Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"எஸ் ஜீன் டிராப்".. தமிழ்நாட்டில் நைஜீரிய பயணியுடன் இருந்த 7 பேருக்கும் கொரோனா.. ஓமிக்ரான் அச்சம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிக்கப்பட்ட நைஜீரியருடன் தொடர்பில் இருந்த 7 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஓமிக்ரான் பரவல் குறித்த அச்சம் எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்று முதல் ஓமிக்ரான் கொரோனா கேஸ் பதிவானது. சென்னையை சேர்ந்தவருக்கு ஓமிக்ரான் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

இவர் நைஜீரியாவில் இருந்து சென்னை வந்தவர். இவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் நேற்று வெளியான ஜீன் ஆய்வு முடிவில் அவருக்கு ஓமிக்ரான் இருப்பது கண்டறியப்பட்டது.

7 பேருக்கும் கொரோனா

7 பேருக்கும் கொரோனா

இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிக்கப்பட்ட நைஜீரியருடன் தொடர்பில் இருந்த 7 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில் தகவல் தெரிவித்துள்ளார். அந்த நைஜீரிய பயணிக்கு 8 பேர் காண்டாக்ட்களாக இருந்தனர். இதில் ஒரு குழந்தை தவிர மற்ற 7 பேருக்கும் கொரோனா வந்துள்ளது.

இரண்டு டோஸ்

இரண்டு டோஸ்

இவர்கள் எல்லோரும் இரண்டு டோஸ் போட்டவர்கள். இவர்கள் 7 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இவர்களின் கொரோனா சோதனை முடிவில் எஸ் ஜீன் இல்லை என்று முதல்கட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக ஓமிக்ரான் கொரோனா உள்ளிட்ட சில வகை கொரோனாவில் எஸ் ஜீன் இருக்காது.

எஸ் ஜீன் இல்லை

எஸ் ஜீன் இல்லை

எஸ் ஜீன் இல்லாமல் இருந்தால் அது பெரும்பாலும் ஓமிக்ரானாக இருக்க வாய்ப்புள்ளது. இதனால் இவர்களுக்கு ஓமிக்ரான் இருக்கலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. ஜீன் சோதனை செய்யப்பட்ட பின்பே இவர்கள் 7 பேருக்கும் ஓமிக்ரான் உள்ளதா என்று உறுதியாக தெரியும். வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்த 16 ஆயிரம் பேருக்கு இதுவரை கொரோனா சோதனை செய்யப்பட்டது.

உறுதி

உறுதி

இதில் 22 பேருக்கு கொரோனா வந்துள்ளது. இதில் 9 பேருக்கு எஸ் ஜீன் இல்லை என்று கண்டறியப்பட்டள்ளது. இதில் ஒருவருக்கு மட்டுமே இதுவரை ஓமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது, என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    ஓமைக்ரான் தாக்கம் எதிரொலி: வெளிநாட்டுப் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு!
    அச்சம் வேண்டாம்

    அச்சம் வேண்டாம்

    மக்கள் அச்சம் அடைய கூடாது. ஒமிக்ரானுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கொரோனா தடுப்பூசியை அனைவரும் தவறாமல் செலுத்திக்கொள்ளவும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+