூர் என்ற கிராமம் உள்ளது.. இங்கு சுயம்பு சனீஸ்வரர் கோவில் ஒன்று உள்ளது.. இதே இடத்தில் காசி ஸ்ரீ அன்னப்பூரணி கோவிலும் உள்ளது.. தனியார் ஒருவர் இதை நிர்வகித்து வருகிறார்..

Recommended Video

    தேனி: வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே வெற்றி என கல்வெட்டு: அ.தி.மு.க-வை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!

    இந்த கோவிலில்தான் ஒரு கல்வெட்டை வைத்துள்ளார்கள்.. அந்த கல்வெட்டை தேனி மக்கள் பலரும் திரண்டு வந்து பார்த்து போனார்கள்.. எல்லோருக்கும் நமுட்டுச் சிரிப்பு வந்து வந்து போனது.. விஷயம் கேள்விப்பட்டு போலீஸார் விரைந்து வந்தனர். தலையில் அடித்துக் கொண்டு அதை தூக்கி கொண்டு போய் விட்டனர். இதுதான் வைரலாகியுள்ளது. அப்படி என்ன இருந்தது அந்த கல்வெட்டில்?

    "ஆக ஆக".. இன்று "ஐயா ஸ்டாலின்".. சூப்பரா வாழ்த்து சொன்ன சீமான்.. கொடி கட்டி பறக்கும் நாகரீகம்

    சிறப்பு

    சிறப்பு

    "2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க மூன்றாவது முறையாக சிறப்பு மிக்க மகத்தான வெற்றிபெற்று தமிழ்நாடு முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமியும், துணைமுதல்வராக ஓ.பன்னீர்செல்வமும் பதவியேற்கும் நாள் 09.05.2021" என்று கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கிறது.

    ரிசல்ட்

    ரிசல்ட்

    காசி ஸ்ரீ அன்னப்பூரணி கோவிலில், கடந்த ஏப்ரல் 30ம் தேதியே இந்த கல்வெட்டை வைத்திருக்கிறார்கள்.. மே 2 தான் ரிசல்ட் என்றாலும், அதற்கு முன்பே "முதல்வர் எடப்பாடியார்" என்று பொறிக்கப்பட்டுவிட்டது.. இதுவரை தேர்தலுக்கு முன்பும் சரி, அதற்கு பின்பும் சரி, வெளிவந்த கருத்து கணிப்புகளில் அதிமுக வெற்றி பெறும் என்று ஒருத்தர் கூட சொல்லவே இல்லை..

    கலக்கம்

    கலக்கம்

    அவ்வளவு ஏன், அமைச்சர்களே தாங்கள் வெற்றி பெறுவோமோ இல்லையா என்று கலக்கத்தில் இருந்தனர்.. தங்கள் தொகுதியை விட்டு வேறு எங்குமே, யாருக்குமே பிரச்சாரம் செய்ய அவ்வளவாக போகவில்லை.. எடப்பாடியார் மட்டும்தான் தமிழகத்தில் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தார்.. அவர் மட்டும்தான் கடைசிவரை தைரியமாக இருந்தார்..

    முதல்வர்

    முதல்வர்

    அப்படி இருக்கும்போது, இப்படி கல்வெட்டை பொறிக்கும் அளவுக்கு, எதை வைத்து நம்பிக்கை வந்தது என்று தெரியவில்லை.. ஒரே ஒருநாள் கூட, தேர்தல் ரிசல்ட்டுக்கு பொறுத்திருக்க முடியாமல், 30ம் தேதியே கல்வெட்டை வைத்திருக்கிறார்கள்.. இப்போது ஸ்டாலின்தான் முதல்வராக போகிறார்.. இந்நிலையில், சின்னமனூர் போலீசார் விரைந்து வந்து கோயிலில் இருந்த கல்வெட்டை எடுத்து சென்றுள்ளனர்.

    பரபரப்பு

    பரபரப்பு

    இந்த கோவிலை பொறுத்தவரை கல்வெட்டு வைப்பதில் ரொம்ப ஃபேமஸ் ஆன கோயிலாம்.. இந்த கோவிலை வேல்முருகன் என்பவர் கவனித்து வருகிறார்,.. இவர் போலீசில் தலைமைக் காவலராக வேலை பார்த்தவர்.. அதிமுக விசுவாசி.. ஜெயலலிதா மீது அளவுகடந்த மரியாதை கொண்டவர்.. ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சீரியஸாக இருந்தபோது, மொட்டை அடித்து பரபரப்பை ஏற்படுத்தினாரே, அந்த வேல்முருகன் இவர்தான்.

    யூனிபார்ம்

    யூனிபார்ம்

    ஒருமுறை ஜெயலலிதாவை ஈவிகேஎஸ் இளங்கோவன் தரக்குறைவாக விமர்சித்தபோது, பொங்கி எழுந்துவிட்டார் வேல்முருகன்.. யூனிபார்மிலேயே நடுரோட்டில் உட்கார்ந்து போராட்டம் நடத்தினார்... இப்படி ஜெயலலிதாவுக்கு ஒன்று என்றால் துடிதுடித்து போகும் அளவுக்கு விசுவாசி இவர்.. ஆனால், தொடர்ந்து அதிமுகவுக்கு ஆதரவாகவே போராட்டம் நடத்தி கொண்டிருந்ததால், வேல்முருகனுக்கு விஆர்எஸ் தந்து வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள்.. அதற்கு பிறகுதான் குச்சனூரில் காசி ஸ்ரீ அன்னப்பூரணி கோவிலை நிர்வகித்து வந்துள்ளார்.

    வேல்முருகன்

    வேல்முருகன்

    கடந்த எம்பி தேர்தலின்போதுகூட, இப்படித்தான் நடந்தது.. ரிசல்ட் வருவதற்கு முன்பேயே அதே தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமாரை "எம்பி" என்று குறிப்பிட்டு கல்வெட்டு வைத்தது கூட இதே வேல்முருகன்தான்.. இது தொடர்பாக வேல்முருகன் மீது கேஸ் போடப்பட்டது.. அதுபோலவே இப்போதும் ஒரு கல்வெட்டை வைத்துள்ளார்.. ஓபிஆர் எம்பி ஆகிவிட்டார் பரவாயில்லை.. இப்போது முதல்வர் ஆகாமலேயே எடப்பாடி பழனிசாமிக்கு கல்வெட்டை வைத்த வேல்முருகனை என்னவென்று சொல்வது?!

    English summary
    hief Minister Edapadi Palanisamy inauguration day May 9th, inscription in Theni
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X