விடாமல் அதிகரிக்கிறது.. தமிழகத்தில் இன்று மட்டும் 5883 கொரோனா கேஸ்கள்.. 3 லட்சத்தை நெருங்குகிறது!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 5883 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 290907 ஆக உயர்ந்துள்ளது. மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்குகிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. தினமும் சராசரியாக 5000க்கும் அதிகமான கேஸ்கள் தமிழகத்தில் வர தொடங்கி உள்ளது.
ஒரு பக்கம் சென்னையில் கொரோனா கேஸ்கள் குறைய தொடங்கி உள்ளது. இன்று மட்டும் சென்னையில் 986 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஆக்டிவ் எப்படி
தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 290907 ஆக உள்ள நிலையில் தமிழகத்தில் மொத்தமாக உள்ள ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 53481 ஆக உள்ளது. இன்று 5043 பேர் தமிழகத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக 232618 பேர் டிஸ்சார்ஜ்செய்யப்பட்டுள்ளனர் .

மரணம் எத்தனை
டிஸ்சார்ஜ் எண்ணிக்கை தமிழகத்தில் வேகமாக அதிகரிக்க தொடங்கி உள்ளனர். ஆனால் இன்னொரு பக்கம் கொரோனா காரணமாக ஏற்படும் மரணங்களும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில் இன்று 118 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 4808 ஆக உயர்ந்துள்ளது.

சோதனை எத்தனை
கொரோனா சோதனைகளை தமிழகம் துரிதப்படுத்தி உள்ளது.இன்று 67553 மாதிரிகள் தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. 3155619 மாதிரிகள் இதுவரை தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 65872 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 3041529 பேருக்கு தமிழகத்தில் இதுவரை கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

சென்னைக்கு அடுத்து
சென்னைக்கு அடுத்து இன்று செங்கல்பட்டில் 425 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 17411 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று திருவள்ளூரில் 391 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 16612 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று காஞ்சிபுரத்தில் 284 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 11422 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications