வேதனையின் உச்சத்தில் இருக்கும் போது எந்த முடிவும் எடுக்காதீங்க.. செல்வராகவன் அட்வைஸ்
சென்னை: தயவு செய்து வேதனையின் உச்சத்தில் இருக்கும் போது எந்த முடிவும் எடுக்காதீர்கள், இரண்டு நாட்கள் கழித்து யோசிப்போம் என்று விட்டு விட்டு நன்கு உணவருந்தி ஓய்வெடுங்கள் என இயக்குனர் செல்வராகவன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் திரைமொழியை சரியாக கையாண்டு அதன் மூலமே கதை சொல்லும் இயக்குனர்களில், இயக்குனர் செல்வராகவனுக்கு தனி இடம் உண்டு. துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, மயக்கம் என்ன உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் என்றும் தமிழ் ரசிகர்களின் நினைவில் நிற்பவர் செல்வராகவன். குறிப்பாக ஆயிரத்தில் ஒருவன் , புதுப்பேட்டை படங்கள் அவரது தனி திறமை இயக்கத்தின் மூலமாக தமிழ் சினிமாவின் ஐகானிக் திரைப்படங்களில் ஒன்றாக உள்ளது.

கடைசியாக அவர் இயக்கிய சில படங்கள் சரியாக போகாத நிலையில் தற்போது நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார்., விஜய்யின் பீஸ்ட், சாணிகாயிதம் உள்ளிட்ட படங்களில் நடிப்பதாக தகவல்கள் வரும் நிலையில், தொடர்ந்து செல்வராகவன் நடிப்பில் கவனம் செலுத்துவாரா அல்லது படங்களை இயக்குவாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ட்விட்டரில் அடிக்கடி பல கருத்துக்களை பதிவிட்டு ரசிகர்களையும் திரைத்துறையினரையும் குழப்பி வருகிறார் செல்வராகவன். இன்னொருவர் இருந்தால் தான் நிம்மதி என்று ஒரு பொழுதும் நினைத்து விடாதீர்கள், உண்மையில் அதைப்போல ஒரு இம்சை எதுவும் இல்லை, தனிமையில் இருப்பதே பேரின்பம் பெரும் நிம்மதி என்ற செல்வராகவனின் ட்வீட்டால், கல்யாண உறவில் ஏற்பட்ட பிரச்சினையால் அவர் பதிவிட்டதாக ரசிகர்கள் யூகங்களை வெளிப்படுத்தினர்..
மேலும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு, ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மனதை குத்திக் கிழித்து உடைத்து சுக்குநூறாய் போட்ட காதல் ஒன்று இல்லாமல் இருக்காது எனவும், நேற்று வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் நான்தான் காரணம் என்று பழி போட்டுக் கொள்ளாதீர்கள் மற்றவர்கள் பாவத்தை நாம் சுமந்தது போதும் என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள செல்வராகவன், தயவுசெய்து வேதனையின் உச்சத்தில் இருக்கும்போது எந்த முடிவும் எடுக்காதீர்கள் இரண்டு நாட்கள் கழித்து யோசிப்போம் என்று விட்டு விட்டு நன்கு உணவருந்தி ஓய்வெடுங்கள் , இரண்டு நாட்களுக்கு பிறகு ஒன்று பிரச்சினையே இருக்காது இல்லை நீங்கள் முடிவெடுக்கும் மனநிலையில் இருப்பீர்கள் என குறிப்பிட்டுள்ளார்..
இதையடுத்து ரசிகர்கள் பலரும் என்னாச்சு தலைவா உனக்கு, மறுபடியும் நீங்க வந்து விட்டீர்களா என கமெண்ட்களில் கேள்வி கேட்டு செல்வராகவனை துளைத்து எடுத்து வருகின்றனர்.. ஒருவேளை அப்படி இருக்குமோ? ஒருவேளை இப்படி இருக்குமோ? என தனது திரைப்படங்களில் காட்டப்படுவது போலவே தனது ட்வீட் மூலமும் செல்வராகவன் குழப்பி வருகிறார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்












Click it and Unblock the Notifications