ஆசை ஆசையா கிட்ட போன நபர்.. எடப்பாடி டக்குனு செய்த வேலைய பாருங்க.. மேடையிலேயே.. வீடியோ வேற வந்துடுச்சே
சென்னை: எடப்பாடி பழனிசாமியின் சேலம் புத்தக வெளியீட்டு விழாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்று, சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளது.. இதுகுறித்த வீடியோவும் இணையத்தில் வெளியாகி உள்ளது.
சேலம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ஏ.வி.ராஜு அவர்களின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா, சேலம் ஸ்டீல் பிளான்ட் ரோட்டின் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது
இந்த சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்பித்தார். ஏ.வீ ராஜுவின் சுய சரிதை நூலையும் வெளியிட்டார்.
'டார்கெட் 4’.. டைரக்ட் அட்டாக்! எடப்பாடி பழனிசாமியின் அதிரடி மூவ்களுக்கு பின்னே பரபர பிளான்கள்!

கரெப்ஷன் கனெக்ஷன்
அப்போது விழாவில் எடப்பாடி பேசும்போது, வழக்கம்போல் திமுகவை லிஸ்ட் போட்டு குற்றஞ்சாட்டினார்.. "திமுக ஆட்சியில் தமிழக மக்கள் அதிக அளவில் வேதனையில் உள்ளனர்.. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது.. போதைப் பொருட்கள் அதிக அளவில் நடமாட்டம் உள்ளன.. சொத்து வரி வீட்டு வரி குடிநீர் வரி அனைத்தும் பன்மடங்கு உயர்த்திவிட்டது திமுக அரசு.. அதிமுக முன்னாள் நிர்வாகிகள்தான் இப்போது திமுகவில் 8 அமைச்சர்களாக உள்ளனர்.. அந்த கட்சியில் உழைத்தாலும் பதவி கிடைக்காது.. திமுகவில் கமிஷன் கொடுத்தால்தான் பதவி கிடைக்கும்..

எம்ஜிஆர் பெரியப்பா
எம்ஜிஆர் பெயரை சொன்னால்தான் வாக்கு கிடைக்கும் என்பதால், நமது புரட்சி தலைவர் பெயரை ஸ்டாலின் புகழ்கிறார்.. திமுக தலைவர் ஸ்டாலின், எம்ஜிஆரின் புகழ் பாடுகிறார் என்றால், அது அதிமுகவுக்கு கிடைத்த பெயர்.. அதனால்தான், எம்ஜிஆரை பெரியப்பா என்கிறார் ஸ்டாலின்.. விரைவில் ஸ்டாலின், அதிமுகவில் சேர்ந்துவிடும் நிலைகூட வரலாம்... முதல்வர் ஸ்டாலின், நாட்டு மக்களை பற்றி கவலை கொள்ளாமல், வீட்டு மக்களை பற்றிதான் சிந்தித்து வருகிறார்.. இப்போது அதிமுக தொண்டன் திமுகவையே வழிநடத்தி செல்கிறான்.. தொண்டன் எங்கு சென்றாலும் கோலூன்றி நிற்கிறான்" என்று பேசியுள்ளார் எடப்பாடி.

ஃப்ளக்ஸ் பேனர்
இப்படி மூச்சுக்கு முன்னூறு தடவை, தொண்டனை பற்றி எடப்பாடி பழனிசாமி பெருமையாக பேசியுள்ள அதே மேடையில்தான் ஒரு சர்ச்சை வெடித்துள்ளது.. அது தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது.. இந்த புத்தக வெளியீட்டு விழாவின் ஏற்பாடுகளே, சேலத்தில் மிக சிறப்பாக நடந்ததாம்.. விழா நடப்பது ஒரு இடத்தில் என்றாலும், எடப்பாடி வருகைக்கான ஃபிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் என எங்கே பார்த்தாலும் அமர்க்களப்படுத்தி இருந்தார்கள்.. சொந்த தொகுதிக்கு எடப்பாடி வர உள்ளதால், ஏராளமான தொண்டர்கள் இந்த விழாவுக்கு திரண்டு வந்திருந்தனர்.

நாற்காலி
மேடையில் எடப்பாடி பழனிசாமி உட்கார்ந்திருந்தார்.. அவருக்கு மட்டும் ஒரே ஒரு நாற்காலி போடப்பட்டிருந்ததா என தெரியவில்லை.. ஏனென்றால் மேடையையே மறைக்கக்கூடிய அளவுக்கு, எடப்பாடியை சுற்றி ஏராளமான முக்கிய நபர்களும் நிர்வாகிகளும், சூழ்ந்து நின்றிருந்தனர்.. சிலருக்கு பரிசுகள் தரும் நிகழ்வும் நடந்து கொண்டிருந்தது.. மேடையில் எடப்பாடி உட்கார்ந்திருந்தால், கூட்டத்தில் இருந்து ஒரு அதிமுக தொண்டர், எடப்பாடிக்கு வணக்கம் சொல்வதற்காக மேடையை நோக்கி சென்றார்.. எடப்பாடி அருகில் சென்று அவருக்கு கை கொடுத்து வணக்கம் தெரிவிக்க முயன்றார்..

இரு கை நீட்டி
அதற்காக, அந்த தொண்டர் தன்னுடைய இரு கைகளையும் நீட்டி, அருகில் வந்தபோது, வெடுக்கென தன் கைகளை மேலே தூக்கி கொண்டார் எடப்பாடி.. கை கொடுக்க ஆசையாக வந்த தொண்டருக்கு எடப்பாடியின் இந்த செயல் ஏமாற்றத்தையே தந்தது.. அவ்வளவு கூட்டத்தையும் தாண்டி அருகில் நின்று, இரு கைகள் நீட்டுவதை பார்த்தும், எடப்பாடி கைகளை கொடுக்க மறுத்ததால், அந்த தொண்டர், வணக்கம் மட்டும் சொல்லிவிட்டு போனார்.. இந்த வீடியோதான் இணையத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது..

தோளை தொட்டு
இதையடுத்து, தொண்டர்களை மதிக்க தவறிவிட்டாரா எடப்பாடி? என்று ஒரு க்ரூப் கேள்வி எழுப்பி கொண்டிருக்கிறது... இப்படித்தான், 4 மாதத்துக்கு முன்பு, ஓபிஎஸ்ஸை சந்தித்து பேச தினமும் தொண்டர்கள் அவரது வீட்டில் குவிந்து கொண்டிருந்தனர்.. அவர்களை தினமும் நேரில் சந்தித்து பேசியதுடன், அவர்களை கைகளை குலுக்கியும், தோளில் தட்டியும் ஓபிஎஸ் பேசி உற்சாகம் தந்தார்.. இறுதியில் ஓபிஎஸ்ஸுக்கு தொற்று பாதிப்பும் ஏற்பட்டு, ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகும் அளவுக்கு போய்விட்டார்..

தர்மசங்கடங்கள்
இப்போது கொரோனா பாதிப்பு அவ்வளவாக இல்லாத நிலையில், அந்த தொண்டருக்கு ஏன் எடப்பாடி கை கொடுக்கவில்லை? அல்லது தொண்டர்களுக்கு கை கொடுப்பதில் வேறு ஏதேனும் தர்மசங்கடங்கள் எடப்பாடிக்கு இருக்கிறதா? என்றெல்லாம் கேள்வியை சிலர் கிளப்பி விட்டுள்ளனர்.. அதிமுகவில் நிர்வாகிகளின் 95 சதவீத ஆதரவை பெற்றுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு, அவ்வளவாக தொண்டர்கள் ஆதரவு இல்லை என்று சலசலக்கப்பட்டு வரும் இந்த சூழலில், இப்படி ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பி கொண்டுள்ளது..!!!

உதறிய கை
இந்த நிகழ்வு நடந்தபோது, எடப்பாடி பழனிசாமியை சுற்றிலும் ஏராளமானோர் திரண்டிருந்தனர்.. கையை உதறிய எடப்பாடியின் இந்த செயலை நேரடியாகவே பார்த்து, அரங்கில் இருந்த அதிமுகவினர் அதிர்ந்து போனதாகவும் கூறப்படுகிறது.. இத்தனைக்கும் எடப்பாடி உட்கார்ந்திருந்த மேடையிலேயே பின்பக்கம், மிகப்பெரிய சைஸில், இந்த நிகழ்ச்சி லைவ் ஆக ஓடிக் கொண்டிருக்கிறது.. எடப்பாடி முன்பக்கம், ஏராளமானோர் அவரை செல்போனில் வீடியோவையும் எடுத்து கொண்டிருக்கிறார்கள்.. மீடியாவும் அங்கேயேதான் இருக்கின்றன.. இவ்வளவு இருந்தும், எடப்பாடி பழனிசாமி ஏன், கையை உதறிவிட்டார் என்பதுதான் பெருத்த கேள்வியாக எழுந்து வருகிறது.