மற்ற மாவட்டங்களில் குறைந்துவிட்டது.. சென்னைதான் மோசம்.. அதிகரிக்கும் கேஸ்கள்.. என்னதான் நடக்கிறது?
தமிழகத்தில் கொரோனா வைரஸ் கேஸ்கள் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் குறைய தொடங்கி உள்ளது.
சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் கேஸ்கள் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் குறைய தொடங்கி உள்ளது. தினமும் வரும் புதிய கொரோனா கேஸ்களில் சென்னையில்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
Recommended Video
கொரோனா காரணமாக நாடு முழுக்க ஊரடங்கு மே 3ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் கூட இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 24,530 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 780 பேர் பலியாகி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 72 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,755 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

மற்ற மாவட்டங்களின் நிலை
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் கேஸ்கள் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் குறைய தொடங்கி உள்ளது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய கொரோனா எபிசென்டராக இருந்த பகுதிதான் கோயம்புத்தூர். தொடக்க நாட்களில் கோவையில் தினமும் 20-30 கேஸ்கள் வந்த வண்ணம் இருந்தது. அதோடு வேகமாக 100 என்ற எண்ணிக்கையை கோவை தொட்டது. ஆனால் தற்போது கோவையில் கேஸ்கள் குறைய தொடங்கி உள்ளது.

கோவை கேஸ்கள்
தினமும் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே கோவையில் கேஸ்கள் வருகிறது. சில வாரம் கோவையில் கேஸ்கள் வருவதே இல்லை. நேற்று கோவையில் மொத்தமாக 7 கேஸ்கள் மட்டுமே வந்தது. இதனால் விரைவில் கோவையில் கேஸ்கள் கட்டுப்படுத்தப்பட வாய்ப்புள்ளது. கோவைக்கு அடுத்து திண்டுக்கல், ஈரோட்டில் இந்த மாத தொடக்கத்தில் கேஸ்கள் அதிகம் வந்தது.

ஈரோடு நிலை
ஆனால் ஈரோட்டில் கடந்த 10 நாட்களாக கேஸ்கள் எதுவும் வரவில்லை. அங்கு தற்போது 4 நோயாளிகள் மட்டுமே கொரோனா பாதிப்போடு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். திண்டுக்கலிலும் கேஸ்களில் எண்ணிக்கை வேகமாக குறைய தொடங்கி உள்ளது. அதேபோல் திருப்பூர், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருச்சி, தூத்துக்குடி, விழுப்புரம், கரூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா ஏற்படவே இல்லை.

மதுரை எப்படி
அதேபோல் தமிழகத்தின் வேறு சில ஹாட் ஸ்பாட் பகுதிகள் என்று கருதப்பட்ட சேலம், மதுரை, நாமக்கல், நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா தீவிரமாக வேகம் குறைய தொடங்கி உள்ளது. தமிழகத்திற்கு இது ஒருவகையில் நல்ல செய்தி என்று கூறுகிறார்கள். ஆனால் இன்னொரு பக்கம் தினமும் வரும் புதிய கொரோனா கேஸ்களில் சென்னையில்தான் பலர் பாதிக்கப்படுகிறார்கள்.இதுதான் கவலை அளிக்கிறது.

ஆனால் சென்னை மோசம்
கடந்த நான்கு நாட்களாக தமிழகத்தில் வந்த கேஸ்களில் 80% கேஸ்கள் எல்லாம் சென்னையில் இருந்துதான் வந்தது. அதிலும் நேற்று வந்த கொரோனா கேஸ்களில் 75% சென்னையில் இருந்துதான் வந்தது. சென்னையில் எல்லா ஏரியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் மட்டும் நேற்று 16 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

அதிகமான கேஸ்கள் வருகிறது
மொத்தமாக கோடம்பாக்கத்தில் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் நேற்று ராயபுரத்தில் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அங்கு மொத்தமாக 133 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 52 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 452 ஆக உயர்ந்துள்ளது.

புது கொரோனா கேஸ்கள்
தினமும் வரும் புதிய கொரோனா கேஸ்களில் சென்னையில்தான் பலர் பாதிக்கப்படுகிறார்கள். இது தமிழகத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனால்தான் சென்னையில் கட்டுப்பாடுகள் தீவிரம் ஆக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் அண்ணாசாலை மொத்தமாக மூடப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் 26ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்படுமென அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications