இவங்க எங்களுக்கு வேணாம் தலைவரே! ஒன்றிய செயலாளர்களுக்கு எதிராக பறந்த புகார்! திமுக புது பஞ்சாயத்து?
சென்னை : திமுக உட்கட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் எதிர்பார்த்த அளவு பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லை என கூறும் உடன்பிறப்புகள், நன்றாக செயல்படாத ஒன்றிய செயலாளர்களுக்கு மீண்டும் பொறுப்பு வழங்கியுள்ளது பெருத்த பின்னடைவாக அமைந்துள்ளதாகவும், சில ஒன்றிய செயலாளர்களை மாற்றக்கோரி தலைமைக்கு புகார் கடிதங்கள் பறந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பத்து ஆண்டுகள் தொடர்ந்து அதிமுக தமிழகத்தில் ஆட்சியில் இருந்த நிலையில், பல கட்ட போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் என நீண்ட கடுமையான உழைப்புக்குப் பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்துள்ளது.
இந்நிலையில் திமுகவின் உட்கட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு மாநகரம், நகரம், ஒன்றியம், பேரூர், ஊராட்சி அளவிலான நிர்வாகிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.

திமுக உட்கட்சி தேர்தல்
எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றாக இணைந்து செயல்பட்ட மாவட்ட செயலாளர்கள் ஒன்றிய செயலாளர் தரப்புக்கு இடையே தற்போது ஆளும் கட்சி ஆனதற்கு பிறகு மோதல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு சில மாவட்டங்களில் அனைத்து நிர்வாகிகளும் ஒன்றாக இருந்தாலும். திருச்சி, ராமநாதபுரம், தஞ்சாவூர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் மோதல் போக்கு நிர்வாகிகளிடையே நிலவி வருகிறது. ஒரு சில இடங்களில் ஏற்கனவே இருக்கும் நிர்வாகிகளுக்கு மீண்டும் பதவி வழங்கியுள்ளதாகவும் சிலரிடம் பணம் பெற்றுக் கொண்டு பதவி வழங்குவதாக புகார்கள் கிளம்பியுள்ளன.

இராமநாதபுரம் மோதல்
குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் காதர் பாஷா முத்துராமலிங்கம் மற்றும் அமைச்சர் ராஜகண்ணப்பன் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. அமைச்சர் பரிந்துரைக்கும் நபர்களை பதவியில் அமர்த்தாமல் மாவட்ட செயலாளரும் மாவட்ட செயலாளர் அளித்த பட்டியலை தலைமைக்கு அனுப்பாமல் அமைச்சரும் தாமதம் காட்டி வருவதாக புகார் அளித்துள்ளது. இதனால் திமுகவில் தங்களுக்கு பதவி கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்த பெரும்பாலான நிர்வாகிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

திருச்சியில் மனக்கசப்பு
இதேபோல தமிழகத்தின் முக்கிய மற்றும் மத்திய மாவட்டமான திருச்சியிலும் இதே நிலைமைதான் தொடர்கிறது என்கின்றனர் திமுக உடன் பிறப்புகள். தற்போது மாநில பொறுப்பில் இருந்தாலும் தனது மாவட்டம் என்பதால் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என விரும்பும் அமைச்சர் கே.என்.நேருவுக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஒன்றிய கழகங்கள் நகர கழகங்களை தங்களது ஆதரவாளர்களுக்கே பதவி வழங்க வேண்டும் என இரு தரப்பினரும் மாறி மாறி தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருவதால் தலைமை என்ன செய்வது என்று குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது.

தேனி தங்கத் தமிழ்செல்வன்
அடுத்ததாக தேனி மாவட்டத்தில் அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து தற்போது திமுகவில் இணைந்திருக்கும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்கத் தமிழ்செல்வனுக்கு எதிராக திமுகவினர் கொதித்து எழுந்து உள்ளனர். மாவட்ட செயலாளராக இருக்கும் தங்க தமிழ்ச்செல்வனை சொந்த கட்சியினரை புறக்கணித்து வருவதாக கூறப்படுகிறது. நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல்களில் தனக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு சீட்டு வழங்கியதோடு திமுக கூட்டணி வேட்பாளர் எதிர்த்து போட்டி வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி வைத்ததுதான் காரணம் எனக் கூறுகின்றனர். அரசு நிகழ்ச்சிகளில் கூட தங்க தமிழ்ச்செல்வனுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என கூறப்படும் நிலையில் இதனால் தங்க தமிழ்ச்செல்வன் அதிருப்தியில் இருப்பதாகவும், இதே போல தேனி வடக்கு மாவட்ட செயலாளரான கம்பம் ராமகிருஷ்ணனுக்கு எதிராகவும் புகார்கள் பறந்துள்ளன.

திண்டுக்கல்
தற்போதைய சூழலில் ஓரளவு பிரச்சனை இல்லாத தென்மாவட்டம் என்றால் அது திண்டுக்கல் தான் கிழக்கு மேற்கு என இரு அமைப்பு மாவட்டங்களாக திண்டுக்கல் பிரிக்கப்பட்டு மேற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் சக்கரபாணியும் கிழக்கு மாவட்ட செயலாளராக ஐ.பெரியசாமியின் மகன் செந்தில்குமாரும் இருக்கின்றனர். இருந்தபோதிலும் நிர்வாகிகள் நியமனம் வேட்பாளர் தேர்வு என அனைத்திலும் அமைச்சர் ஐ பெரியசாமியே ஆதிக்கம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே இருக்கும் ஒன்றிய செயலாளர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஐ.பெரியசாமி
மகளிர் அணி, இளைஞரணி, இலக்கிய அணி உள்ளிட்ட சார்பு அணி நிர்வாகிகளுக்கு மட்டும் புதிய நிர்வாகிகள் நியமனம் இருக்கும் நிலையில் மாவட்டத்தின் தலைநகரான திண்டுக்கல் ஒன்றிய செயலாளருக்கு எதிராக மட்டும் தலைமைக்கு புகார்கள் பறந்துள்ளன. முன்பு ஊடகம் ஒன்றில் பணியாற்றிய ஒன்றிய செயலாளரான நெடுஞ்செழியன் அதன் பிறகு அவரது தந்தை மிசா காலத்தில் சிறைக்கு சென்றவர் என்ற அடிப்படையில் ஒன்றிய செயலாளர் பதவியில் அமர்த்தப்பட்டார். ஆனால் அப்போது இருந்து கட்சி பின்னடைவை சந்தித்து வந்ததாக கூறுகின்றனர் உடன்பிறப்புகள்.

ஒன்றிய செயலாளர்
சட்டமன்றத் தேர்தலில் திண்டுக்கல்லில் தோல்வி, ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனது சொந்த ஊரிலேயே போட்டியிட்டு தோல்வி, உள்ளூர் நிர்வாகிகளை மதிப்பதில்லை, கட்சி நிகழ்ச்சிகளில் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை என அடுக்கடுக்காய் புகார்கள் கூறிவரும் நிலையில் அவருக்கு எதிராக முன்னாள் ஒன்றிய செயலாளரான பெருமாள் சாமி, பல்வேறு ஊராட்சி மன்ற தலைவர்கள், திண்டுக்கல் ஒன்றிய குழு தலைவர் ராஜா ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர், ஆனால் நெடுஞ்செழியனுக்கே மீண்டும் பொறுப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து நெடுஞ்செழியனுக்கு பதவி வழங்கக் கூடாது என பெரும்பாலான நிர்வாகிகள் அமைச்சர் ஐ.பெரியசாமி இடமும், திமுக தலைமை இடமும் புகார்கள் கூறி வருவதாக கூறப்படுகிறது.
-
கண்ணைக் காட்டிய உதயநிதி..அறிவாலயத்தில் குவிந்த வாரிசுகள்! 2026 தேர்தல் காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்! -
கோவை, நீலகிரியில் 2 நாட்களுக்கு மழை வெளுக்க போகுது.. தென் தமிழகத்திலும் மழை கொட்டும்.. வானிலை அலர்ட் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
மகாபலிபுரம் டூ எண்ணூர்.. இந்தியாவின் மிக முக்கிய ரோடு.. மின்னல் வேகத்தில் தயார் ஆகும் 10 வழிச் சாலை -
காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகள் என்னென்ன? டெல்லி தலைகளுடன் சென்னையில் நடந்த முக்கிய ஆலோசனை! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
UPSC தேர்வு.. தமிழ்நாட்டில் இருந்து வென்ற 60 பேரில்.. 56 பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயின்றவர்கள் -
PTRக்கு எதிராக புரட்சிப் படை? பத்திகிட்டு எரியுது மதுரை! களத்துக்கு வந்த மாப்பிள்ளை! பரபர பாலிடிக்ஸ் -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
புதுச்சேரி கூட்டணியில் குஸ்தி.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 இடங்களில் தனித்து போட்டி.. திமுக ஷாக்!












Click it and Unblock the Notifications