ஜில் ஜில் மழை! வங்கக்கடலில் உருவானது சிட்ரங் புயல்! தமிழகத்தில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு!
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள சிட்ரங் புயலால் தமிழகத்தில் இன்றும் நாளையும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக உருவானது.
இந்த புயலுக்கு சிட்ரங் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் பெயரை தாய்லாந்து நாடு சூட்டியது குறிப்பிடத்தக்கது.

சிட்ரங் புயலானது மத்திய வங்கக்கடல் பகுதியில் இருந்து வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வங்காள தேச கடற்கரை பகுதிகளில் டிங்கோனா தீவு -சந்திவிப் இடையே நாளை காலை கரையை கடக்கிறது.
இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. வழக்கமாக அக்டோபர் 3வது வாரத்தில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விடும் நிலையில், சிட்ரங் புயலால் அது காலதாமதம் ஆகியிருக்கிறது.
சிட்ரங் புயல் நாளை கரையை கடந்த பிறகு தான் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளை கணிக்க முடியும் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இதுவரை தமிழகத்தில் இயல்பை விட 49% அதிகமாக மழை பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள- வங்கதேச கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
ஒரிசா கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications