Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கறுப்பு சிவப்பு மார்டன் டிரஸ்.. துபாய்க்கு ஸ்டைலாக கிளம்பிய முதல்வர் ஸ்டாலின்.. ஸ்டைலே மாறிப்போச்சே

முதல்வர் மு.க ஸ்டாலின் கறுப்பு சிவப்பு உடையில் ஸ்டைலாக துபாய்க்கு கிளம்பினார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெள்ளை வேஷ்டி சட்டையில் அதிக நேரம் காணப்படும் முதல்வர் மு.க ஸ்டாலின் தனது துபாய் பயணத்தின் போது ஸ்டைலான மாடர்ன் உடையில் துபாய்க்கு கிளம்பியது அமைச்சர்கள் அனைவரையும் கவர்ந்தது.

Recommended Video

    Dubai Expo-வில் CM MK Stalin | MK Stalin In Dubai| Oneindia Tamil

    தமிழக முதலர் மு.க. ஸ்டாலின், இன்று அரசுமுறை பயணமாக துபாய் சென்றுள்ளார். முதல்வரின் இந்த பயணம் தமிழகத்துக்கு அதிகப்படியான முதலீடுகளை ஈர்க்க வழிவகுக்கும் என நம்பப்படுகின்றது.

    2021 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி துபாயில் உலக எக்ஸ்போ கண்காட்சி தொடங்கியது. இது இந்த மாதம், அதாவது மார்ச் 31 வரை நடக்கவுள்ளது.

    மு.க ஸ்டாலின் துபாய் பயணம்

    மு.க ஸ்டாலின் துபாய் பயணம்

    தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில், துபாயின் இந்த கண்காட்சியில் மார்ச் 25 முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, துபாய் உலக எக்ஸ்போ கண்காட்சியில் தமிழ்நாடு வார நிகழ்வுகளை துவக்கிவைத்து, தமிழ்நாடு அரங்கினை திறந்து வைப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துபாய் சென்றுள்ளார்.

    கண்காட்சியில் தமிழக அரங்குகள்

    கண்காட்சியில் தமிழக அரங்குகள்

    முதல்வரின் துபாய் பயணம் தொடர்பாக தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் கண்காட்சியில் மார்ச் 25 அன்று தமிழ்நாடு அரங்கை திறந்து வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாயின் இந்த கண்காட்சி அரங்கில் கலை, கலாசாரம், கைத்தறி, கைவினைப் பொருட்கள், தொழில்துறை, மருத்துவம், சுற்றுலா, ஜவுளி, தமிழ் வளர்ச்சி, தகவல், தொழில் பூங்காக்கள், உணவுப் பதப்படுத்துதல் என முக்கிய துறைகளில் தமிழகத்தின் சிறப்பை உலகிற்கு எடுத்து காட்டும் வகையில் காட்சிப்படங்கள் திரையிடப்படும்.

     192 நாடுகள்

    192 நாடுகள்

    இந்த கண்காட்சியில் சுமார் 192 நாடுகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு நாட்டிற்கு பிரத்யேக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. துபாய் கண்காட்சியில் தமிழக அரங்கு அமைக்கப்படுவதன் மூலம், பல உலக முதலீட்டாளர்கள் தமிழக தொழில்துறை பற்றியும் இங்குள்ள தனித்துவமான பல அம்சங்கள் பற்றியும் தெரிந்துகொள்ள நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     மாடர்ன் உடையில் பயணித்த ஸ்டாலின்

    மாடர்ன் உடையில் பயணித்த ஸ்டாலின்

    பொதுவாகவே முதல்வர் மு.க ஸ்டாலின் அதிக நேரங்களில் வெள்ளை வேஷ்டி சட்டையில்தான் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பார். வார இறுதி நாட்களில் சைக்கிளிங் செல்லும் போது அதற்கேற்ப பிரத்யேக உடைகளை அணிவார். இன்றைய தினம் துபாய் கிளம்பும் போது சிவப்பு நிற சட்டை கறுப்பு நிற பேண்ட் அணிந்திருந்தார் கூடவே கறுப்பு நிறத்தில் வெள்ளை நிற கோடுகள் போட்ட ஸ்டைலான கோட் அணிந்திருந்தது அனைவரையும் கவர்ந்தது. இதுநாள் வரைக்கும் இப்படி மாடர்ன் உடையை முதல்வர் ஸ்டாலின் அணிந்து பொது வெளியில் பார்த்ததில்லை என்பதால் அமைச்சர்கள் அனைவரும் ஆச்சரியமடைந்தனர். துபாய் புறப்பட்ட முதல்வரை வேஷ்டி, பொன்னாடை கொடுத்து அமைச்சர்களும், எம்பிக்களும் வழியனுப்பி வைத்தனர்.

    கோட் சூட்

    கோட் சூட்

    பொதுவாக வெளிநாடு செல்லும் தமிழக அரசியல் தலைவர்கள் அங்கு சென்றால் கோட் சூட் அணிந்து விழாக்களில் பங்கேற்பார்கள். தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையில் சில நேரங்களில் காட்சி அளிப்பார்கள். நம்முடைய முதல்வர் மு.க ஸ்டாலின் கண்காட்சி திறப்பு விழாவில் கோட் சூட் அணியப்போகிறாரா, மாடர்ன் உடையா? அல்லது பாரம்பரிய வேஷ்டி சட்டை அணியப்போகிறாரா பார்க்கலாம்.

    அபுதாபிக்குப் பயணம்

    அபுதாபிக்குப் பயணம்

    தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் துபாய் தவிர அபுதாபிக்கும் செல்லவுள்ளார். மேலும், இரு இடங்களிலும், தொழில்துறை சார்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள், தொழிலதிபர்களையும் முதல்வர் சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கபடுகின்றது. முதல்வரின் இந்த பயணம் தமிழகத்துக்கு அதிகப்படியான முதலீடுகளை ஈர்க்க வழிவகுக்கும் என நம்பப்படுகின்றது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+