சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சமூக விரோதிகள் புகுந்துட்டாங்க! வாயை விட்டு மாட்டிக் கொண்ட ரஜினிகாந்த்! மீண்டும் கிளம்பும் பூதம்!

Google Oneindia Tamil News

சென்னை : தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ரஜினிகாந்த் தனது வருத்தத்தை தெரிவிக்க வேண்டும் என ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தை சேர்ந்த பேராசிரியை பாத்திமா பாபு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்த நிலையில், வன்முறை மற்றும் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில் தூத்துக்குடி துப்பக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிப்பதற்கு உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணைக்குழு 3000 பக்கங்கள் கொண்ட தனது அறிக்கையை கடந்த மே மாதம் 18ந் தேதி தமிழக முதல்வரிடம் சமர்ப்பித்தது.

 ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: எடப்பாடிக்கு குற்ற உணர்வேயில்லை.. இது கிரிமினல்தனம்! மார்க்சிஸ்ட் ஆவேசம் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: எடப்பாடிக்கு குற்ற உணர்வேயில்லை.. இது கிரிமினல்தனம்! மார்க்சிஸ்ட் ஆவேசம்

அருணா ஜெகதீசன் அறிக்கை

அருணா ஜெகதீசன் அறிக்கை

இந்த அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அறிக்கை குறித்து அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. முன்னதாக தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்து இருந்தார். 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் தூப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த பின் செய்தியாளரிடம் பேசிய அவர்," ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு சமூக விரோதிகளே காரணம் எனக் கூறியிருந்தார் .

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

இதனால் ரஜினிகாந்த் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தது,. இதனையடுத்து அருணா ஜெகதீசன் ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் ரஜினிகாந்த் வன்முறையை ஏவிவிட்டது சமூக விரோதியாக இருக்கலாம் என்று நினைத்தேன் எனக் கூறியிருந்தார். கலவரம் உண்டானது என்று தான் கூறியதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை" என ரஜினிகாந்த் கூறினார். ரஜினிகாந்த் போல் போன்ற பிரபலங்கள் இது போன்ற கருத்தை தெரிவிக்கும் போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்" என அறிவுரை வழங்கி இருந்தது

திடீர் கோரிக்கை

திடீர் கோரிக்கை

இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ரஜினிகாந்த் தனது வருத்தத்தை தெரிவிக்க வேண்டும் என ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தை சேர்ந்த பேராசிரியை பாத்திமா பாபு தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாத்திமா பாபு செய்தியாளர்களை சந்தித்தார்.

எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடி பழனிச்சாமி

அப்போது ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தை கலவரமாக மாற்றியது யார் என்பது அனைவருக்கும் தெரியும். துப்பாக்கி சூடு சம்பவத்தை தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். ஆனால் தூத்துக்குடி கலவரம் பற்றி நொடிக்கு நொடி காவல் துறை சார்பில் அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக ஒரு நபர் ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மன்னிப்பு கேட்க வேண்டும்

மன்னிப்பு கேட்க வேண்டும்

எனவே யாராக இருந்தாலும் அவர்களுக்கு என்ன விதமான அரசியல் பின்புலம் இருந்தாலும் அவர்கள் மீது விசாரணை நடத்தி அவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். மேலும் பொதுமக்கள் தான் காவல்துறையினரை தாக்கியதாக நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார் ஆனால் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தவறுகள் அனைத்தும் காவல்துறை என கூறியுள்ளது. இதனால் நடிகர் ரஜினிகாந்த் தனது வருத்தத்தை தெரிவிக்க வேண்டும்" என அவர் கேட்டுக்கொண்டார்.

English summary
Professor Fatima Babu of the People's Movement Against Sterlite Plant said that Rajinikanth should express his regret for commenting on the Thoothukudi shooting incident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X