Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நகரப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நல்ல தகவல்! நில ஆவணங்களை பெறுவதில் இனி சிரமம் இருக்காது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் நில ஆவணங்களை பெறவும், நகர நிலவரித்திட்ட பணியினை குறைந்த காலத்திற்குள் முடித்திடவும் ஏதுவாக புதிய மென்பொருளை (New Software Application) முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

இதன் மூலம் நகரப்பகுதிகளில் வசிக்கும் குடிமக்களுக்கு நிலம் தொடர்பான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள, மேம்படுத்தப்பட்ட நில ஆவணங்கள் இணைய தளம் மூலமாக விரைவில் கிடைத்திட இது வழிவகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பான விவரம் வருமாறு;

நில ஆவணங்கள்

நில ஆவணங்கள்

வருவாய் கிராமங்கள் நகரமயமாதலுக்குப் பின்னர் நகர்ப்புற தன்மையை அடைவதைத் தொடர்ந்து நகரளவைப் பணி மேற்கொள்ளப்படும். நகரளவைப் பணியின் போது வருவாய் ஆவணங்கள் நகர நிலஅளவை பதிவேடுகளாக மாற்றம் செய்யப்பட்டு, புல எண்கள் வார்டு மற்றும் பிளாக்குகளாக பிரிக்கப்பட்டு, புதிய நகர நிலஅளவை எண்கள் உருவாக்கப்படுகின்றன. அதே நேரத்தில், மேற்படி புலங்களின் உடைமைதாரர்களின் உரிமை ஆவணங்கள் மற்றும் பயன்பாட்டின் அடிப்படையில் புலங்களின் உரிமை குறித்த நில ஆவணங்கள் மேம்படுத்தப்படுகின்றன.

புதிய மென்பொருள்

புதிய மென்பொருள்

இப்பணியானது 2007-ல் துவக்கப்பட்டு மாநிலத்திலுள்ள பல்வேறு நகராட்சிகள், மாநகராட்சிகளில் 15 வருடங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணி மிகுந்த காலதாமதம் ஆவதன் காரணமாக குடிமக்களுக்கு மேம்படுத்தப்பட்ட நில ஆவணங்களை பெறுவதில் சிரமத்தை அளித்து வந்த நிலையில், மேற்படி வருவாய் பின்தொடர் பணி, நகரநிலவரித்திட்ட பணியினை குறைந்த காலத்திற்குள் முடித்திட ஏதுவாக தேசிய தகவலியல் மையம் (National Informatics Centre) வாயிலாக தயாரிக்கப்பட்ட புதிய மென்பொருளை (New Software Application) முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

நிலஅளவை

நிலஅளவை

இப்புதிய மென்பொருளின் பயனாக, வருவாய் பின்தொடர் பணியில் கைமுறை செயலாக்கம் (Manual processing) மூலம் செயல்படுத்தப்பட்டு வந்த விசாரணை அறிவிப்பு தயார் செய்வதிலிருந்து இறுதி அசல் ஆவணங்கள் தயாரித்தல் வரையிலான பணிகள் மற்றும் சிட்டா நகல் தயாரித்தல் ஆகிய படி நிலைகள் கணினிமயமாக்கப்பட்டு பணிகளை விரைவில் முடித்திட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், படி நிலைகள் கணினிமயமாக்கப்படுவதால் நிலவரித்திட்ட பணியாளர்களின் பணி சுமைகள் குறைக்கப்படுவதோடு, இந்த மென்பொருள் மூலம் தயார் செய்யப்படும் இறுதி ஆவணங்கள் வெளிப்படைத்தன்மை மற்றும் துல்லியம் கொண்டதாக அமைவதுடன், நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநரகத்திலிருந்தே இப்பணிகளை நேரடியாக கண்காணிக்க வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நல்வாய்ப்பு

நல்வாய்ப்பு

தற்போது வருவாய் பின்தொடர் பணி நடைபெற்று கொண்டிருக்கும் 9 மாநகராட்சிகள் மற்றும் 36 நகராட்சிகளின் நகர நிலவரித்திட்ட அலகுகளில் மேற்படி மென்பொருள் நிறுவப்படும். இதன்மூலம் நகரப்பகுதிகளில் வசிக்கும் குடிமக்களுக்கு நிலம் தொடர்பான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள மேம்படுத்தப்பட்ட நில ஆவணங்கள் இணைய தளம் மூலமாக விரைவில் கிடைத்திட பெரிய அளவில் ஒரு நல்வாய்ப்பாக அமைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+