Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேட்கிறவன் கேனையனா இருந்தா..? ஆ.ராசாவை வம்பிழுக்கும் காங்கிரஸ் ‘தலை’! உடனே கைது பண்ணுங்க என ஆவேசம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : இந்துக்களை இழிவாகப் பேசும் மாற்று மதத்தைச் சேர்ந்த ஆ.ராஜா போன்றவர்களின் பிரிவினைவாத பேச்சை தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி உரத்த குரலில் கண்டிக்காமல் இருப்பது தான் தேசிய அளவில் காங்கிரஸ் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் எனவும், மதத்தின் பெயரால் காழ்ப்புணர்ச்சியை உண்டாக்கும் ஆ.ராஜாவை கைது செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமெரிக்கை நாராயணன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

திமுக எம்பி ஆ.ராசாவின் இந்துக்கள் குறித்த பேச்சு தான் தமிழகத்தில் தற்போது பேசுபவராக இருக்கிறது. போதாக்குறைக்கு பாஜக அண்ணாமலையும் அந்த பேச்சினை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட விவகாரம் சூடு பிடித்திருக்கிறது.

ஆ.ராசாவின் பேச்சுக்கு தமிழக பாஜகவினர் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் அவரை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்து வருகிறது. அப்படி என்னதான் பேசினார் ராசா?

ஆ.ராசா

ஆ.ராசா

அண்ணாமலை வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் பேசியுள்ள ஆ.ராசா,"இந்து மதத்தில் இருந்து வெளியேற விரும்பினால் நீதிமன்றங்கள் அனுமதிப்பதில்லை என்றார். உச்சநீதிமன்றம் என்ன சொல்கிறது. கிறிஸ்துவராக இல்லையென்றால் , இஸ்லாமியராக இல்லையென்றால் நீ இந்துவாகத் தான் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்கிறது. 'இப்படிபட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா. எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

 நீ சூத்திரன்

நீ சூத்திரன்

மேலும் பேசிய அவர், இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன். சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சமன். இந்துவாக, இருக்கும் வரை நீ தீண்ட தகாதவன். எத்தனை, பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள். எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள்." என பேசியிருந்தார்.

பாஜக அண்ணாமலை

பாஜக அண்ணாமலை

இந்த வீடியோவை தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை,"மன்னிக்கவும், இது தமிழ்நாட்டின் அரசியல் பேச்சு நிலை. திமுக எம்.பி. மீண்டும் ஒரு சமூகத்தின் மீது வெறுப்பை உமிழ்ந்து மற்றவர்களை திருப்திப்படுத்துவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளார். தமிழகம் தங்களுக்கு சொந்தம் என்று நினைக்கும் இந்த அரசியல் தலைவர்களின் மனநிலை மிகவும் துரதிர்ஷ்டவசமானது" என கூறியிருந்தார். இதனையடுத்து ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

 அமெரிக்கை நாராயணன்

அமெரிக்கை நாராயணன்

இந்நிலையில் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி பிரமுகரான அமெரிக்கை நாராயணன் ஆ.ராசவை கைது செய்ய வேண்டுமென கூறியிருக்கிறார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,"இந்துக்களை இழிவாகப் பேசும் மாற்று மதத்தைச் சேர்ந்த ஆ.ராஜா போன்றவர்களின் பிரிவினைவாத பேச்சை தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி உரத்த குரலில் கண்டிக்காமல் இருப்பது தான் தேசிய அளவில் காங்கிரஸ் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் எனவும், மதத்தின் பெயரால் காழ்ப்புணர்ச்சியை உண்டாக்கும் ஆ.ராஜாவை கைது செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்" என கூறியுள்ளார்.

கேப்பையில் நெய் வடியுதுன்னு

கேப்பையில் நெய் வடியுதுன்னு

மேலும் ஆ.ராசா ட்விட்டரில், சூத்திரர்கள் யார்? அவர்கள் இந்துக்கள் இல்லையா? மனுஸ்மிருதி உள்ளிட்ட நூல்களில் ஏன் இழிவுபடுத்தப்பட்டு, கல்வி-வேலைவாய்ப்பு-கோவில் நுழைவு மறுக்கப்பட்டது. அரசியல் அதிகாரத்தாலும் - பரப்புரையாலும் 90% இந்து மக்களின் இவ்வுரிமைகளை மீட்ட திராவிட இயக்கம் எப்படி இந்துக்களுக்கு எதிரியாகும்!" என பதிவிட்டிருந்த நிலையில், அதற்கு பதிலளித்துள்ள அமெரிக்கை நாராயணன், "கேட்கிறவன் கேனையனா இருந்தா கேப்பையில் நெய் வடியுதுன்னு" சொல்வாங்க
பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லனும். காந்தி/அம்பேத்கர் தலைமையில் இந்தியா முழுவதும் கோவில்களில் தாழ்த்தப்பட்டோர் நுழைவை முன் நின்று செய்தவர்கள் காங்கிரஸ், தமிழகத்தில் நடத்தியவர்
வைத்தியநாத ஐயர்" என கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+