தேவையா? பாகிஸ்தானுக்கு உதவ போய்.. வசமாக சிக்கிக்கொண்ட சீனா! இந்தியாவிடம் வசமாக மாட்டிக்கிட்டாங்களே
டெல்லி: சீனாவின் PL-15E ஏவுகணைகளை இந்தியாவுடனான போரின் போது பாகிஸ்தான் பயன்படுத்தியது. இதன் காரணமாக இப்போது சீனா கடுமையான சிக்கலில் உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த மே 10ம் தேதி நிறைவு பெற்ற இந்தியா பாகிஸ்தான் இடையிலான மோதலின் போது சீனா பாகிஸ்தானுக்கு வான் பாதுகாப்பு மற்றும் செயற்கைக்கோள் உதவிகளை வழங்கியதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஆராய்ச்சி தெரிவித்துள்ளது. இந்தியா முன்னர் கருதியதை விட கூடுதலாக சீனா இந்த மோதலில் நேரடியாக ஈடுபட்டுள்ளது என்று அவர்களின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவின் துருப்புக்கள் மற்றும் ஆயுதங்கள் எங்கே உள்ளன, போர் விமானங்கள் எந்த ஹேங்கரில் உள்ளன என்பது உள்ளிட்ட பல விஷயங்களை திறம்பட கண்டறிய சீனா தனது ரேடார் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை பாகிஸ்தானுக்கு வழங்கி உதவியது என்று இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கூட்டுப் போர் ஆய்வு மையத்தின் இயக்குநர் ஜெனரல் அசோக் குமார் தெரிவித்துள்ளார்.

சீனா ஏவுகணை
இந்த போரில் சீனாவின் பல ஏவுகணைகளை பாகிஸ்தான் பயன்படுத்தியது. அதிலும் சீனாவின் அதிநவீன ஏவுகணைகள் என்று அழைக்கப்படும் PL-15E ஏவுகணைகளை பாகிஸ்தான் பயன்படுத்தியது. இந்தியாவின் எல்லையில் பல இடங்களில் இந்த ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டன. எஸ்.400 உள்ளிட்ட ஏவுகணை தடுப்பு அமைப்புகள் மூலம் இந்த ஏவுகணை தடுத்து நிறுத்தப்பட்டது.
இதன் காரணமாக இப்போது சீனா கடுமையான சிக்கலில் உள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால் இந்த ஏவுகணையின் பாகங்கள் இந்தியாவில் விழுந்துள்ளதால் அதை இந்தியா ஆய்வு செய்ய முடியும். சீனாவின் நவீன ஏவுகணை எப்படி உருவாக்கப்பட்டது என்று இந்தியா ஆய்வு செய்ய முடியும். அதோடு ரிவர்ஸ் எஞ்சினியரிங்கும் செய்ய முடியும்.
மிக முக்கியமான ஏவுகணையின் தொழில்நுட்பம் இந்தியாவிடம் சிக்கும் சூழல் உள்ளதால் சீனா கடும் கோபத்தில், அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் இந்த ஏவுகணைகளை பயன்படுத்திய விதத்தை சீனா விரும்பவில்லை என்பதாலும், அதன் தொழில்நுட்பம் இந்தியாவிடம் சிக்கும் சூழல் உள்ளதாலும் சீனா கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
சீனாவின் தலையீடு
இந்தியா பாகிஸ்தான் போரில் எதிர்பார்த்ததை விட அதிகமாக சீனா தலையிட்டு இருக்கலாம் என்று இந்திய ராணுவம் சந்தேகிப்பதாக தகவல்கள் வருகின்றன.
ராணுவத்திடம் சீனாவின் ஜே ரக போர் விமானங்கள், PL-15 வகை ஏவுகணைகள் என்று பல உள்ளன. பாகிஸ்தானின் 80 சதவிகித போர் உபகரணங்கள் சீனாவிடம் இருந்து வாங்கப்பட்டது. இதெல்லாம் இந்திய ராணுவத்திற்கு தெரிந்ததுதான்.
இதில் அதிர்ச்சி தரும் தகவல் இந்தியா பாகிஸ்தான் போரில் Chinese PL-15 வகை ஏவுகணைகளை சீனர்களே இயக்கியதாக கூறப்படுகிறது. அதாவது சீனாவில் இருந்து வரவழைக்கப்பட்ட டெக்னீஷியன்களை களமிறக்கி பணிகளை செய்துள்ளனர். அதாவது இந்தியாவிற்கு எதிராக ஏவப்பட்ட ஏவுகணைகளை பாகிஸ்தானில் இருந்து இயக்கியது சீனர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா மீது தாக்குதல் நடத்த சீனாவின் சாட்டிலைட் இமேஜ்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்றும் இந்திய ராணுவம் சந்தேகிக்கிறது. அதேபோல் சீனா சார்பாக பாகிஸ்தானுக்கு நிறைய உளவு தகவல்கள் அனுப்பப்பட்டு இருக்கலாம் என்று இந்திய ராணுவம் சந்தேகிக்கிறது. அதாவது சீனா ஆயுதங்களை அனுப்பி, அதை இயக்க சாட்டிலைட்டை இமேஜ்களை அனுப்பி.. அதை சரியாக பயன்படுத்த உளவு தகவல்களை அனுப்பி கூடுதலாக இயக்க ஆட்களையும் அனுப்பியதாக புகார்கள் வைக்கப்படுகின்றன.
அதாவது இந்தியா பாகிஸ்தான் போரில் எதிர்பார்த்ததை விட ஆழமாக சீனா தலையிட்டு இருக்கலாம் என்று இந்திய ராணுவம் சந்தேகிப்பதாக தகவல்கள் வருகின்றன. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இந்த போரை வைத்து சீனா போர் பயிற்சி மேற்கொண்டதாக தகவல்கள் வருகின்றன.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications