சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை, மும்பைக்கு வாய்ப்பு இல்லை.. மோடி கேட்ட "எக்சிட் பிளான்".. மே 17க்கு பின் என்ன நடக்கும்?

மே 17க்கு பின் நாடு முழுக்க ஊரடங்கு தளர்வு அமல்படுத்தப்பட்டாலும் சென்னை உள்ளிட்ட சில முக்கிய நகரங்களில் மட்டும் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

Google Oneindia Tamil News

சென்னை: மே 17க்கு பின் நாடு முழுக்க ஊரடங்கு தளர்வு அமல்படுத்தப்பட்டாலும் சென்னை உள்ளிட்ட சில முக்கிய நகரங்களில் மட்டும் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுக்க ஊரடங்கு மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த லாக்டவுன் 3.0 வரும் மே 17ம் தேதி முடிவிற்கு வருகிறது. இந்த மே 17ம் தேதிக்கு பின் லாக்டவுன் நீட்டிக்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பாக நேற்று பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். லாக்டவுன் குறித்தும், எக்சிட் பிளான் குறித்தும் இவர்கள் ஆலோசனை செய்தனர்.

மே 17-க்குப் பின் தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கும்: புதுவை முதல்வர் நாராயணசாமி மே 17-க்குப் பின் தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கும்: புதுவை முதல்வர் நாராயணசாமி

நீடிக்க வாய்ப்பு

நீடிக்க வாய்ப்பு

அதன்படி மே 17க்கு பின் நாடு முழுக்க பெரும்பாலான இடங்களில் லாக்டவுன் மொத்தமாக தளர்த்தப்படும். வெகு சில இடங்களில் லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்று கூறுகிறார்கள். பிரதமர் மோடிக்கு லாக்டவுன் நீடிக்கும் எண்ணம் இருக்கிறது. ஆனால் நாடு முழுக்க லாக்டவுனை நீட்டிக்க வாய்ப்பு இல்லை. சில இடங்களில் மட்டும் லாக்டவுன் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

சென்னை நிலை என்ன

சென்னை நிலை என்ன

இதில் சென்னையில் பெரும்பாலும் லாக்டவுன் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். தமிழகம் முழுக்க லாக்டவுன் தளர்வு கொண்டு வரப்பட்டாலும் சென்னையில் லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்று கூறப்படுகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரதமர் மோடியுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இது பற்றி பேசி இருக்கிறார். சென்னையில் கொரோனா கேஸ்கள் அதிகரிப்பது குறித்து விவாதித்து இருக்கிறார்.

சென்னைக்கு ரயில்

சென்னைக்கு ரயில்

அதேபோல் சென்னைக்கு இப்போது ரயில் சேவையை இயக்க வேண்டாம். தற்போது ரயிலை இயக்கினால் கூட்டம் அதிகம் ஆகும். இதனால் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இன்னும் சில நாட்கள் சென்னையில் இதே நிலை தொடர வேண்டும் என்று தமிழக அரசு, ரயில்வே துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் தற்போது இருக்கும் லாக்டவுன் தொடரவே அதிக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

மும்பை நிலை

மும்பை நிலை

அதேபோல் இன்னொரு பக்கம் கண்டிப்பாக மும்பையில் லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. நேற்று உத்தவ் தாக்கரே இது தொடர்பாக மோடியுடன் நடந்த ஆலோசனையில் குறிப்பிட்டு இருக்கிறார். மும்பை மற்றும் புனேவில் கேஸ்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அதனால் கண்டிப்பாக இரண்டு இடங்களிலும் லாக்டவுன் நீட்டிப்பு செய்ய வேண்டும். தளர்வுகளை அமல்படுத்த கூடாது என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார் .

அதிக கேஸ்கள்

அதிக கேஸ்கள்

இந்தியாவில் இந்த மூன்று நகரங்களில் மிக அதிக அளவில் கேஸ்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. மும்பையில் மட்டும் 14,521 பேருக்கு கொரோனா உள்ளது. புனேவில் 2789 பேருக்கு கொரோனா உள்ளது. சென்னையில் 4372 பேருக்கு கொரோனா உள்ளது. இந்த மூன்று நகரங்களில் கொரோனா ஸ்டேஜ் 3 வந்துவிட்டது. கொரோனா பரவல் இப்போதைக்கு இங்கு குறையாது என்று கூறுகிறார்கள்.

எக்சிட் பிளான்

எக்சிட் பிளான்

இதனால் நாடு முழுக்க எப்படி தளர்வுகளை கொண்டு வருவது என்று தெரியாமல் மத்திய அரசு குழம்பி உள்ளது. இதற்காக மாநில அரசுகளிடம் தனியான எக்சிட் பிளான்களை மாநில வாரியாக மத்திய அரசு கேட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு பிளான்களை வாங்கி அதை மொத்தமாக தொகுத்து மத்திய அரசு புதிய பிளான் ஒன்றை வெளியிடும் என்று கூறுகிறார்கள். 15ம் தேதி இந்த பிளான் இறுதி வடிவம் பெறும்.

சில நகரங்கள் எப்படி

சில நகரங்கள் எப்படி

இதில் சென்னை, மும்பை, புனே ஆகிய நகரங்களில் கண்டிப்பாக லாக்டவுன் தொடரும் என்று கூறுகிறார்கள். அஹமதாபாத், ஹைதராபாத் போன்ற மற்ற சில நகரங்களிலும் தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் தொடரும் என்கிறார்கள். சென்னையில் இனி வரும் நாட்களில் கேஸ்கள் எப்படி இருக்கிறது. இந்த வாரம் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை பொறுத்தே அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

English summary
Coronavirus: Lockdown may extend in Chennai, Mumbai and Pune after May 17 says sources.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X