உச்சத்தில் கொரோனா: கேரளாவிலிருந்து தமிழகம் வருவோருக்கு பரிசோதனை கட்டாயம் - மா.சுப்ரமணியன்
கேரளாவில் இருந்து தமிழ்நாடு வருவோருக்கு கொரோனா நெகடிவ் சான்று கட்டாயம் என, மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை: கேரளாவில் தொற்று அதிகரிப்பால் தமிழக கேரள எல்லை பகுதிகளில் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். பரிசோதனை செய்ய முடியாதவர்கள் 2 தவணை தடுப்பூசி போட்ட சான்றிதழை காண்பிக்க வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் கேரளாவில்தான் அதிக தொற்று ஏற்பட்டுள்ளது.

கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்று ஒரே நாளில் 31ஆயிரத்தை கடந்துள்ளது. ஓணம் பண்டிகையை ஒட்டி தளர்வுகள் அதிகரிக்கப்பட்டதே தொற்று பரவல் காரணமாக அமைந்துள்ளது. வார நாட்களில் முழு முடக்கம் அமல்படுத்தப்படும் என்று கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கன்னியாகுமரி, கோவை மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் கடந்த சில நாட்களாக தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அந்த மாநிலத்தில் இருந்து தமிழகம் வருவோர் கட்டாயம் கொரோனா நெகடிவ் சான்று வைத்திருக்க வேண்டும். 14 நாட்களுக்கு முன்பு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கேரளாவில் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், அங்கிருந்து தமிழகத்துக்கு வருபவர்களுக்கென்று ஏற்கனவே உள்ள வழிகாட்டி நெறிமுறைகளோடு, கூடுதலாக சில நெறிமுறைகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
கேரளாவில் இருந்து ரயில் மூலமாக வருபவர்களுக்கு கோவை ரயில் நிலையத்தில் பரிசோதனை செய்யப்படுகிறது.
கேரளாவில் இருந்து வருபவர்கள் கொரோனா பாதிப்பு இல்லை என சான்று கட்டாயம் வைத்திருக்கவேண்டும். 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என்பது சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.
சென்னை போரூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் அளித்துள்ளார். கேரளாவில் இருந்து தமிழ்நாடு வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. பரிசோதனை செய்ய முடியாதவர்கள் 2 தவணை தடுப்பூசி போட்ட சான்றிதழை காண்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார். மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும் என கூறியுள்ளார்.
கேரளாவில் இருந்து விமானம், கடல், ரயில் மற்றும் சாலை மார்க்கமாக வரும் அனைவரும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அங்கீகரித்த பரிசோதனை கூடத்தில் பரிசோதனை செய்து கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இந்த சான்றிதழ் பயணம் தொடங்குவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பு எடுத்திருக்க வேண்டும். இதேபோல கொரோனா தடுப்பூசி 2 தவணையும் செலுத்தியதற்கான சான்றிதழ் காண்பிக்க வேண்டும். கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது தடுப்பூசி 2 தவணை செலுத்தியதற்கான சான்றிதழ் இவை இரண்டையும் வைத்திருக்க வேண்டும் என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் அதிகமான கொரேனா பரிசோதனை செய்யப்பட்ட மருத்துவமனையாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் விளங்குகிறது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் 24 மணி நேரம் செயல்படக்கூடிய தடுப்பூசி போடும் மையமும் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்த 98.3 சதவீதம் பேர் குணமடைந்து நலமுடன் வீடு திரும்பியுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் இதுவரை 4 ஆயிரத்து 200 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மட்டும் இதுவரை 1,714 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். தற்போது 207 பேர் கருப்பு பூஞ்சை நோய்க்கு உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Recommended Video
தமிழகத்தில் இதுவரை 2 கோடியே 87 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒரே நாளில் மட்டும் இதுவரை இல்லாத அளவில் 4 லட்சத்து 88 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications