ரேஷன் கார்டுக்காக கலெக்டர் ஆபீசுக்கு வந்த நபர்.. அந்த பாலிதீன் கவரை வாங்கி பார்த்தால்? அலறிய அதிகாரி
சென்னை: பொதுமக்களின் கோரிக்கைகள், வேண்டுதல்களை நிறைவேற்றித்தரவே அரசு எந்திரங்கள் செயல்பாட்டில் உள்ளன.. சிலசமயம் நடைமுறை சிக்கல்களால், பொதுமக்களின் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுவிடும்.. எனினும் தங்களது கோரிக்கை மீதான கவனத்தை ஈர்க்க, பாதிக்கப்பட்டவர்கள் நூதன போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுப்பது வாடிக்கையாகும்.. அந்தவகையில், உத்திரபிரதேசத்திலும் ஒரு கவன ஈர்ப்பு சம்பவம் நடந்து பலரையும் நிலைகுலைய வைத்துவிட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த 32 திருநங்கைகளுக்கு காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் ஓழலூர் கிராமத்தில் வீட்டுமனை ஒதுக்கீடு செய்து, அதற்கான இலவச வீட்டுமனை பட்டாவையும் சமீபத்தில் முதல்வர் வழங்கியிருந்தார்.

ஆனால், தங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவில் குழப்பம் உள்ளதால், ஒதுக்கப்பட்ட இடத்தை நில அளவை செய்து தரவேண்டும் என்று கூறி கடந்த 9ம் தேதி, கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சமைத்து சாப்பிட்ட திருநங்கைகள்
இதைக்கேள்விப்பட்டு விரைந்து வந்த தாசில்தார் ஆறுமுகம், கடந்த புதன்கிழமையன்று, ஒதுக்கிய இடத்தை நில அளவை செய்து தருவதாக உறுதி தந்தார்.. ஆனால் அதன்படி செய்யவிலலை. எனவே, 30க்கும் மேற்பட்ட திருநங்கைகள் மீண்டும் 2வது முறையாக செங்கல்பட்டு தாசில்தார் அலுவலகத்தில் போராட்டத்தை நேற்று முன்தினம் நடத்தினர்..
பாத்திர பண்டங்களை சாலையில் குவித்து சமையல் செய்ய துவங்கிவிட்டனர்.. தங்களுக்கு ஒரு முடிவு தெரியும்வரை சாலையிலேயே சமைத்து சாப்பிட்டு தங்கப்போவதாக கூறி, நடுரோட்டில் உட்கார்ந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைக்கேள்விப்பட்டதும் மறுபடியும் தாசில்தார் ஆறுமுகம் ஓடிவந்தார்.. வருகிற புதன்கிழமை 20ம்தேதி நில அளவை கட்டாயம் செய்து தருவதாக உறுதி தந்தார்.. இதையடுத்து, அனைவரும் சமைத்த சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு, அதற்கு பிறகு அங்கிருந்து கிளம்பி சென்றார்கள்.
பாலித்தீன் கவர்
இதுபோலவே, உத்தரபிரதேசத்திலும் நேற்று ஒரு கவனஈர்ப்பு நடந்துள்ளது.. அங்குள்ள மாவ் மாவட்டத்தின் கோட்வாலி பகுதியை சேர்ந்தவர் ரோதஷியாம் மவுரியா.. 60 வயதாகும் இவர் ஒரு விவசாயி ஆவார்.
நேற்றைய தினம் கலெக்டர் ஆபீசுக்கு மவுரியா வந்திருந்தார்.. கையில் ஒரு பாலித்தீன் கவரை கொண்டுவந்தார்.. கலெக்டர் ஆபீஸ் நுழைந்ததிலிருந்தே அவரது நடவடிக்கையில், அங்கிருந்தோருக்கு சந்தேகம் வந்தது.. எனவே, போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.. மேலும் அவரிடமிருந்த பாலித்தீன் பையையும் வாங்கி சோதனையிட்டனர்.
ரேஷன் கார்டில் பெயர்
பையை பார்த்ததுமே போலீசாருக்கு தூக்கி வாரிப்போட்டது.. பைக்குள் பாம்பு ஒன்று நெளிந்து கொண்டிருந்தது.. உடனே அது குறித்து மவுரியாவிடம் போலீசார் விசாரித்தனர்.. அதற்கு மவுரியா, அந்த பாம்பை கலெக்டர் ஆபீசில் விட்டுச்செல்ல வந்திருப்பதாக சொல்லி அடுத்த அதிர்ச்சியை தந்தார்..
அதாவது, மவுரியாவின் மனைவி 2 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டாராம்.. எனவே ரேஷன் கார்டிலிருந்து அவரது மனைவியின் பெயரை நீக்கும்போது, மவுரியாவின் பெயரையும் சேர்த்து அதிகாரிகள் நீக்கிவிட்டார்களாம். இதற்காக மாவட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தில் பலமுறை மனு தந்துள்ளார் மவுரியா.
நடையாய் நடந்த விவசாயி
ஆனால், அந்த மனுக்களின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.. கலெக்டர் ஆபீசுக்கு நடையாய் நடந்தும்கூட, தன்னுடைய மனுவை அதிகாரிகள் பரிசீலிக்கவில்லையாம். இதனால் கடந்த 2 வருடங்களாகவே கடுமையான மன உளைச்சலுக்கும், அதிருப்திக்கும் ஆளாகி வந்துள்ளார் மவுரியா..
அதனால்தான், ஒட்டுமொத்த அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே, இப்படி பாம்புடன் கலெக்டர் ஆபீஸ் வந்ததாக சொன்னார்.. இதையடுத்து, அந்த பாம்பை பறிமுதல் செய்த போலீசார், விவசாயியின் கோரிக்கைக்கு விரைவில் காணப்படும் என்று உறுதியளித்தனர்... அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க, விவசாயி மவுரியா செய்த விபரீத ஐடியாவால், கலெக்டர் ஆபீஸே அல்லோகலப்பட்டுவிட்டது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications