சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதுதான் ஊரே பார்த்துச்சே.. வீடியோ ஆதாரம் இருக்கே.. இடமாற்றம் வெகுமதியா.. டாக்டர் ராமதாஸ் கேள்வி

சின்ன சேலம் இன்ஸ்பெக்டர் விவகாரம் குறித்து ராமதாஸ் ட்வீட் பதிவிட்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "குடிபோதையில் ஊரே வேடிக்கை பார்த்துச்சே.. வீடியோ ஆதாரம் இருந்தும் வீடு புகுந்து தாக்கிய பாமக நிர்வாகியை தாக்கிய இன்ஸ்பெக்டர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது.. 4 நாட்கள் ஆயுதப்படையில் இருந்த சுதாகருக்கு இப்போது அடுத்த வெகுமதியாக பெண்ணாடம் காவல்நிலைய ஆய்வாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாரே.. மனித உரிமை மீறல் குற்றவாளிக்கு இப்படி மகுடம் சூட்டப்படுவதற்கு உபயதாரர் யார்?" என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கொதித்து போய் கண்டன ட்வீட்களை பதிவிட்டுள்ளார்.

Recommended Video

    குடி போதையில் பாமக நிர்வாகியை தாக்கிய சின்ன சேலம் காவல் ஆய்வாளர் சுதாகர் - வீடியோ

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் டூவீலரை பறிமுதல் செய்ததுடன், அவைகளை விடுவிக்க லஞ்சம் வாங்கி உள்ளார் இன்ஸ்பெக்டர் சுதாகர்.. இப்படி லஞ்சம் வாங்குவதை மூங்கில்பாடி கிராமத்தைச் சேர்ந்த பாமக நிர்வாகி சக்திவேல், வீடியோ எடுத்து அதை சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டிருந்தார்.

    அந்த ஆத்திரத்தில், சின்ன சேலம் இன்ஸ்பெக்டர் சுதாகர், ராத்திரி 12 மணிக்கு குடிபோதையில் சக்திவேல் வீட்டுக்குள் புகுந்து அவரது சட்டையை கொத்தாக பிடித்து வெளியே இழுத்து கொண்டு வந்து சரமாரி தாக்கினார்.. வீடு புகுந்து அடிப்பதற்கு முன்பேயே டிரான்ஸ்பார்மரை ஆப் செய்ததாகவும் கூறப்படுகிறது

    இன்ஸ்பெக்டர்

    இன்ஸ்பெக்டர்

    போதையில் கொடூரமாக இன்ஸ்பெக்டர் தாக்கியதை சக்திவேல் நண்பர்கள் வீடியோ எடுத்து அதையும் சோஷியல் மீடியாவில் பதிவிட்டனர்.. இது பாமக தரப்பை மட்டுமல்லாமல் அனைவருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. இந்த வீடியோ பாமக நிறுவனர் ராமதாஸ் பார்வைக்கும் சென்றது.. உடனடியாக தனது எதிர்ப்பை பதிவு செய்து, சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், சுதாகரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

    மனித உரிமை மீறல்

    மனித உரிமை மீறல்

    இந்நிலையில், 4 நாட்கள் ஆயுதப்படையில் இருந்த சுதாகர், தற்போது கடலூர் மாவட்டம் பெண்ணாடம் காவல்நிலைய ஆய்வாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.. இதற்கு டாக்டர் ராமதாஸ் கொந்தளித்துவிட்டார்.. மனித உரிமை மீறல் குற்றவாளிக்கு இப்படி மகுடம் சூட்டப்படுவதற்கு உபயதாரர் யார்?, வீடியோ ஆதாரம் இருந்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? சக்திவேலை குடிபோதையில் ஊரே வேடிக்கை பார்த்துச்சே.. இதுதான் வெகுமதியா? என்றெல்லாம் கேட்டு 3 ட்வீட்களை அடுக்கடுக்காக பதிவிட்டுள்ளார்.

    மகுடம்

    அவை இதுதான்: "4 நாட்கள் ஆயுதப்படையில் இருந்த சுதாகருக்கு இப்போது அடுத்த வெகுமதியாக கடலூர் மாவட்டம் பெண்ணாடம் காவல்நிலைய ஆய்வாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மனித உரிமை மீறல் குற்றவாளிக்கு இப்படி மகுடம் சூட்டப்படுவதற்கு உபயதாரர் யார்?"

    விசாரணை

    விசாரணை

    "ஆய்வாளர் சுதாகர் மனித உரிமை மீறலுக்காக தண்டிக்கப்பட்டவர். அவர் மீது மேலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரது கடந்த கால பின்னணி மிக மிக மோசமானது. அவர் மீதான புகாருக்கு விசாரணையின்றியே தண்டிக்க முடியும். ஆனால், வீடியோ ஆதாரம் வெளியாகியும் நடவடிக்கை இல்லை."

    வெகுமதி

    வெகுமதி

    "வெகுமதி... சின்னசேலம் பா.ம.க. ஒன்றிய செயலர் சக்திவேலை குடி போதையில், ஊரே வேடிக்கை பார்த்த நிலையில் வீடு புகுந்து தாக்கிய காவல் ஆய்வாளர் சுதாகர் முதலில் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு அனைத்து மரியாதையுடன் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமரவைக்கப்பட்டார்." என்று காட்டமாக ட்வீட்களை பதிவிட்டுள்ளார்.

    கமெண்ட்கள்

    கமெண்ட்கள்

    இதை பார்த்து ட்விட்டர்வாசிகளும் கொந்தளித்து உள்ளனர்.. "நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் ஐயா.. இதுபோன்ற அதிகாரிகளின் கடந்தகால நடவடிக்கைகளை ஆய்வு செய்தால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும். ஆளும் கட்சிக்கும் எதிர்க் கட்சிக்கும் கூஜா தூக்கி பொது மக்களையும் நீதியையும் அளிக்க வந்த அரக்கர்கள்" என்றும் "அய்யா பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" டாக்டர் ராமதாசுக்கு யோசனையும், கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

    English summary
    chinna salem inspector attacked pmk cadre issue case
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X