கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்.. தண்டனை, இழப்பீட்டால் ஈடு செய்ய முடியாது - கே.பாலகிருஷ்ணன்
சென்னை: சென்னையில் 17 வயது கால்பந்து வீராங்கனை பிரியாவின் இழப்பிற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட்டாலும், இழப்பீடு வழங்கினாலும் ஈடு செய்ய முடியாத இழப்பு என மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்து இருக்கிறார்கள்.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் பிரியா கால்பந்து விளையாட்டில் மாவட்ட, மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
கால்பந்தில் சாதிக்க வேண்டும் என்ற முனைப்போடு விளையாடி வந்த இவரது வலது காலில் வலி ஏற்பட்டதன் காரணமாக அரசு மருத்துவமனையில் பரிசோதித்தார்.

கால் சவ்வு பிரச்சனை
அவரது காலில் சவ்வு பிரச்சனை இருந்ததை தொடர்ந்து கடந்த 7 ஆம் தேதி சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் வீராங்கனை பிரியாவுக்கு 2 மருத்துவர்கள் அதிநவீன அறுவை சிகிச்சை அளித்தனர். இந்த சிகிச்சை நடந்து முடிந்த பின் அவருக்கு இறுக்கமாக கட்டு போடப்பட்டு இருக்கிறது.

இறுக்கமான கட்டு
காலில் இறுக்கமாக கட்டு போடப்பட்டதால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு அவரது ரத்த நாளங்களும் பழுதடைந்தன. இதனால் மாணவியின் உடல்நிலை மோசமானதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கடந்த 8 ஆம் தேதி பிரியா இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

பிரிந்த உயிர்
வீராங்கனை பிரியாவுக்கு ரத்த நாள பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக ரத்த ஓட்டம் நின்றுவிட்டதால் அவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பிரியாவின் சிறுநீரகம், ஈரல், இதயம் ஆகிய உறுப்புகள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று காலை 7:15 மணியளவில் வீராங்கனை பிரியா காலமானார்.

போராட்டம்
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இறந்த பிரியாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. வீராங்கனைக்கு பிரேத பரிசோதனை முடிந்து வீட்டுக்கு கொண்டு செல்லப்பட ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்ட நிலையில் மருத்துவமனை வளாகத்தில் பிரியாவின் மரணத்துக்கு நீதி கேட்டு உறவினர்கள் நண்பர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரியாவின் உடல்
2 மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்திய உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து உடலை அவர்கள் பெற சம்மதித்தனர். இதையடுத்து பிரியாவின் உடல் ஆம்புலன்சில் அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

மா.சுப்பிரமணியன்
நேற்று பிரியாவின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "மருத்துவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள். வீராங்கனையின் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் உடனடியாக வழங்க உத்தரவிட்டு உள்ளது. பிரியாவின் சகோதரர்கள் ஒருவருக்கு அரசு வேலை வழங்க முடிவெடுத்து உள்ளோம்." என்றார்.

கே.பாலகிருஷ்ணன்
இந்த நிலையில் கால்பந்து வீராங்கனை பிரியாவின் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்து உள்ளார். "வீராங்கனை பிரியாவின் இழப்பிற்கு காரணமானவர்கள் தண்டிக்கப் படுவதும், இழப்பீடு வழங்குவதும் அவசியம் எனினும்... என்ன செய்தாலும் ஈடு செய்ய முடியாத இழப்பு இது. ஆழ்ந்த இரங்கல்." என அவர் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications