தோனி சிக்ஸர் அடிச்சாலும், ரொனால்டோ கோல் அடிச்சாலும் நாமே அடித்தது மாதிரி ஒரு ஃபீலிங்.. ஸ்டாலின்
சென்னை: நானும் கிரிக்கெட் வீரர்தான் என முதல்வர் ஸ்டாலின் நேரு ஸ்டேடியத்தில் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு வீரர்களுக்கு தடுப்பூசி போடும் நிகழ்ச்சியை நேற்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளால் நாட்டிற்கு பெருமை.
வீரர்கள், தனித்தனியாக இருந்தாலும் போட்டிகளில் பங்கேற்க அணி ஒற்றுமை மிகவும் முக்கியம். வீரர்களை ஊக்குவிப்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது.

உடல்திறன்
விளையாட்டு வீரர்களுக்கு உடல்திறனும் மன திடமும் இருக்க வேண்டும். விளையாட்டு வீரர்கள் அடுத்த தலைமுறைக்கு ஊக்கம் தரக் கூடியவர்கள். விளையாட்டு துறையை விளையாட்டாக எடுத்துக் கொண்டால் விளையாட்டாக போய் விடும்.

விளையாட்டு போட்டிகள்
விளையாட்டாக போய்விடக் கூடாது என்பதால்தான் விளையாட்டுத் துறை மேம்படுத்தப்பட்டு வருகிறது. விளையாட்டு போட்டிகள் குறித்து குழந்தை பருவத்திலேயே ஊக்குவிக்க வேண்டும். நானும் பள்ளி பருவத்தில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றுள்ளேன்.

துணை முதல்வர்
சென்னை மேயர், துணை முதல்வராக இருந்த போது கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். வீரர்களுக்கு என்ன தேவை என்பது எனக்கு தெரியும். வீரர்களின் தேவை நிறைவேற்றப்படும். உலக அளவில் இந்தியாவிற்கு பெருமை சேர்க்க தமிழகத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் சாதனை படைக்க வேண்டும்.

தமிழகம்
ஜப்பான் ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தில் 7 பேர் பங்கேற்பதில் மகிழ்ச்சி. தமிழகத்தில் 4 ஒலிம்பிக் அகாதெமி அமைக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் திமுக உறுதி அளித்தது. அவை நிறைவேற்றப்படும். சர்வதேச போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கு ரூ 25 லட்சம் வரை செலவு செய்யப்படுகிறது என்றார் முதல்வர். தோனி சிக்ஸர் அடித்தாலும் ரொனால்டோ கோல் அடித்தாலும் நாமே அடித்தது போன்று மகிழ்ச்சி ஏற்படுகிறது. அது போல் தமிழக வீரர்கள் வெற்றி பெற்றால் மக்கள் பெருமையடைகிறார்கள் என்றும் முதல்வர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications