பட்டி தொட்டியெங்கும் 'செவ்வாடை' 'இருமுடி' வழி ஆன்மீகத்தை பரப்பிய 'மேல்மருவத்தூர் சக்தி அம்மா'!
சென்னை: தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எங்கும் மேல்மருவத்தூரில் இருந்தபடியே செவ்வாடை, இருமுடி, கஞ்சி கலயம் வழியே ஆன்மீகத்தை பரப்பியவர் 'மேல்மருவத்தூர் சக்தி அம்மா' என போற்றப்படுகிற, இன்று காலமான மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார்!
தமிழ்நாட்டின் ஆன்மீக அடையாளங்களில் ஒன்றாக உருவெடுத்திருப்பது மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி அம்மா. "சுயம்பு" ஆதி பராசக்தியாக தம்மை பிரகடனப்படுத்திய மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் 'பீடங்கள்' (கிளைகள்) வட தமிழ்நாடு தான் என்று இல்லை.. தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களிலும் உண்டு. இந்த சக்தி பீடங்கள் வழியே குக்கிராமங்களையும் மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி "அம்மா" சென்றடைந்திருக்கிறார்.

1990களில் தமிழ்நாட்டின் கிராமங்களில் மார்கழி பூஜை வழிபாடு , இந்துத்துவா அமைப்புகளின் பின்னணியில் பரவியது. மார்கழி பூஜை வழிபாட்டுக்கு இணையான பேராதரவை அண்மைய ஆண்டுகளில் எந்த ஒரு அரசியல் வழி / ஆன்மீக சித்தாந்த வழி பின்புலம் இல்லாமல் பெற்றிருப்பது மேல்மருவத்தூர் ஆதி பரசாக்தி அம்மா வழிபாடு.
தமிழ்நாட்டின் குக்கிராமங்களில் இருந்து முருகன் கோவில்களுக்கும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கும் படை படையாக பக்தர்கள் திரண்டு செல்வது பன்னெடுங்காலமாக நிகழ்ந்து வரும் ஒரு ஆன்மீக நிகழ்வு. இதற்கு சமமான ஒரு ஆன்மீக பயணமாக அல்லது யாத்திரையாக அண்மை காலங்களில் இடம்பிடித்திருப்பது மேல்மருவத்தூர் பயணம்.
மேல் மருவத்தூர் யாத்திரை காலங்களில் பெண் பக்தர்கள், செவ்வாடை அணிந்து இதர கோவில்களுக்கு செல்வதைப் போலவே விரதம் இருந்து கூட்டம் கூட்டமாக பேருந்துகளில் மேல்மருவத்தூர் நோக்கி பயணிப்பது தங்களது ஆன்மீக கடமைகளில் ஒன்றாகவே இணைத்துக் கொண்டுவிட்டனர். சபரிமலைக்கு பக்தர்கள் செல்லும் பாணியில் பீடங்களுக்கு போய் மாலை அணிவித்து விரதம் மேற்கொள்வர். பின்னர் சபரிமலைக்கு செல்வதைப் போல மேல்மருவத்தூர் அம்மா கோவிலுக்கு "இருமுடி" கட்டிச் செல்வதும் உண்டு. கூடுதலாக அம்மனுக்கு உரிய கஞ்சி கலயம் சுமப்பதை பிரார்த்தனையாக- வேண்டுதலாக நிறைவேற்றுகிற பக்தர்களும் உண்டு.
இத்தனைக்கும் தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எங்கும் மேல்மருவத்தூர் சக்தி அம்மா எனப்படும் பங்காரு அடிகளார் பிரசாரம் செய்யப் போனதும் இல்லை. மேல்மருவத்தூர் அம்மா எனும் "சக்தி" மீதான இறை நம்பிக்கை வழியே இத்தகைய வழிபாட்டு முறை பரவிக் கிடக்கிறது. பெண்கள் மட்டுமே செல்லக் கூடிய, பெண்கள் மட்டுமே கருவறைக்குள் நுழைந்து பூஜை செய்யக் கூடிய பெண்களின் புனித தலமாக மேல்மருவத்தூரை உருவாக்கியவர் பங்காரு அடிகளார் சுவாமிகள். மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் சுவாமிகள் இறைவனடியில் இரண்டற கலந்தது செவ்வாடை பக்தர்களுக்கு பெருந்துயரம்!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications