ஸ்டாலின் போட்ட "ஆர்டர்".. பெட்ரோல் விலை ரூ.3 குறைப்பதாக பிடிஆர் அதிரடி அறிவிப்பு
பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை: தமிழ்நாட்டில் பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் என்று பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் பிடிஆர் அறிவித்துள்ளார்.. இதற்கான உத்தவை முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக பிடிஆர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெட்ரோல், டீசலின் அதிகப்படியான விலை உயர்வே முக்கிய தடைக்காரணியாக விளங்கி வருகிறது..
பொதுமக்களின் அதிகப்படியான எதிர்ப்பை மத்திய அரசு சம்பாதித்தாலும் தொடர்ந்து, பெட்ரோல் - டீசல் விலை உயர்வு அதிகமாகி கொண்டுதான் வருகிறது.

விலை உயர்வு
கடந்த 2014-ல் பெட்ரோல் மீதான உற்பத்தி வரி ஒரு லிட்டருக்கு 10 ரூபாய் 35 பைசா என்றிருந்தது.. பிறகு 32 ரூபாய் 90 பைசாவாக உயர்த்தினார்கள்.. 2014-ல் மே மாதம் டீசல் மீதான வரி 3 ரூபாய் 57 பைசா என்ற அளவில் இருந்தது... அது பிறகு 31 ரூபாய் 80 பைசா என்ற அளவுக்கு உயர்ந்தது.. அதாவது, 2019-20ம் நிதி ஆண்டை ஒப்பிடும்போது 2020-21 ஆம் நிதியாண்டில் பெட்ரோல் மற்றும் டீசல் மூலமாக மத்திய அரசுக்கு வருவாய் 63% அதிகரித்திருந்தது.. ஆனாலும் மாநிலங்களுக்கான பங்கு சரிவடைந்து காணப்பட்டது.

வருமானம்
இந்நிலையில், இன்று நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்த போது, மத்திய அரசின் எரிபொருள் மீதான வரி விதிப்பு குறித்து பேசினார்.. அப்போது, மாநில அரசுக்கு பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பில் கிடைக்கும் வரி வருமான அளவுகள் குறைந்துள்ளதாக பிடிஆர் விரிவாக எடுத்து கூறினார். தொடர்ந்து நிதியமைச்சர் பேசியபோது, "பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசின் வரி விதிப்பு கூட்டாட்சியை நீர்த்து போக செய்கிறது.. இப்போதுள்ள நடைமுறையில் இருக்கும் வரி விதிப்பின் மூலம் பெட்ரோல் டீசல் மீது மத்திய அரசுக்கான வரி வருமானம் அதிகரித்தும், மாநில அரசுக்கான பகிர்வுக்கான வரியின் அளவு குறைந்துள்ளது..

சிஏஜி
பெட்ரோல் டீசல் மீதான மத்திய அரசின் மேல்வரிகள் குறிப்பிட்ட நோக்கத்துக்காக முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என்று சிஏஜி ஏற்கனவே குற்றஞ்சாட்டி உள்ளது.. மத்திய அரசிடம் இருந்து ஜிஎஸ்டி நிலுவைத் தொகை பெற தமிழக அரசு குழு அமைக்கப்படும்.. இந்த குழுவின் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு கோரிக்கை அடிப்படையில் தமிழக அரசுக்கான ஜிஎஸ்டி வரி பங்கை பெற முயற்சி செய்யும்" என்றார்.

பெட்ரோல்
தொடர்ந்து பிடிஆர் பேசும்போது, தமிழ்நாட்டில் பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் என்று தன்னுடைய பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்திருக்கிறார்.. பெட்ரோல் மீதான வரியை ரூ.3 அளவிற்கு குறைப்பதால், தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1160 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் அமைச்சர் அப்போது தெரிவித்தார்.

தமிழ்நாடு
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் இருசக்கர வாகனங்கள் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பெட்ரோல் மீதான வரிக்குறைப்பு உழைக்கும் வர்க்கத்தினருக்கு பேருதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. அதுமட்டுமல்ல, நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 குறைக்கப்படும் என அறிவித்திருந்தது..

நிதிச்சுமை
அது தற்போது ரூ.3 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரி குறைப்பால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ1,160 கோடி இழப்பு ஏற்பட்டாலும், கடந்த அதிமுக ஆட்சியின் காரணமாக கடும் நிதிச்சுமையில் மாநிலம் சிக்கி இருந்தாலும், தற்போதைய திமுக அரசு மக்களின் நலன் கருதி பெட்ரோல் விலையை குறைத்துள்ளது கவனிக்கத்தக்க அம்சமாக உள்ளது.
-
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்!












Click it and Unblock the Notifications