Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேகமெடுக்கும் மாண்டஸ் புயல்..இப்போ எங்கே இருக்கு?..கரையை கடக்கும் போது வீசப்போகும் சூறாவளி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாண்டஸ் புயல் நகரும் வேகம் அதிகரித்துள்ளது எனவும் சென்னையில் இருந்து 580 கிலோ மீட்டர் தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளதாகவும் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மாண்டஸ் புயல் காரைக்காலில் இருந்து 460 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. புதுச்சேரி- ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளை இரவு புயல் கரையை கடக்கும் எனவும் புயல் கரையை நெருங்கும்போது மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

சென்னைக்கு 580 கிலோ மீட்டர் தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக இன்று கடலோரப் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும் நாளை தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மிக முதல் அதிக கனமழையும் பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மாண்டஸ் புயல்

மாண்டஸ் புயல்

தென்மேற்கு வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று நள்ளிரவு புயலாக வலுப்பெற்றது. தொடர்ந்து கடந்த ஆறு மணி நேரத்தில் வடமேற்கு திசையில் மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் இந்தப் புயலானது, காரைக்காலுக்கு தென்கிழக்கில் 560 கிலோமீட்டர் தொலைவிலும் , சென்னைக்கு தென்கிழக்கில் 640 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டிருந்தது.

நாளை கரையை கடக்கும்

நாளை கரையை கடக்கும்

தொடர்ந்து இது வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம் புதுவை மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதியை நோக்கி நெருங்கி வரும் நாளை நள்ளிரவு புதுச்சேரிக்கும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விற்கும் இடையே 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்றுடன் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகனமழை

அதிகனமழை

இதன் காரணமாக இன்று கடலோரப் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும் நாளை தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மிக முதல் அதிக கனமழையும் பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்தெரிவித்துள்ளது. கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை வரை பெய்யவாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

புயலின் வேகம் அதிகரிப்பு

புயலின் வேகம் அதிகரிப்பு

புயல் எச்சரிக்கை காரணமாக பல மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவித்துள்ளது. வேலூரில் இன்று பிற்பகல் மற்றும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாண்டஸ் புயலின் நகரும் வேகம் 11 கிலோமீட்டராக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+