சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சிராஜ் எங்கே? உம்ரான் மாலிக் எங்கே? இந்திய அணியில் இஸ்லாமியர்கள் புறக்கணிப்பா? கொதிக்கும் ஃபேன்ஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: உலகக் கோப்பை டி 20 2022 தொடருக்காக தேர்வாகி இருக்கும் இந்திய அணியில் இஸ்லாமிய வீரர்கள் யாரும் இடம்பெறாதது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. நெட்டிசன்கள் இது தொடர்பாக விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

ஆசிய கோப்பை 2022 தொடரில் இந்திய அணி வெற்றிபெறும் என்ற பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்த தொடரில் மிக மோசமாக ஆடி இந்திய அணி வெளியேறியது. இந்த தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றியோடுதான் தொடங்கியது.

இதனால் இந்திய அணி மீது பெரிய அளவில் நம்பிக்கை இருந்தது.

ஆனால் அதன்பின் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த அடுத்த சூப்பர் 4 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. அதேபோல் இலங்கைக்கு எதிராக நடந்த அடுத்த போட்டியிலும் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

இதனால் பைனல்ஸ் செல்லும் வாய்ப்பை இந்திய அணி இழந்தது.

ஆசியக் கோப்பை: ”போர் கண்ட சிங்கம்” இலங்கை கிரிக்கெட்டுக்கு புத்துயிர் கொடுத்த ”ஒரு ஆபத்து” ஆசியக் கோப்பை: ”போர் கண்ட சிங்கம்” இலங்கை கிரிக்கெட்டுக்கு புத்துயிர் கொடுத்த ”ஒரு ஆபத்து”

ஆசிய கோப்பை 2022

ஆசிய கோப்பை 2022

ஆசிய கோப்பை தொடரில் தோல்வி அடைந்த நிலையில் நேற்று உலகக் கோப்பை டி 20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அக்டோபர் மாதம் இந்த தொடர் நடக்க உள்ளது. இந்த அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன, இந்திய அணியில் ரோஹித் சர்மா, ராகுல், கோலி, சூர்யா குமார் யாதவ், தீபக் ஹூடா, ஆர். பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, அஸ்வின், சாஹல், அக்ஸர் பட்டேல், பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல், அர்ஷிதீப் சிங் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். இது இந்தியாவிற்காக தேர்வு செய்யப்பட்ட மெயின் அணி ஆகும். இதில் இஸ்லாமிய வீரர்களே இல்லை.

உலகக் கோப்பை டி 20 2002

உலகக் கோப்பை டி 20 2002

மாற்று வீரர்கள் லிஸ்டில் ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஸ்னோய், தீபக் சாகர், முகமது ஷமி உள்ளனர். இந்த மாற்று வீரர்கள் லிஸ்டில் மட்டுமே ஷமி இருக்கிறார். முன்னதாக ஆசிய கோப்பை தொடரில் இஸ்லாமிய வீரர்கள் யாருமே இல்லை. இந்திய அணியில் ஷமி, சிராஜ், உம்ரான் மாலிக் போன்ற வீரர்கள் சிறப்பாக பவுலிங் செய்கிறார்கள். சிராஜ் கவுண்டியில் நன்றாக பவுலிங் செய்து வருகிறார். உம்ரான் மாலிக் கடந்த இரண்டு இந்திய தொடர்களில் நன்றாக பவுலிங் செய்தார்.

இந்திய அணி

இந்திய அணி

ஷமி பல முறை உலகக் கோப்பை போன்ற தொடர்களில் தன்னை நிரூபித்து இருக்கிறார். அப்படி இருந்தும் அவர்களை இந்திய அணியில் பிசிசிஐ சேர்க்கவில்லை. கடந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி வெளியேற காரணம் அணியின் மோசமான பவுலிங். இந்திய அணி வீரர்கள் மிக மோசமாக பவுலிங் செய்தனர். யாரும் பெரிதாக 140 கிமீ வேகத்திற்கு அதிகமாக பந்து வீசவில்லை. இந்திய அணியின் தோல்விக்கு பவுலிங்கில் சொதப்பியது முக்கிய காரணமாக இருந்தது.

ஷமி எங்கே?

ஷமி எங்கே?

இந்த நிலையல்தான் உலகக் கோப்பை டி 20 தொடரிலும் இந்திய அணியில் இஸ்லாமிய பவுலர்கள் இல்லாதது கேள்விகளை எழுப்பி உள்ளது. நெட்டிசன்கள் பலர் இதை பற்றி கேள்வி எழுப்பி உள்ளனர். அதில், ஏன் இந்திய அணியில் இஸ்லாமிய வீரர்கள் இல்லை. பொதுவாக 2-3 இஸ்லாமிய பவுலர்கள் இருப்பார்களே. இதுவரை உலகக் கோப்பை தொடர்கள் அனைத்திலும் அப்படித்தானே இருந்துள்ளனர். ஆனால் இந்த முறை ஏன் அப்படி வீரர்கள் யாருமே இல்லை.

சிராஜ் எங்கே?

சிராஜ் எங்கே?

ஷமி கூட மாற்று வீரராகவே இருக்கிறார். ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வி அடைய மோசமான பவுலிங்தான் காரணமாக இருந்தது. ஆனால் அப்படி இருந்தும் இந்த முறை நல்ல பவுலர்களை ஏன் இந்திய அணி எடுக்கவில்லை. ஆஸ்திரேலியா போன்ற பிட்சில் ஷமி போன்ற வீரர்கள் சிறப்பாக பவுலிங் செய்வார்களே. என்ன நடந்தது? என்று நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். இதுதான் இந்தியாவா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்,

English summary
Did Muslim players side line in Team India T 20 world cup squad? What happened?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X