எகிறும் பிரஷர்.. பாஜகவால் ஈரோடு கிழக்கு தேர்தலில் ஈபிஎஸ், ஓபிஎஸ் அணியில் குழப்பம்.. அடுத்து என்ன?
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் அணியினர் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் பாஜக இன்னும் தனது நிலைப்பாட்டை அறிவிக்காமல் குழப்பத்தில் உள்ளது. இந்த விவகாரத்தில் பாஜக தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்த நிலையில் வேட்பாளர்களை அறிவித்து இரு அணியினரும் பாஜகவுக்கு பிரஷர் கொடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில் தான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில் தான் தற்போது எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் அணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்தக்கட்ட நகர்வு என்னவாக இருக்கும்? என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு வரும் 27 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு செய்யப்பட்டது.
இதையடுத்து ஓ பன்னீர் செல்வமும் தனது தரப்பில் வேட்பாளர் நிறுத்தப்பபடுகிறார் என தெரிவித்தார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் அணியினர் சென்னை கமலாலயம் சென்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து இடைத்தேர்தலில் ஆதரவு கோரினர்.

காக்க வைக்கும் பாஜக
இருப்பினும் கூட தற்போது வரை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக பாஜக எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. இருப்பினும் பாஜக போட்டியிட விரும்பவில்லை என கூறப்படும் நிலையில் கட்சி நிர்வாகிகளுடன் அண்ணாமலை தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தினாலும் கூட அவர்கள் இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி அல்லது ஓ பன்னீர் செல்வம் ஆகியோரில் யாருக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளனர் என்பதையும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இருதரப்பையும் பாஜக காக்க வைத்து வருகிறது.

வேட்பாளர் அறிவிப்பின் மூலம் பிரஷர்
இந்நிலையில் தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு முன்னாள் எம்எல்ஏ கேஎஸ் தென்னரசை வேட்பாளராக அறிவித்தது. இதையடுத்து நேற்று மாலையில் ஓ பன்னீர் செல்வம் தரப்பு செந்தில் முருகன் என்பவரை வேட்பாளராக அறிவித்தது. இந்த வேட்பாளர் அறிவிப்பின் மூலம் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் பாஜகவுக்கு ஒரு பிரஷரை கொடுத்துள்ளனர். தங்கள் தரப்பு வேட்பாளர்களை அறிவித்தன் மூலம் பாஜக தனது நிலைப்பாட்டை வெளிக்காட்டியே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி அழுத்தம்
இதுதவிர நேற்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலான ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிக்குழு அலுவலகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்ற பேனர் இடம்பெற்றிருந்தது. பாஜக தலைமையிலான கூட்டணிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயர் உள்ள நிலையில் கூடுதலாக முற்போக்கு என்ற வார்த்தை சேர்க்கப்பட்டு இருந்தது. இதனால் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிவிட்டதா என்ற கேள்விகள் எழுந்து பரபரப்பாக பேசப்பட்டன. இதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி என பெயர் மாற்றப்பட்டது. இதன்மூலம் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தங்களை ஆதரிக்க வேண்டும் என பாஜகவுக்கு அழுத்தம் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகின.

டெல்லி சென்ற அண்ணாமலை
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் தரப்பு போட்டியிட உள்ளதால் இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்புள்ளது. இருப்பினும் முன்னெச்சரிக்கையாக எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் இரட்டை இலை சின்னத்தை இருவரும் கைப்பற்ற முயன்று வருகின்றனர். இதுதொடர்பாக அதிமுக பொதுக்குழு வழக்கில் இடையீடு முறையில் அடுத்தடுத்து மனு செய்துள்ளனர். இது நாளை விசாரணைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. பாஜகவும் இந்த வழக்கை உன்னிப்பாக கவனித்து இரட்டை இலை சின்னம் யார் பக்கமோ அந்த தரப்புக்கு ஆதரவு வழங்கலாம் என கூறப்படுகிறது. ஒருவேளை இரட்டை இலை தொடர்பாக எந்த உத்தரவும் வராவிட்டால் கட்சி மேலிடத்துடன் கலந்தாலோசித்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தமிழ்நாடு பாஜகவின் நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளார். இதற்காக நேற்றே அண்ணாமலை டெல்லி புறப்பட்டு சென்றுள்ள நிலையில் தற்போது வரை எந்த அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை.

குழப்பத்திலும் பாஜக நிதானம்
இந்நிலையில் தான் தற்போது அதிமுக எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம், பாஜக தரப்பில் குழப்பம் நிலவி வருகிறது. பாஜக தரப்பில் யாரை ஆதரிப்பது எனவும், எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் தரப்போ பாஜக தங்களை ஆதரிக்குமா? இல்லையா? எனவும் குழப்பம் நீடித்து வருகிறது. இருப்பினும் இந்த இடைத்தேர்தல் விஷயத்தில் பாஜக அவசரம் காட்டாமல் பொறுமையாக தான் முடிவு எடுக்கும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 7 ம் தேதி வரை வேட்பு மனுத்தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. இதற்கிடையே தான் உச்சநீதிமன்றத்தில் அதிமுக வழக்கு விசாரணைகள் நடைபெற உள்ளது. இதனால் பாஜக மேலிடம் நிதானமாக அனைத்து விஷயங்களையும் உன்னிப்பாக கவனித்து யோசித்து குறிப்பாக 2024 நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து முடிவு எடுப்பார்கள் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஓ பன்னீர் செல்வம் சொல்வது என்ன?
முன்னதாக இன்று மதுரை விமான நிலையத்தில் ஓ பன்னீர் செல்வம் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பாஜக உங்களை ஆதரிக்குமா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஓ பன்னீர் செல்வம் ‛‛ஒரு கட்சியை ஆதரிக்க வற்புறுத்த முடியாது. பாஜக தலைவர்களிடம் இருந்து எங்களுக்கு இன்னும் அதிகாரப்பூர்வமான ஆதரவு வரவில்லை. காத்திருக்கிறோம்'' என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications