மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை.. வரப்போகும் கூடுதல் கட்டுப்பாடுகள்?
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டவது அலை அதிவேகமாக குறைந்து வந்தது. இதனால் அரசும், மக்களும் நிம்மதியாக இருந்த நிலையில் ஓமிக்ரான் வைரஸ் புகுந்த நேரத்தில் இருந்து தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
கடந்த மாத தொடக்கத்தில் பாதிப்பு 700-க்குள் இருந்த நிலையில் தற்போது தினசரி பாதிப்பு 10,000-ஐ கடந்து விட்டது. ஓமிக்ரான் வைரசும் உச்சத்தில் சென்று விட்டது. சென்னையில் தினம்தோறும் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகி வருகிறது.

ஜனவரி 10ம் தேதி வரை இருக்கும் கட்டுப்பாடுகள்
செங்கல்பட்டு, கோவை., திருவள்ளூர் மற்றும் திருப்பூர், திருவள்ளூர், தூத்துடிக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது நிலைமை இப்படி இருக்க தமிழகத்தில் ஏற்கனவே ஜனவரி 10ம் தேதி வரை ஊரடங்கை நீடித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார். இத்துடன் சேர்த்து பல்வேறு கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டன. அனைத்து பள்ளிகளிலும், வருகிற 10-ம் தேதி வரை 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டது.

இரவு நேர ஊரடங்கு
மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் மெட்ரோ ரயில்களில் 50% பேர் மட்டுமே பயணம் செய்ய அனுமதி, ஜிம்கள், ஹோட்டல்கள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் ஆகியவற்றில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி என்ற பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இது தவிர தற்போது தினமும் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு ஊரடங்கும் தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.

முதல்வர் நாளை ஆலோசனை
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிவேமாக உயரும் நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்துக்கு பிறகு முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது தமிழகத்தின் முக்கிய பண்டிகையான பொங்கல் நெருங்கி வரும் நிலையில் மேலும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
Recommended Video

வரப்போகும் கூடுதல் கட்டுப்பாடுகள்?
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு போடப்பட்டுள்ள நிலையில் கொரோனாவை அதிரடியாக கட்டுப்படுத்த தினமும் முழு லாக்டவுன் போட வாய்ப்பு உளளதாக தகவல்கள் பரவுகின்றன. இப்படி முழு லாக்டவுன் போடாவிட்டாலும் பெரிய கடைகள், தியேட்டர்கள் என மக்கள் அதிமாக திரளும் இடங்கள் மூடப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது மாநிலங்களுக்கு இடையே பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் இந்த பேருந்துகளை நிறுத்த வாய்ப்புள்ளது என்றும் தமிழகத்திலும் மாவட்டங்களுக்கு உள்ளே மட்டும் பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன. மேலும், 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கவும் தடை நீட்டிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications