"ஆமா.. எனக்கு சுயநலம் உண்டு.." கிறிஸ்துமஸ் விழாவில் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.. கிளம்பிய கைதட்டல்கள்
சென்னை: கொளத்தூர் தொகுதியை பொறுத்தவரை நான் சுயநலக்காரன்தான் என கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொளத்தூர் சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக தற்போது 3ஆவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் மு.க.ஸ்டாலின். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் அந்த தொகுதியின் எம்எல்ஏவாக இருந்து வருகிறார்.
முதல்வரானாலும் அவ்வப்போது தனது தொகுதிக்கு விசிட் அடிப்பதை முதல்வர் ஸ்டாலின் மறப்பதில்லை. ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகமாக இருந்தாலும் சரி தடுப்பூசி முகாமாக இருந்தாலும் சரி சர்பிரைஸாக போய் ஆய்வு செய்து வருகிறார்.

கிறிஸ்துமஸ் விழா
இந்த நிலையில் சென்னை கொளத்தூர் டான்போஸ்கோ பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், முதல்வர் பொறுப்பை ஏற்ற பிறகு அதிகமாக பேசக் கூடாது. பேசுவதை விட செயலில்தான் தனது திறமையை காட்ட வேண்டும்.

நல்வாய்ப்பு
முதல்வர் பதவியை மக்களுக்கு பணியாற்றும் வாய்ப்பாகவே கருதுகிறேன். இந்த விழாவை பார்க்கும் போது எனக்கு பாராட்டு விழா நடப்பது போல் உள்ளது. 5 ஆண்டுகளை இந்த அரசு நிறைவு செய்த பிறகு நல்ல முறையில் பாராட்டும் விதத்தில் இருக்க வேண்டும். தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது கொளத்தூர் தொகுதியில் வென்றதற்கான சான்றிதழை பெற்றேன்.

கருணாநிதி சமாதி
அதை எடுத்துக் கொண்டு கருணாநிதியின் சமாதிக்கு சென்று ஆசி பெற்றேன். கொளத்தூர் தொகுதியை பொருத்தவரை நான் சுயநலக்காரன்தான். நான் வாரத்திற்கு 3 முறை கொளத்தூர் தொகுதிக்கு வருகிறேன். ஆனாலும் பார்த்த முகம் தானே என இல்லாமல் என்னை எப்போதும் இன்முகத்துடன் வரவேற்கும் சுகமே தனிதான் (இவ்வாறு முதல்வர் பேசியதும் கூட்டத்தினரிடையே கை தட்டல் கிளம்பியது).
Recommended Video

தட்டாமல் கொடுக்கும் திமுக அரசு
தட்டுங்கள் திறக்கப்படும் என்பார்கள். ஆனால் நீங்கள் தட்டாமலேயே எங்கள் ஆட்சியில் பல நலத்திட்டங்களை செய்து வருகிறோம். இந்த ஆட்சியில் சொல்லாததையும் நாங்கள் செய்து வருகிறோம் என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
-
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி












Click it and Unblock the Notifications