சிறந்த ஆட்சி.. ஜனநாயக பண்பு, பெருந்தன்மை கொண்டவர் முதல்வர் ஸ்டாலின்.. சபாநாயகர் அப்பாவு பாராட்டு
சென்னை: ‛‛முதல்வர் ஸ்டாலின் ஜனநாயக பண்பு, பெருந்தன்மை கொண்டவர் என்பதால் சபை அமைதியாக நடக்கிறது. மேலும் தமிழகத்தில் மக்கள் அமைதியாகவும், நல்லிணக்கத்தோடும் வாழ்கிறார்கள் என சொல்லும் அளவுக்கு சிறப்பான ஆட்சி உள்ளது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி'' என சபாநாயகர் அப்பாவு பாராட்டு தெரிவித்தார்.
Recommended Video
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைத்து ஒரு ஆண்டு முடிவடைந்துள்ளது. இதுபற்றி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
இந்த வரிசையில் தமிழக அரசின் ஓராண்டு ஆட்சி குறித்து சபாநாயகர் அப்பாவு பாராட்டியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:

முதல்வரின் பெருந்தன்மை
‛‛கடந்த ஓராண்டு காலமாக இந்த சட்டசபை கூட்டத்தொடரில் முதல்வர் ஒருபோதும் என்அரசு, எனது அரசு எனக்கூறாமல் நமது அரசு என்று தான் சொல்கிறார். இதன்மூலம் சட்டசபை எவ்வாறு நடந்து இருக்கும் என எண்ணிப்பாருங்கள். ஜனநாயகத்தோடும், நாகரீகத்தோடும் சபை நடைபெறுகிறது என்றால் அதற்கு முதல்வரின் பெருந்தன்மை, ஜனநாயக பண்பு தான் எடுத்துக்காட்டாக உள்ளது. இந்தியாவின் தலைசிறந்த முதல்வர் ஸ்டாலின் என கூறப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் மக்கள் அமைதியாகவும், நல்லிணக்கத்தோடு வாழ்வதன் மூலம் ஆட்சி சிறப்பாக உள்ளது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி'' என்றார்.

ஜனநாயக ஆட்சி
துணை சபாநாயகர் கு பிச்சாண்டி கூறுகையில், ‛‛தமிழகத்தில் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற ஓராண்டு காலத்தில் தமிழக சட்டசபை புதிய முக்கியமான சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. சட்டசபை மாண்போடு நடைபெறுகிறது. ஓராண்டு காலத்தில் சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. கேள்விகளாக இருந்தாலும் கூட எதிர்க்கட்சிகள் கேட்பதற்கு சபாநாயகர், முதல்வர் அதிகளவு முக்கியத்துவம் கொடுத்தனர். சட்டசபை ஜனநாயக முறையில் நடக்கிறது. இதுதான் ஜனநாயக ஆட்சி. திராவிட மாடல் ஆட்சி என கூறினார்.

ஜனநாயகம் பூத்துகுலுங்குகிறது
தமிழ்நாடு சட்டசபை கொறடா கோவி செழியன் கூறுகையில், ‛‛கருணாநிதியின் ஆட்சி நீதிக்கட்சியின் நீட்சியாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. சட்டசபையில் ஜனநாயக மாண்புகளை காப்பாற்றியதில் இந்தியாவின் முதல் மாநிலமாக இருப்பது நமது தமிழ்நாடு. கடந்தகால ஆட்சியை போல் இல்லாமல் சர்வாதிகாரம் செய்யாமல் ஜனநாயக அடிப்படையில் சட்டசபை உறுப்பினர்கள் செயல்பட முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். மாற்று கட்சியினர் புண்படுத்தி பேசும்போது கூட அமைதியுடன் ஜனநாயகம் காக்க அறிவுறுத்தி உள்ளார். கடந்தகாலம் எதிர்கட்சி வரிசையில் நாங்கள் அமர்ந்திருந்தபோது அணுபவித்த கொடுமைகள், சர்வாதிகார ஜனநாயக படுகொலைகளை கடந்து ஜனநாயகம் பூத்துக்குலுங்கும் இடமாக சட்டசபை உள்ளது. இப்படி அனைத்து தரப்பு மக்களும் பாராட்டும் ஆட்சித்தான் திராவிட மாடல் ஆட்சியாக உள்ளது'' என்றார்.

எதிர்க்கட்சிகள் விமர்சனம்
இதற்கிடையே எதிர்கட்சி தலைவர்களும் திமுகவின் ஓராண்டு ஆட்சி குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அதிமுகவின் முன்னாள் முதல்வர்களான ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்பட பலர் திமுக அரசை விமர்சனம் செய்து வருகின்றனர். அதேநேரத்தில் திமுகவின் கூட்டணி கட்சியினர் ஓராண்டு ஆட்சிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
-
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications