கைலாசாவில் கலாசலா! காலாவதி பாஸ்போர்ட்.. நித்யானந்தாவுடன் ஐக்கியமான மீரா மிதுன்? அவரே சொல்லிருக்கார்!
சென்னை : பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தலைமறைவாக இருக்கும் நடிகை மீரா மிதுனின் பாஸ்போர்ட் காலாவதியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவர் வெளிநாடு தப்பிச்செல்ல வாய்ப்பில்லை என்றும், ஒருவேளை நித்தியானந்தாவின் கைலாசா நாட்டில் தஞ்சம் அடைந்து இருக்கலாம் என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை மீரா மிதுன் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசினார். இதன் காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடிகை மீரா மிதுன் மற்றும் அவருடைய நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அந்த புகாரின் படி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சில நாட்கள் விசாரணைக்குப் பிறகு இருவரும் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். இதனால் அவருக்கு நெகட்டிவ் பப்ளிசிட்டி கிடைத்தது.

மீரா மிதுன்
அதன் பிறகு மீரா மிதுன் மற்றும் சாம் அபிஷேக் ஆகியோர் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், விசாரணைக்கு மீரா மிதுன் ஆஜராகாததால் அவர் மீது பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் மீரா மிதுன் தலைமறைவாகிவிட்டார். கடந்த மாதம் 19-ம் தேதி கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது மீரா மிதுனை தொடர்ந்து தேடி வருவதாகவும் அவருடைய குடும்பத்தை கண்காணித்து வருவதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

தலைமறைவு
ஆனால் தொடர்ந்து மீரா மிதுன் தலைமறைவாக இருப்பதால் அவரை போலீசால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளனர். அதாவது லுக் அவுட் நோட்டீஸ் அனுப்புவதற்கு காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். மேலும் இதன் மூலம் தலைமறைவாக இருக்கும் மீரா மிதுன் கூடிய விரைவில் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாஸ்போர்ட் காலாவதி
இந்நிலையில் தான் நடிகை மீரா மிதுனின் பாஸ்போர்ட் காலாவதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அவர் விமான நிலையங்களில் இருந்து வெளி நாட்டிற்கு தப்பிச் செல்ல முடியாது. அதே நேரத்தில் அவர் தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட ஏதாவது ஒரு அண்டை மாநிலத்தில் தான் இருப்பார் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

கைலாசாவில் இருப்பாரோ?
பல பல பெரும் புள்ளிகளையே அலற விட்ட காவல்துறைக்கு மீரா மிதுன் ஒரு பொருட்டே இல்லை என்றாலும், அவரை கைது செய்ய நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மீரா மிதுன் நித்யானந்தாவின் கைலாசாவுக்கு சென்றிருக்கலாம் என கிண்டல் செய்து வருகின்றனர். காரணம் கடந்த சில வருடங்களுக்கு முன் நான் கைலாசாவுக்கு சீக்கிரம் செல்வேன் என மீரா மிதுன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். அதனை வைத்து தற்போது அங்கே போயிருப்பார் விசாரிங்க என மீம்ஸ்களை பறக்க விட்டு வருகின்றனர்.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications