சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்- இயக்குநர் பாக்யராஜ் காட்டம்

Google Oneindia Tamil News

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் விமர்சனம் செய்துள்ளார்.

Recommended Video

    Bhagyaraj | Modi-யை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் | Oneindia Tamil

    சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் பாக்யராஜ் இவ்வாறு பேசியிருந்தார். "பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் - புதிய இந்தியா 2022" எனும் நூல் வெளியீட்டு விழா சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்றது.

    இந்த விழாவில் நடிகர் பாக்யராஜ், பாஜக தலைவர் அண்ணாமலை, பொருளாளர் எஸ்.ஆர். சேகர், கரு நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அந்த விழாவில் பிரதமர் மோடி குறித்து பாக்யராஜ் பேசியிருந்தார்.

    ஆளுநர் கான்வாய் மீது கற்கள் வீச்சு.. சட்டம் ஒழுங்கு சரியில்லை.. அமித்ஷாவுக்கு அண்ணாமலை கடிதம் ஆளுநர் கான்வாய் மீது கற்கள் வீச்சு.. சட்டம் ஒழுங்கு சரியில்லை.. அமித்ஷாவுக்கு அண்ணாமலை கடிதம்

    பிரதமர் மோடி

    பிரதமர் மோடி

    அதில் பிரதமர் மோடியை குறை சொல்பவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். முன்னாடியெல்லாம் பிரதமர் நரேந்திர மோடி ஆனா ஊன்னா பிரதமர் மோடி வெளிநாடு சென்று விடுகிறார் என்பார்கள். வெளிநாடு போற அளவுக்கு உடம்புல யாருக்கு சக்தி இருக்கிறது. எனக்கு தெரிந்து நம்ம வெளிநாடுக்கு 24 மணி நேரத்தில் இருந்து 48 மணி நேரம் பயணம் செய்தால் 3 நாட்கள் ரெஸ்ட் தேவைப்படும்.

    வெளிநாடு பயணம்

    வெளிநாடு பயணம்

    ஆனால் நம் பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் வெளிநாட்டில் இருப்பாரு, இன்னொரு நாள் கோவையில் ஒரு விழாவில் இருப்பாரு. இந்த வயதில் இத்தனை ஆக்டிவா இருக்கிறதை பார்த்தால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. உலகில் எந்த நாட்டில் பிரச்சினை என்றாலும் அந்த நாட்டு பிரதமருடன் மோடி பேசினால் உடன் நாலா பக்கத்தில் இருந்து விமர்சனங்கள் வருகின்றன.

    செவி சாய்க்காமல்

    செவி சாய்க்காமல்

    தன் மீதான விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி செவி சாய்க்காமல் இருக்கிறார். பிரதமர் மோடியின் பெயர் மக்கள் மனதில் எழுதப்பட்டு இருக்கிறது. மோடியை விமர்சனங்கள் செய்பவர்கள் 3 மாதத்தில் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள். ஏன் நான் இதை சொல்கிறேன் என்றால் 3 மாத குழந்தைக்குத்தான் வாய், காது இருக்காது.

    அண்ணாமலையை பார்த்தால் ஆச்சரியம்

    அண்ணாமலையை பார்த்தால் ஆச்சரியம்

    அது போல் விமர்சனங்கள் செய்பவர்களுக்கு நல்லது சொன்னாலும் காது கேட்காது, அதை பற்றி பேசவும் மாட்டார்கள். அண்ணாமலை இங்கிருந்து கர்நாடகா சென்று சிறப்பாக பணியாற்றியதாக சொன்னார்கள். நான் கர்நாடகா சென்றிருந்த போது அவரைப்பற்றி பெருமையாக பேசியது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இது பாராட்டப்பட வேண்டியது. பாஜகவுக்கு சரியான ஆளைத்தான் தலைவராக போட்டிருக்கிறார்கள் என பாக்யராஜ் பேசினார். இளையராஜா பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியதால் சலசலப்புகள் ஏற்பட்ட நிலையில் பாக்யராஜும் தற்போது இவ்வாறு பேசியுள்ளார்.

    English summary
    Director and Actor Bhagyaraj gives suitable reply for those who criticise PM Narendra Modi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X