சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹாட் ஸ்பாட்.. கொங்கு மண்டலமா.. கொரோனா மண்டலமா.. அதிர வைக்கும் பரவல்.. அதி தீவிர ஆக்ஷனில் அரசு!

கொங்கு மண்டலத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: கொங்கு மண்டலமா.. கொரோனா மண்டலமா என தெரியவில்லை.. மொத்த பேரும் கலக்கத்தில் உள்ளனர்.. ஏற்கனவே ஹாட் ஸ்பாட் என்று ஈரோடு, சென்னை அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில். கொங்கு மண்டலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கூடிவருவதால் தீவிரமான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சில தினங்களுக்கு முன்புதான் தமிழகத்தில் கொரோனா தொற்று நுழைந்துள்ளது.. அதன் துவக்க புள்ளி ஈரோடு என்றும் சொல்லப்பட்டது.. பிறகு அடுத்த சில தினங்களில் ஒரே நாளில் 57 பேருக்கு தொற்று என்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் அறிவித்தபோது உச்சக்கட்ட அதிர்ச்சி அனைவருக்குமே ஏற்பட்டது.

இந்த சமயத்தில் கொரோனா ஹாட் ஸ்பாட் என்று ஈரோட்டையும் சென்னையும் அறிவித்தனர். ஒரு இடத்தில் அதிக நபருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு.. அதன் மூலம் மற்றவர்களுக்கு பரவி ஆபத்தான சூழல் உருவானால்தான் அதன்பெயர்தான் ஹாட்ஸ்பாட்.

ஈரோடு

ஈரோடு

அப்படித்தான் ஈரோட்டில் பலருக்கு கொரோனா பரவும் அபாயம் இருப்பது தெரிந்தது. கட்டுப்பாடுகள் அதிகமாக்கப்பட்டது.. தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமானது.. 75 வயது நபர் ஒருவர் கடந்த 21ம் தேதி டெல்லியில் இருந்து ஈரோடு வந்துளார்.. இவருக்குதான் தொற்று முதலில் ஏற்பட்டுள்ளது.. இவரை அடுத்து தாய்லாந்து பயணி ஒருவர் ஈரோட்டுக்கு வந்தார்.. இவர்கள் 2 பேரால் மற்றவர்களுக்கு பரவியதாகவும் கூறப்பட்டது.

பெருந்துறை

பெருந்துறை

மாவட்டமே மொத்தமாக மூடப்பட்டது.. யாரும் உள்ளே போக, நுழைய அனுமதி இல்லை.. 24 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.. தாய்லாந்து நாட்டினர், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், டெல்லி போய் திரும்பியவர்கள் என மொத்தம் 23 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 58 பேர் கொரோனா சிறப்பு வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 100-க்கும் மேற்பட்டோடர் அறிகுறிகளுடன் பெருந்துறை போக்குவரத்து மருத்துவ கல்லூரி மருததுவமனையில அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரிசல்ட்கள்

ரிசல்ட்கள்

கோவையை பொறுத்தவரை 61 பேர் டிராக் செய்யப்பட்டு, அவர்களில் அறிகுறிகள் இருந்த 44 பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டிருக்கிறது... அந்த டெஸ்ட் ரிசல்ட்கள் இன்னும் வெளியாகவில்லை... டிராக் செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் டெஸ்ட்கள் செய்யப்படுகிறது. இன்று வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்படி மொத்தம் 29 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 10 மாத கைக்குழந்தையும் ஒன்று என்பதுதான் வேதனை.

சிறப்பு வார்டு

சிறப்பு வார்டு

நாமக்கல்லில் தீவிரமான கண்காணிப்பு நடந்து வருகிறது.. எம்எம் தங்கம் ஆஸ்பத்திரி கொரோனா தொற்று சிறப்பு வார்டுக்காக ஒப்படைக்க உள்ளனர்... அதேபோல, மகாராஜா ஆஸ்பத்திரியின் ஒரு பாதியை, கொரோனா வைரஸ் தொற்று சிறப்பு வார்டாக மாற்றி கொள்ளவும் ஒப்படைக்கின்றனர். இங்குள்ள அரசு காலேஜ்களில் கூட சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன... நிறைய நோயாளிகள் வந்தாலும் கூடுதலாக, 1,850 படுக்கைகள் தயாராகவே இருக்கின்றன.. ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்களுக்கு தேவையான காய்கறி, மளிகை பொருட்கள், அவர்கள் வீடு தேடி சென்று வழங்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

கிருமிநாசினி சுரங்கப்பாதை

கிருமிநாசினி சுரங்கப்பாதை

திருப்பூரில் வீட்டு கண்காணிப்பில் 1346 பேர் உள்ளனர்... திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் 2 பேர் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.. ஆனால் இங்கு ஒரே ஆறுதல் என்னவென்றால், தினசரி காய்கறி மார்க்கெட்டில் 7 அடி உயரம், 5 அடி அகலம், 16 அடி நீளத்திற்கு கிருமிநாசினி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது... இதன்வழியாக ஒருவர் கைகளில் மேலேதூக்கியவாறு 3 செகண்ட் நடந்தாலே அவரது உடலில் வைரஸ் தொற்று இருந்தால் முழுசா நீங்கிவிடுமாம்... இப்போதைக்கு இந்த காய்கறி மார்க்கெட் செல்லும் பொதுமக்கள் இந்த கிருமிநாசினி சுரங்கப் பாதை வழியேதான் அனுமதிக்கப்படுகின்றனர்.

சேலம்

சேலம்

சேலத்தில்தான் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.. இந்தோனேஷிய நாட்டு மத போதகர்களுடன் தொடர்பில் இருந்த 25 ஆயிரம் பேருக்கு கொரோனா அறிகுறி இருக்கலாம் என்று இப்போது சொல்லப்படுகிறது.. பிரச்சாரத்துக்காக முஸ்லிம் மத போதகர்கள் 11 பேர் மார்ச் 11ம் தேதி சேலம் வந்துள்ளனர்... சூரமங்கலம், கருங்கல்பட்டி, கிச்சிப்பாளையம், சன்னியாசிக் குண்டு, செவ்வாய்ப்பேட்டை, அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மசூதிகளில் பிரச்சாரத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

பரிசோதனை

பரிசோதனை

ஆனால் இந்த விஷயம் சுகாதாரத்துறைக்கு முதலிலேயே தெரியாது.. அவர்களில் 5 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட, சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இன்னொரு பக்கம், இவர்கள் பிரச்சாரத்துக்கு எங்கெங்கு சென்று வந்தார்கள், யார் யாரை சந்தித்தார்கள் என்று சுமார் 25 ஆயிரம் வீடுகளுக்கு நேரடியாக சென்று, கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

கொங்கு மண்டலம்

கொங்கு மண்டலம்

இப்படி கொங்கு மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களில் சுமார் 82-க்கும் மேற்பட்டோர் அறிகுறிகளுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாலும், கண்காணிப்பில் நிறைய பேர் உள்ளதாலும் மக்களிடையே கலக்கம் உள்ளது.. எனினும் சுகாதார துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் இரவு பகல் பாராமல் தடுப்பு நடவடிக்கைகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்!

English summary
coronavirus: kongu mandalam belt is now hot spot of corona virus
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X