Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எங்கே தவறு நடந்தது?.. முக்கிய ரிப்போர்ட் கேட்கும் முதல்வர் ஸ்டாலின்.. யாருக்கு வைக்கப்படும் செக்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளிடம் முக்கியமான ரிப்போர்ட் ஒன்றை கேட்டு இருப்பதாக தலைமை செயலக வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காணும் பொங்கல் என்றாலும், முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். வீடுகளிலேயே கட்டுப்பாடுகளோடு மக்கள் பொங்கலை கொண்டாடி வருகிறார்கள்.

பொங்கலை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பாக பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2 வாரமாக இந்த பொருட்கள் ரேஷன் கடைகளில் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

பொருட்கள் விநியோகம்

பொருட்கள் விநியோகம்

அரிசி குடும்ப அட்டைதார்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் இந்த பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதில் கரும்பு உட்பட மொத்தம் 20 பொருட்கள் அடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. சில இடங்களில் மஞ்சள் பைகளில் இந்த பொருட்கள் வழங்கப்பட்டன. சில இடங்களில் மஞ்சள் பை தட்டுப்பாடு காரணமாக இந்த பொருட்கள் வாங்க வீட்டில் இருந்தே பைகள் எடுத்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 என்னென்ன பொருட்கள்

என்னென்ன பொருட்கள்

ஏலக்காய், பாசிப்பருப்பு, மிளகு, புளி, நெய், வெல்லம், முந்திரி, திராட்சை, கடுகு, சீரகம், கடலைப் பருப்பு, பச்சரிசி, முழு கரும்பு, ரவை, கோதுமை மாவு, உளுத்தம் பருப்பு, உப்பு உள்ளிட்ட பொருட்கள் இந்த தொகுப்பில் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசு மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுக்க வேண்டும், மக்களிடம் வரவேற்பை பெற வேண்டும் என்று திட்டமிட்டு முறையாக பொங்கல் தொகுப்பை வழங்கி இருந்தாலும் கூட சில இடங்களில் இந்த பொங்கல் தொகுப்பு மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

பொங்கல் தொகுப்பு விமர்சனம்

பொங்கல் தொகுப்பு விமர்சனம்

அதன்படி முதலில் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வடஇந்திய நிறுவனங்களிடம் வாங்கப்பட்டதாக புகார் வைக்கப்பட்டது. இதில் இருந்த இந்தி எழுத்துக்களால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இதை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தனர். இன்னொரு பக்கம் தமிழ்நாட்டு நிறுவனங்களிடம் வாங்காமல் பிற மாநில நிறுவனங்களிடம் வாங்கியது ஏன் என்றும் புகார்கள் வைக்கப்பட்டன. ஆனால் இதுவும் கூட குறைந்த விலையில் டெண்டர் எடுத்த நிறுவனத்திற்கு டெண்டர் கொடுக்கப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கமாக அளிக்கப்பட்டது.

தரம்

தரம்

ஆனால் அதே சமயம் பொங்கல் தொகுப்பில் சில இடங்களில் பொருட்கள் தரமற்று இருந்ததாக புகார்கள் வைக்கப்பட்டது. அதேபோல் சில இடங்களில் வெல்லம் மோசமான நிலையில் காணப்பட்டதாகவும் புகார்கள் வைக்கப்பட்டன. புளியில் பல்லி, ஊசி போன்ற பொருட்கள் இருந்ததாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இதில் அரசை விமர்சிக்க வேண்டும் என்று சில தவறான வதந்திகள் பரப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் பொங்கல் தொகுப்பு குறித்து புகார்கள் வைக்கப்படுவதால் முதல்வர் தரப்பு அப்செட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

சோதனை

சோதனை

பொங்கல் தொகுப்பு பற்றி புகார் வைக்கப்பட்டதால்தான் சமீபத்தில் முதல்வர் கூட நேரடியாக சென்று ரேஷன் கடைகளில் ஆய்வு செய்தார். ஆனாலும் சில இடங்களில் பொருட்கள் தரமற்று இருந்துள்ளது. கடைசி கட்டமாக வழங்கப்பட்ட பொருட்கள்தான் இப்படி தரமற்று இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் இந்த பொருட்கள் சில சொதப்பியது ஏன்? அதிகாரிகள் இதை கவனிக்காதது ஏன் என்று முதல்வர் ஸ்டாலின் விசாரணை நடத்த கூறியுள்ளதாக தலைமைச்செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Recommended Video

    Pongal Thoguppu 2022 | Pongal Gift எப்படி இருக்கு? | Oneindia Tamil
    தரமான பொருட்கள்

    தரமான பொருட்கள்

    பொருட்கள் தரமாக இருக்க வேண்டும் என்றுதான் இப்படி கொடுக்கப்பட்டது. மக்கள் நாம் வழங்கும் பொருட்களை வைத்து பொங்கல் கொண்டாட முடியாத நிலை இருந்தால் என்ன அர்த்தம்.. எங்கே தவறு நடந்தது என்று ரிப்போர்ட் வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளிடம் ரிப்போர்ட் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சில கான்டராக்டர்கள் அல்லது ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்களின் தலை உருளும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+