ரொனால்டோ கால்பந்து வாழ்வின் சறுக்கல்.. ஐரோப்பா லீக்கில் இருந்து வெளியேறியது ஏன்? ரசிகர்கள் வருத்தம்!
சென்னை: நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபியாவின் அல் நஸர்(Al Nassar) என்ற கிளப் அணிக்கு விளையாட புதிய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார். இந்திய மதிப்பில் ரூ.1,770 கோடி ஆண்டு சம்பளத்திற்கு ரொனால்டோவை அல் நஸர் கிளப் ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால் ஐரோப்பா லீக்கை விடுத்து, வேறு நாட்டு லீக் போட்டிகளில் விளையாட ஒப்புக்கொண்டது ரொனால்டோவின் மிகப்பெரிய சறுக்கல் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
சமகால கால்பந்து விளையாட்டின் தூதுவராகவே ரொனால்டோ திகழ்ந்து வருகிறார். இவர் கிளப் போட்டிகளில் கடந்த 2003ம் ஆண்டு, முதல்முறையாக மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர் 2009ம் ஆண்டு முதல் ரியல் மாட்ரிட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட ரொனால்டோ, 2018ம் ஆண்டு யுவெண்டஸ் அணிக்காக விளையாடினார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் மீண்டும் தனது தாய் வீடான மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாட தொடங்கினார். இதனிடையே உலகக்கோப்பைத் தொடருக்கு முன்பாக ரொனால்டோ கொடுத்த நேர்காணல் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் மான்செஸ்டர் யுனைடெட் அணி ரொனால்டோவுடனான ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒப்பந்தம்
இந்த நிலையில் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபியாவின் அல் நஸர்(Al Nassar) என்ற கிளப் அணிக்கு விளையாட புதிய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார். இதன் மூலம் அதிக சம்பளம் பெறும் கால்பந்து வீரர் என்ற சாதனையை ரொனால்டோ பெற்றுள்ளார். சவுதி அரேபிய ஊடகங்களின் தகவல்படி, இந்திய மதிப்பில் ரூ.1,770 கோடி ஆண்டு சம்பளத்திற்கு ரொனால்டோவை அல் நஸர் கிளப் ஒப்பந்தம் செய்துள்ளது.

ரொனால்டோவின் சறுக்கல்
இதன் மூலம் கால்பந்து விளையாட்டில் அதிக சம்பளம் பெறும் வீரர் என்ற புதிய சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார். வழக்கமாக ரொனால்டோவின் இந்த சாதனையை கால்பந்து உலகமே கொண்டாடி இருக்கும். 38 வயதில் இவ்வளவு பெரிய ஒப்பந்தமா என்று வாயடைத்து போயிருக்க வேண்டும். ஆனால் கால்பந்து ரசிகர்கள் ரொனால்டோ எடுத்தது தவறான முடிவு என்றும், அவர் கால்பந்து வாழ்க்கையில் மிகப்பெரிய சறுக்கல் என்றும் விமர்சித்து வருகின்றனர்.

ஐரோப்பா லீக்
ஐரோப்பா, தென் அமெரிக்கா நாடுகளில் நடைபெற்ற லீக் போட்டிகளில் விளையாடிய ரொனால்டோ, இனி சவுதி அரேபியா நாட்டின் லீக் போட்டியில் விளையாடுவதே சறுக்கம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பத்திரிகையாளர் பியர்ஸ் மோர்கன் உடனான நேர்காணலின் போது, ஐரோப்பா லீக்கை விட்டு வேறு எந்த லீக் போட்டியிடும் விளையாட மாட்டேன் என்று ரொனால்டோ உறுதியாக கூறி இருந்தார்.

எந்த அணியும் முன்வரவில்லை
அதற்கு மாறாக சவுதி அரேபியா லீக்கில் ஆடும் அணிக்கு ஒப்பந்தமாகியுள்ளார். அதுமட்டுமல்லாமல் மான்செஸ்டர் யுனைடெட் அணியுடனான மோதலுக்கு பின், ஐரோப்பா லீக்கில் விளையாடும் எந்த அணியும் ரொனால்டோவை ஒப்பந்தம் செய்ய முன்வரவில்லை. இதற்கு ரொனால்டோவின் மனநிலையும் ஒரு காரணம் என்று ரசிகர்களால் விமர்சிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications