சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பௌத்தம் ஏற்போம்! சமத்துவத்தை உண்டாக்குவோம்- அம்பேத்கர் நினைவு நாளில் இயக்குநர் பா.ரஞ்சித் ட்வீட்

Google Oneindia Tamil News

சென்னை: அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு இயக்குநர் பா. ரஞ்சித் தமது ட்விட்டர் பக்கத்தில் பௌத்தம் ஏற்போம்! சமத்துவத்தை உண்டாக்குவோம் என பதிவிட்டுள்ளார்.

சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 65-வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழகத்திலும் அரசியல் கட்சிகள், இயக்கங்கள் சார்பில் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை அம்பேத்கர் மணி மண்டபத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாகாலாந்து: சொந்த நாட்டு பழங்குடி மக்களையே சுட்டு கொலை செய்வதா? இது நாடா? சுடுகாடா?:சீமான் சீற்றம் நாகாலாந்து: சொந்த நாட்டு பழங்குடி மக்களையே சுட்டு கொலை செய்வதா? இது நாடா? சுடுகாடா?:சீமான் சீற்றம்

பெளத்தம் தழுவிய அம்பேத்கர்

பெளத்தம் தழுவிய அம்பேத்கர்

அம்பேத்கர் தம் வாழ்நாளின் இறுதியில் இந்து மதத்தில் இருந்து வெளியேறி பெளத்த மதத்தைத் தழுவினார். 1956-ம் ஆண்டு அக்டோபர் 14-ந் தேதி பல லட்சக்கணக்கான மக்களுடன் பெளத்த மதத்தை அம்பேத்கர் தழுவினார். இதன் பின்னர் சில மாதங்களிலேயே அம்பேத்கர் காலமானார்.

பா.ரஞ்சித் ட்வீட்

பா.ரஞ்சித் ட்வீட்

அம்பேத்கரை பின்பற்றுகிறவர்கள் இன்றளவும் பெளத்த மதத்தைத் தழுவியோ அல்லது ஏற்றுக் கொள்கிறவர்களோ இருக்கின்றனர். இந்த பின்னணியில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் இன்று அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு தமது ட்விட்டர் பக்கத்தில், பௌத்தம் ஏற்போம்! சமத்துவத்தை உண்டாக்குவோம் என பதிவிட்டுள்ளார்.

ரஞ்சித் ட்வீட் மீது விவாதம்

ரஞ்சித் ட்வீட் மீது விவாதம்

பா.ரஞ்சித்தின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகி இருக்கிறது. அவரது ட்விட்டர் பக்கத்திலேயே, பௌத்தம் சமத்துவமா ? இலங்கை பக்கமோ பர்மா பக்கமோ போய் பாருங்க என @yoagandran என்ற நெட்டிசன் பதில் தந்துள்ளார். @thamilavantham என்ற நெட்டிசன், இந்துத்துவா போன்ற சிங்கள, சீன பௌத்த தீவிரவாதத்தை வேரறுப்போம்.அறிவு ஆசான் அம்பேத்கருக்கு அன்று அது தேவைப்பட்டது.இன்று அவர் இருந்திருந்தால் 1980 லிருந்து 300000 ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த பௌத்தனாக ஒருபோதும் இறக்கமாட்டேன் என்றிருப்பார் என குறிப்பிட்டுள்ளார்.

Recommended Video

    Ambedkar நினைவு தினத்தில் BJP Annamalaiயின் Press Meet | OneIndia Tamil
    பெளத்தமும் தமிழர்களும்

    பெளத்தமும் தமிழர்களும்

    அதேபோல் @PonAdhavan என்ற பதிவர், னாதன இந்துதுவமும் பௌத்தமும் சமணமும் தமிழர்கள் ஏற்க வேண்டியதில்லை... புத்தனின் நல்ல கருத்துகளை ஏற்போம்... அவ்வளவு தான்.. ஈழ, ரோஹிங்யா இனப்படுகொலைகளை அரங்கேற்றிய பௌத்தர்கள் தான் பௌத்தத்தை முதலில் ஏற்க வேண்டும்... பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவன் போதும் எங்களுக்கு... என பதில் அளித்துள்ளார்.

    English summary
    Director and Social Activist Pa.Ranjith tweets on Buddhism.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X