சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"டேஞ்சர்".. 3 முறை உருமாறிய "பெங்கால் வைரஸ்".. பீதியை கிளப்பும் கொரோனா 2வது அலை..!

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவல் மிக ஆபத்தாக இருந்து வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: மும்முறை உருமாறிய "பெங்கால் வைரஸ்" மிகவும் ஆபத்தானது என நிபுணர்கள் வார்னிங் தந்துள்ளனர்.. அதேசமயம், இந்த வைரஸில் சில சிக்கல்கள் இருப்பதும் அறிவியலாளர்களை கவலை கொள்ள வைத்துள்ளது.

Recommended Video

    இந்தியாவில் புதிதாக பரவும் மும்முறை மரபணு மாறிய கொரோனா | Triple Mutation Covid Variant

    டெல்லியில் உள்ள சிஎஸ்ஐஆர் உயிரியல் ஆய்வு மையம் பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகிறது.. இருமுறை உருமாற்றம் அடைந்த இந்திய வகை கொரோனா வைரஸை சமீபத்தில் கண்டுபிடித்தது கூட இந்த ஆய்வு மையம்தான்.. மகாராஷ்டிராவில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் இருந்து இந்த 2 முறை உருத்திரிபு வகை கண்டறியப்பட்டது.

    அந்த வகையில் இப்போதும் ஒரு புதிய ஆய்வில் ஈடுபட்டு வருகிறது.. அதாவது, வெளிநாட்டு பயணிகள் மூலமாக புதிய வகை கொரோனா வைரஸ் பரவுகிறதா? என்று கண்ணிக்கிறது.. மேலும் அது குறித்த ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறது.. அதன்படி, மேற்கு வங்கத்தில் பரவி வரும் கொரோனாவைரஸ், 3 முறை உருத்திரிவு அடைந்துள்ளதாம்.. இதனை "பெங்கால் வைரஸ்" என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்..

    கொரோனா 2.0: உங்க வீட்டு குட்டீஸ்கள் மீது கவனம் - இந்த அறிகுறிகள் இருந்தால் செக் பண்ணுங்க கொரோனா 2.0: உங்க வீட்டு குட்டீஸ்கள் மீது கவனம் - இந்த அறிகுறிகள் இருந்தால் செக் பண்ணுங்க

    எதிர்ப்பு சக்தி

    எதிர்ப்பு சக்தி

    இந்த வகை கொரோனா வைரஸ், மிக ஆபத்தானாம்.. நிறைய தொற்றுத்தன்மை வாய்ந்ததாம்.. இது எந்த அளவுக்கு ஆபத்து என்றால், தடுப்பூசி போட்டதால் உருவான நோய் எதிர்ப்பு சக்தியை மீறி பரவும் திறன் கொண்டது என்கிறார்கள்.. அதாவது, ஏற்கெனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களும் கூட இதில் இருந்து தப்ப முடியாது என்கின்றனர். ஒரு நபரின் நோய் எதிர்ப்பு சக்தி கண்காணிப்பில் இருந்தும் இந்த வைரஸ் தப்பிவிடுகிறதாம்.. இதை நினைத்துதான் அறிவியலாளர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்..

    மாநில அரசு

    மாநில அரசு

    இது சம்பந்தமான அடுத்த ஆய்வுகள் இன்னும் வரவில்லை.. அதேசமயம், இதை உறுதிப்படுத்தவோ, மறுக்கவோ வேறு ஆய்வுகள் எதுவும் செய்யப்படவுமில்லை.. கடந்த சில மாதமாகவே மேற்கு வங்கத்தில் இந்த வகை வைரஸ் பரவல் அதிகரித்து வந்துள்ளது.. இது அந்த மாநில அரசுக்கு புது தலைவலியையும் ஏற்படுத்தி வருகிறது.

    கூடுதல் ஆய்வு

    கூடுதல் ஆய்வு

    இந்த பெங்கால் வைரஸ், உடம்பில் ஏற்கனவே உருவாகி இருக்கும் நோய் எதிர்ப்பு முறைக்கு தப்பிவிடும் திறன்கொண்ட, பிரேசில், தென்னாப்பிரிக்கா வகை உருத்திரிபு வைரஸ்களின் பண்புகளை கொண்டிருக்கலாம் என்றும் அறிஞர்கள் கருதுகிறார்கள்.. அதனால் இது சம்பந்தமான கூடுதல் ஆய்வுகளை மேற்கொண்டால் மட்டுமே ஒரு தெளிவு வரும், என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்..

    புது தலைவலி

    புது தலைவலி

    ஏற்கனவே 2வது அலை மிக மோசமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தனர்.. அதன்படியே ஏராளமானோர் தற்போதும் பாதிக்கப்பட்டும் வருகின்றனர்... நாடு முழுவதும் ஆஸ்பத்திரிகளே நிரம்பி வழிகிறது.. ஒருபக்கம் தடுப்பூசிகளுக்கும் பற்றாக்குறை.. இன்னொரு பக்கம் ஆக்ஸிஜனுக்கும் பற்றாக்குறை. உள்ளது.. இந்த மாதிரி படுமோசமான சூழலில், மும்முறை உருமாறிய இந்த பெங்கால் வைரஸ் புது அச்சத்தை கிளப்பி கொண்டு வருகிறது.

    English summary
    Coronavirus: Triple Mutant Bengal covid 19 strain worrying factor in second wave
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X