அரசு நிகழ்ச்சியில் பூஜையா! கோபப்பட்ட செந்தில்குமார்! தேவையில்லாத வேலை என கார்த்தி சிதம்பரம் ட்விட்!
சென்னை : தருமபுரி திமுக மக்களவை உறுப்பினர் எம்பி செந்தில்குமார் அரசு நிகழ்ச்சியில் பூஜை செய்ய எதிர்ப்பு தெரிவித்ததுடன் பூஜைக்கான ஏற்பாடு செய்திருந்த அதிகாரிகளை கடுமையாக திட்டிய நிலையில், எம்பி செந்தில்குமாரின் செயல்பாடு தேவையற்றது என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா ஆலாபுரம் ஏரி சீரமைப்பு பணி தொடங்கியது. இதற்காக துறை சார்ந்த நீர்வள ஆதார அலுவலர்கள் பணியை துவங்க பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்தனர்.
அப்போது விழாவில் கலந்து கொண்ட தருமபுரி திமுக மக்களவை உறுப்பினர் எம்பி செந்தில்குமார் பூஜை செய்ய எதிர்ப்பு தெரிவித்ததுடன் பூஜைக்கான ஏற்பாடு செய்திருந்த அதிகாரிகளை கடுமையாக திட்டினார்.

செந்தில்குமார் எம்பி
மேலும் அரசு விழா என்றால் இந்து சமுதாயத்தை மட்டுமன்றி இஸ்லாமியர்கள் கிறிஸ்தவ பாதிரியார்களை மற்றும் கடவுள் மறுப்பு இயக்கத்தை சேர்ந்தவர்களையும் அழைத்து இது போன்ற பணியை துவங்க வேண்டும் . இது திராவிட மாடல் அரசு பூஜையை நிறுத்திவிட்டு செந்தில்குமார் பணியை தொடங்கி வைத்தார்.

பாஜக கண்டனம்
சமூக வலைதளங்களில் பலரும் எம்பி செந்தில்குமாருக்கு பாராட்டு தெரிவித்துள்ள நிலையில், பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகிறது. இதுகுறித்து பதிவிட்டுள்ள பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி,"ஓரு பாராளுமன்ற உறுப்பினரின் சிறுபிள்ளைத்தனமான செயல். பூஜை செய்வது என்பது பணியாற்றுபவர்களின் நம்பிக்கைகாக. அரசுக்காக அல்ல. பூஜையில் தி க வினர் எங்கே என்று கேட்பது வன்மத்தின் வெளிப்பாடு. " என கடுமையாக விமர்சித்திருந்தார்.

செயல்பாடு தேவையற்றது
இந்நிலையில் எம்பி செந்தில்குமாரின் செயல்பாடு தேவையற்றது என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டர் செந்தில்குமாருக்கு பதிலளித்துள்ளது அவர்," முற்றிலும் தேவையற்ற செயல். உண்மையை சொல்லுங்கள்.. இது போன்ற நிகழ்வுகள் இல்லாமல் உங்கள் கட்சி உறுப்பினர் ஒருவரின் இல்லத்தில் திருமணம், புதுமனை புகுவிழா நடந்துள்ளதா? மக்கள் தங்களுக்கு வாக்களிப்பதால் அனைத்து வகையான சடங்குகளையும் மறுப்பதாக திராவிட தலைவர்கள் நினைக்கிறார்கள்" என பதிவிட்டுள்ளார்.

கார்த்தி சிதம்பரம்
மேலும் "ஒவ்வொரு பதவிப் பிரமாண நிகழ்ச்சியும் அல்லது பதவியேற்பு விழாவும் அரசாங்க நிகழ்வு தான். நீங்கள் நேரத்தை சொல்லுங்கள்.. அந்த நேரம் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன்." என கூறியுள்ளார். அதாவது நல்ல நேரம் பார்த்துதான் அரசு நிகழ்ச்சிகளோ, பதவியேற்பு நிகழ்ச்சிகளோ நடந்துள்ளது எனவும் கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
-
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications