சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆர்எஸ்எஸ் என்பதால், பள்ளி ஓனர் விஷயத்தில் பாஜக அமைதி காக்கிறதா.. வானதி சீனிவாசன் சொன்ன பதிலை பாருங்க

ஆர்எஸ்எஸ் சேர்ந்த பள்ளி நிர்வாகி மற்றும் கலவரம் குறித்து வானதி பேட்டி தந்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: ஆர்எஸ்எஸ்ஸை சேர்ந்தவர் என்பதால்தான், கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தாளாளர் மீது மென்மைப்போக்கை பாஜக கடைப்பிடிக்கிறதா என்ற கேள்விக்கு, வானதி சீனிவாசன் பதில் தந்துள்ளார்... ஒன் இந்தியாவுக்கு அளித்த சிறப்பு பேட்டியில், தன்னுடைய பதிலை வானதி தந்துள்ளார்.

Recommended Video

    Kallakurichi விவகாரத்தில் திமுக அரசு தோல்வியடைந்துள்ளது- பாஜக வானதி சீனிவாசன் MLA காட்டம்

    கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தின் கொதிப்பு இன்னும் அடங்கவில்லை.. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளியை கண்டித்து போராட்டம் நடந்தது.

    மாணவி மரணம்..பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கு ஆக.1 வரை நீதிமன்ற காவல் - சேலம் சிறையில் அடைப்பு மாணவி மரணம்..பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கு ஆக.1 வரை நீதிமன்ற காவல் - சேலம் சிறையில் அடைப்பு

    அந்த போராட்டம், வன்முறையாக வெடித்தது.. இந்த வன்முறை தொடர்பாக 350 க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்..

    தாளாளர்

    தாளாளர்

    அதேபோல, பள்ளியின் தாளாளர் சக்தி ரவிக்குமார், முதல்வர் சிவசங்கரன், பள்ளியின் செயலாளர் சாந்தி ரவிக்குமார் ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளன.. இதனிடையே, பள்ளியின் தாளாளர் சக்தி ரவிக்குமார் பாஜகவின் தமிழ் வளர்ச்சிக்குழுவின் முன்னாள் மாநில அமைப்பாளராக இருந்துள்ளதாவும், எச்.ராஜா நடத்தி வரும் இந்து ஆலயங்கள் மீட்பு இயக்கத்தில் அவர் தொடர்ந்து பங்கேற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.. எச்.ராஜாவுடன் மேடையில் அவர் நின்றிருக்கும் போட்டோக்களும் சோஷியல் மீடியாவில் வெளியாகின.

    ஆர்எஸ்எஸ்

    ஆர்எஸ்எஸ்

    அதுமட்டுமல்லாமல், இந்த பள்ளியில் கடந்த 2019ம் ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பின் பண்பு பயிற்சி முகாம் நடைபெற்றதாக அப்போதே ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி உள்ளன.. கடலூர், புதுச்சேரி, விழுப்புரத்திலிருந்து 120 பேர் கலந்துகொண்ட இந்த முகாமில் தேச பக்தி, ராணுவ நடைபயிற்சி, சிலம்பம், கராத்தே போன்ற பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.. அதேபோல, இதற்கு முன்பாகவும் அங்கு பலமுறை ஆர்எஸ்எஸ் சார்ந்த நிகழ்வுகள் நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தபடியே உள்ளன.

     வானதி சீனிவாசன்

    வானதி சீனிவாசன்

    இப்படிப்பட்ட சூழலில், பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் நம் ஒன் இந்தியாவுக்கு பிரத்யேக பேட்டி தந்துள்ளார்.. அவரிடம், கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பினோம்.. குறிப்பாக, சம்பவம் நடந்த சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளரும், ஸ்கூலின் ஓனர் ஆர்எஸ்எஸ்ஸை சேர்ந்தவர் என்றும், பாஜகவின் நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார், அதனால்தான், இந்த விவகாரத்தில் பாஜக, மென்மைப்போக்கை கையில் எடுப்பதாக கூறப்படுகிறது.. இது உண்மையா? என்று கேள்வி முன்வைக்கப்பட்டது.

     சாப்ட்கார்னர்

    சாப்ட்கார்னர்

    அதற்கு வானதி சீனிவாசன், எனக்கு அதை பற்றி தெரியல.. அந்த தகவலும் எனக்கு தெரியல என்றார்.. பிறகு, "அந்த பள்ளியின் ஓனர் பாஜக கூட்டங்களில் கலந்து கொண்ட போட்டோக்கள் எல்லாம், சமூக வலைதளங்கள் முழுக்க உள்ளதே, அந்த பள்ளியில் ஆர்எஸ்எஸ்ஸின் முகாம் நடந்திருக்கு, அதனால்தான் பாஜக இந்த விவகாரத்தில் மென்மையான போக்கை கடைப்பிடிப்பதாக ஒரு குற்றச்சாட்டாக முன்வைக்கிறார்கள் என்று மீண்டும் வானதியிடம் நாம் கேள்வி எழுப்பினோம்.

    ஸ்கூல்

    ஸ்கூல்

    அதற்கு வானதி, "அப்படி எல்லாம் இல்லை.. இந்த விவகாரத்தில் பள்ளியின் நிர்வாகியையோ, பள்ளியையோ காப்பாற்ற வேண்டும் என்று எண்ணம் இருந்தால், எங்களின் பாஜக உள்ளூர் நிர்வாகிகள் உடனடியாக பாதிக்கப்பட்ட குடும்பத்தை சென்று ஏன் சந்திக்க வேண்டும்? நானும் அண்ணாமலையும் தஞ்சாவூர் சென்று வரவே 10 நாள் ஆகிவிட்டது.. அதனால், பிறகுதான் நாங்களே சென்றோம்.. இருந்தாலும், அங்கிருக்கும் பாஜக நிர்வாகிகள், அக்குடும்பத்தினரை முதலிலேயே சந்தித்து பேசினார்கள்.. மற்றபடி இதில் எந்த மென்மைத்தன்மையும் கிடையாது.. கட்சிக்காரர்களே தவறு செய்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறது பாஜக.. என்றார்.

     டிஆர்பி ராஜா

    டிஆர்பி ராஜா

    "இன்னொரு தூத்துக்குடியை இங்கு உருவாக்க முயற்சித்தார்கள், ஆனால் எங்கள் காவல்துறை அதை தடுத்துவிட்டது என்று டிஆர்பி ராஜா குற்றச்சாட்டை முன்வைக்கிறாரே" என்று அடுத்த கேள்வி கேட்கப்பட்டது.. இதற்கு வானதி சீனிவாசன், "அப்ப தூத்துக்குடி கலவரத்துக்கு திமுகதான் காரணமா? அதனால்தான் அந்த கலவரக்காரர்கள் மீதுள்ள வழக்கை ரத்து செய்தார்களா? அதுக்கப்பறம்தான் அரசாங்கத்தோட பணத்தை எடுத்து அவங்களுக்கு உதவி செய்தாங்களா? அந்த துப்பாக்கி சூடு எப்படி வந்தது? தானாகவே வந்துவிட்டதா? அப்படின்னா, அதுக்கு பின்னாடி இருந்தது திமுகதான் என்பதை டிஆர்பி ராஜா ஒப்புக் கொள்கிறாரா?" என்று பதில் கேள்வி எழுப்பினார்.

     வானதி பதிலடி

    வானதி பதிலடி

    தொடர்ந்து பேசிய வானதி, "முதலில், இதுபோன்ற தற்கொலை விஷயங்களில் நாங்கள் உடன்படவில்லை.. திருப்பி திருப்பி இதெயெல்லாம் நாம் பெரிதுப்படுத்தும்போது, ஒருவித மன அழுத்தத்திற்கு நாம் ஆளாக்குகிறோம்.. சம்பவம் நடந்துள்ளது என்று சொன்னால், அதற்காக பள்ளியை தீக்கிரையாக்குவதும், அதை அடித்து உதைப்பதும் ரொம்ப ரொம்ப துரதிருஷ்டமான விஷயம்.. தமிழ்நாட்டில் இது நடந்துட்டு இருக்கு.. தமிழ்நாட்டின் உளவுத்துறை என்ன பண்ணிட்டு இருக்காங்க? காவல்துறை என்ன பண்றாங்க?" என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

    English summary
    did rss camp conduct in sakthi school and bjp vanathi srinivasans exclusive interview ஆர்எஸ்எஸ் சேர்ந்த பள்ளி நிர்வாகி மற்றும் கலவரம் குறித்து வானதி பேட்டி தந்துள்ளார்
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X