இதுதான் முக்கியம்.. ஓமிக்ரான் நோயாளிகளிடம் கண்டுபிடிக்கப்பட்ட 2 புதிய அறிகுறிகள்.. கவனம்!
சென்னை: ஓமிக்ரான் நோயாளிகளின் எண்ணிக்கை உலகம் முழுக்க அதிகரித்து வரும் நிலையில் 2 புதிய ஓமிக்ரான் அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுக்க ஓமிக்ரான் கேஸ்கள் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. 100க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓமிக்ரான் கேஸ்கள் பதிவாகி உள்ளது. இந்தியாவில் மொத்த ஓமிக்ரான் பாதிப்பு 1,525 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் 121 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 460 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல நாடுகளில் இதனால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

பெரும்பாலான அறிகுறிகள்
ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கும் மற்ற வகை கொரோனா கொண்டவர்களுக்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அறிகுறிகள்தான் உள்ளன. ஓமிக்ரான் கொரோனா கொஞ்சம் தாக்கம் குறைவானது. இது வேகமாக பரவுகிறது என்றாலும் இதன் ஆற்றல் குறைவாக இருக்கிறது. இதனால் ஓமிக்ரானின் அறிகுறிகள் பெரும்பாலும் "mild" ஆகவே உள்ளன.

டெல்டா
டெல்டாவில் ஏற்பட்டது போல மூச்சு பிரச்சனைகள் இதில் அதிகம் ஏற்படுத்துவது இல்லை. ஓமிக்ரான் வந்த பலருக்கு மூச்சு இறைப்பு, ஆக்சிஜன் அளவு குறைவது போன்ற அறிகுறிகள், பாதிப்புகள் ஏற்படுவது இல்லை. மற்றபடி தலைவலி, இருமல், மூக்கில் சளித்தொல்லை, வறண்ட தொண்டை, உடல் அதிக சோர்வாக காணப்படுதல் , லேசான காய்ச்சல், சதைகள் வலி, மூட்டுகள் வலி ஆகிய எட்டு அறிகுறிகள் ஓமிக்ரான் நோயாளிகளுக்கு ஏற்பட்டு வருகிறது.

பொதுவானது
இந்த எட்டு அறிகுறிகள்தான் ஓமிக்ரான் நோயாளிகளுக்கு பொதுவாக ஏற்படும் அறிகுறிகளாக உள்ளன. இந்த நிலையில்தான் புதிதாக இரண்டு அறிகுறிகள் ஓமிக்ரான் நோயாளிகளிடம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. The ZOE என்று கொரோனா சோதனை அமைப்பு நடத்திய ஆய்வில் இரண்டு புதிய அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதல் புதிய அறிகுறி வாந்தி எடுப்பது.

பசியின்மை
கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு வாந்தி பாதிப்பு ஏற்பட்டால் அது ஓமிக்ரான் அறிகுறியாக கருதப்படும் என்று இதில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் பசியின்மை இன்னொரு ஓமிக்ரான் அறிகுறியாக இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓமிக்ரான் நோயாளிகள் பலருக்கு பசியின்மை பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் அதுவும் புதிய ஓமிக்ரான் அறிகுறியாக சேர்க்கப்பட்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications