“தமிழ் தெரியல! ஸோ தமிழை கட்டாயமாக்காதீங்க”.. வீம்பாக பேசிய பாஜக அலிஷா! விளாசிய இயக்குநர் நவீன்
சென்னை: தமிழ்நாட்டில் 'தமிழ் மொழியை' கட்டாயப்படுத்தக்கூடாது என பாஜக மாநில விளையாட்டு பிரிவு செயலாளர் 'அலிஷா அப்துல்லா' கூறியிருப்பது கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. ஏற்கெனவே இதற்கு முன்னர் நடந்த நேர்காணலில் 'இந்தியை கற்றுக்கொண்டால் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக மாட்டார்கள்' என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், தற்போது தமிழ் மொழி இம்மாநிலத்தில் திணிக்கப்படுவதாக கூறியுள்ளார். இவரின் இக்கருத்துக்கு திரைப்பட இயக்குநரும் நடிகருமான 'நவீன்' விளக்கமளித்துள்ளார்.
மேலும், தமிழ் தெரியாமல் ஃபெயிலானவர்கள் தமிழ் கூடாது என்று கூறுகிறார்கள். இந்தி தெரியாத நாம் ஏன் இந்தி கூடாது என்று சொல்லக்கூடாது என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.

பாஜக பெண் நிர்வாகி
நேற்று தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்திருந்த அலிஷா, "நான் சிறுவயதாக இருக்கும்போது தமிழ் மிக முக்கியமான மொழி. நாங்கள் அதை கண்டிப்பாக படிக்க வேண்டும். மூன்று முறை நான் அதில் ஃபெயிலாகி விட்டேன். சரியாக சொல்வதெனில் தமிழ் திணிக்கப்பட்டது. இதை யாரும் பேசுவதில்லை. நான் தமிழ் திணிப்பால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். நானே அதற்கு சாட்சி. தேர்வெழுதும்போது எங்களுக்கு தமிழ் தெரியாததால் ஒரு ஆசிரியையே எங்களுக்கு உதவி செய்தார்.

தமிழ் திணிப்பு
எனவே மொழியை திணிக்காதீர்கள். ஒரு சர்வதேச பள்ளியில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் எனில் வெளிநாட்டினர் எப்படி படிப்பார்கள்? அதேபோல நாங்கள் வெளிநாடுகளுக்கு கல்வி பயில செல்கிறோம். அங்கு பிரெஞ்சு கட்டாயம் படிக்க வேண்டும். இல்லையெனில் நாங்கள் ஃபெயிலாக்கப்படுவோம் எனில் அதை எப்படி பயில முடியும்? எங்கள் குடும்பமே தமிழ் மொழி குடும்பம் அல்ல. அப்படி இருக்கும்போது தமிழ் கட்டாயம் என சொன்னால் நாங்கள் எப்படி படிப்பது?" என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்தி திணிப்பு
பாஜக பெண் நிர்வாகியின் இக்கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டம் தெரிவித்துள்ளனர். இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் நவீன், "இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு சரியான காரணம் இதுதான். தமிழ் தெரியாத சகோதரி அலிஷா தமிழில் fail ஆவதுபோல்தானே கவுந்தப்பாடியில் இருக்கும் ஹிந்தி தெரியாத எங்கள் குப்பனும் சுப்பனும் ஹிந்தியில் ஃபெயிலாவான். அப்புறம் எப்படி அவன் உயர்கல்விக்கு போவான். கல்வி மறுக்கப்பட்ட நம் சமூகம் எப்படியாவது உயர்கல்வி பெற்று உயர வேண்டும் என்பதுதான் தமிழ்நாட்டின் 100வருட லட்சியம். அதனால்தான் சோறு போட்டு பள்ளிக்கு அழைத்தனர் நம் தலைவர்கள்.

கேள்வி
ஹிந்தி இருந்திருந்தால் பாதி பேர் ஃபெய்லாகி படிப்பை தொடராமல் கைவிட்டிருப்பர். சகோதரி அலிஷா அவர்களை குறுக்குவழியில் பாஸ் செய்து விட்டதைபோல், நம் முன்னோர்களை பாஸ் செய்துவிட எவரும் முன்வந்திருக்க மாட்டார்கள். தமிழ் தெரியாத ஹிந்திகாரன் தமிழ்நாட்டுல தமிழ்ல பெயிலாகுறான், தமிழ்திணிப்பு கூடாதுனு சொல்ல தெரிஞ்ச ஒனக்கு, ஹிந்தி தெரியாத தமிழன் ஹிந்தில பெயிலாவான், ஹிந்திதிணிப்பு கூடாதுனு சொல்ல ஏண்டா தெரியாம போச்சு?" என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
பாஜகவின் அலிஷா, ஏற்கெனவே ஒரு நேர்காணலில் தமிழ்நாட்டில் இந்தி கட்டாயம் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் -
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள்












Click it and Unblock the Notifications