அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்களில் தடங்கல்! 24 மணி நேரத்திற்குள் கோளாறு சரி செய்யப்படும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு கேபிள் நிறுவனத்துக்கு தனியார் நிறுவனம் வழங்கிய மென்பொருள் சேவையில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிப்புகளை சரி செய்ய தொழில்நுட்பக் குழு முழு வீச்சில் பணியாற்றி வருவதாகவும் அதிகபட்சமாக 24 மணி நேரத்திற்குள் சரி செய்யப்படும் எனவும் அரசு உறுதியளித்துள்ளது.

இது தொடர்பாக அரசுத் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது;

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு மென்பொருள் சேவைகள் வழங்கி வந்த தனியார் நிறுவனத்தின் மென்பொருள் சேவைகளில் திடீரென தடைபட்டதால் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவைகள் பல பகுதிகளில் உள்ள செட்டாப் பாக்ஸ்களில் தடங்கல் ஏற்பட்டது.

Disruption in government cable TV set-up boxes, fault will be fixed within 24 hours

பாதிப்புகளை உடனடியாக சரி செய்ய தொழில்நுட்பக் குழு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. அதிகபட்சம் இன்னும் 24 மணி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் முழுமையாக சரி செய்யப்படும்.

அரசு கேபிள் நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும்படி கேபிள் ஆபரேட்டர்கள் பொதுமக்கள் வாடிக்கையாளர்கள் அனைவரையும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், அந்த தனியார் நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் கேபிள் டிவி நிறுவனம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே விடுமுறை தினமான இன்று அரசு செட்டாப் பாக்ஸ் வைத்திருப்போர் பலரும், தொலைக்காட்சிகளில் தங்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை காண முடியாமல் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அரசு செட்டாப்ஸ் வேலை செய்யவில்லை என அதன் பயன்பாட்டாளர்கள் பலரும் புகார் மேல் புகார் அளித்து வந்த நிலையில் அரசு தரப்பில் இந்த விளக்கம் தரப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+