சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிறந்தது 2023.. 'நல்லதே நடக்கனும்'.. அதிகாலையில் கோவில்களில் குவிந்த பக்தர்கள்.. அலைமோதும் கூட்டம்!

Google Oneindia Tamil News

சென்னை: ஆங்கில புத்தாண்டை ஒட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நள்ளிரவு நடைபெற்றது. அதேபோல், முக்கிய கோவில்களிலும் அதிகாலையில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆங்கிலப் புத்தாண்டு தினம் உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. 2022-ம் ஆண்டு விடைபெற்று 2023-ம் ஆண்டு அடியெடுத்து வைத்துள்ளது.

புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடி வரவேற்றனர். புத்தாண்டு தினத்தை ஒட்டி இன்று அதிகாலை கோவில்களில் சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அதிக பக்தர்கள் வருகை.. இந்தியாவில் திருப்பதிக்கு 2ம் இடம்.. முதல் இடத்தில் எந்த கோவில் பாருங்க! அதிக பக்தர்கள் வருகை.. இந்தியாவில் திருப்பதிக்கு 2ம் இடம்.. முதல் இடத்தில் எந்த கோவில் பாருங்க!

பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவில் சிறப்பு பிராத்தனை நடைபெற்றது. புத்தாண்டு தினத்தில் இந்த ஆண்டு முழுவதும் சுபிட்சமாக அமைய வேண்டும் என்ற எண்ணத்த்துடன் கோவில்களிலும் மக்கள் தரிசனத்திற்கு குவிவதுண்டு. அந்த வகையில் இன்று தமிழகத்தின் பிரசித்தி பெற்ற பல கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் இன்று அதிகாலை பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

சென்னையில் உள்ள கோவில்களில்

சென்னையில் உள்ள கோவில்களில்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவில், திருவெற்றியூர் வடிவுடையம்மன் ஆலயம், பாரிமுனையில் உள்ள காளிகாம்பால் கோவில் உள்ளிட்ட பல முக்கிய கோவில்களிலும் புத்தாண்டையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்ட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 100 க்கும் மேற்பட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

சிறப்பு பூஜைகள்

சிறப்பு பூஜைகள்

பக்தர்கள் அதிகாலையில் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தனர். இதனால் கோவில்களில் கூட்டம் அலைமோதியது. புத்தாண்டை ஒட்டி அனைத்து முக்கிய கோவில்களிலும் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்ந்தது. பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. அதேபோல், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் புத்தாண்டை ஒட்டி அதிகாலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். கோவிலில் அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் வரிசையாக நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். புத்தாண்டை முன்னிட்டு மீனாட்சி அம்மனுக்கும் சுந்தரேஸ்வர்ர் சுவாமிக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

போலீசார் பாதுகாப்பு பணி

போலீசார் பாதுகாப்பு பணி

பிள்ளையர்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கபப்ட்ட நிலையில் 8 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. திண்டுக்கல் எஸ்.பி பாஸ்கரன் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் பதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

English summary
A special midnight prayer was held in churches on the occasion of English New Year. Likewise, devotees thronged the main temples to have darshan of Sami early in the morning. At Madurai Meenakshi Amman temple, devotees have been standing in long queues since 4 am to have darshan of Sami.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X