சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வைகோவும், வைகைக் கரை விஜயகாந்த்தும்.. காலத்தின் கோலம்.. ஆளுக்கொரு பக்கம் அலங்கோலம்..!

2014-ம் ஆண்டு தேர்தலின்போது வைகோ, விஜயகாந்த் இடையே அளவுகடந்த நட்பு நிலவியது.

Google Oneindia Tamil News

சென்னை: "விடுங்க கேப்டன், நீங்க வேணும்னா பாருங்க.. அடுத்த சட்டமன்ற தேர்தலை நீங்களும் நானும் சேர்ந்துதான் நிர்ணயிக்கப்போறோம். நாம இனிமே ஒன்னா இருப்போம்.. கவலைப்படாதீங்க" என்று தெம்பான வார்த்தைகள் தரப்பட்டது விஜயகாந்த்துக்கு! இந்த தெம்பான வார்த்தைகளை தந்தவர் வைகோ! ஆனால் இதெல்லாம் போன தேர்தலில்! இப்போது ஆளுக்கு ஒரு கட்சி.. ஆளுக்கு ஒரு திசை!
கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் கருணாநிதி, ஜெயலலிதா அளவுக்கு பரபரப்பாக பேசப்பட்டவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோதான்!

புதிய கூட்டணியை அமைத்து.. அதில் திருமா, விஜயகாந்தை உள்ளே கூட்டிவந்து பிரமாண்டத்தை காட்டினார். கடைசிநேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யாமல் ஸ்டண்ட் அடித்து திரும்பி, மக்கள் நல கூட்டணியை தன் அரசியல் வியூகத்தால் பட்டிதொட்டி எங்கும் கொண்டு போக செய்தார்!

ரசிகர்கள் முடிவெடுத்தாச்சு.. விஜய் வாய்ஸ் தர வேண்டியது மட்டும்தான் பாக்கி! ரசிகர்கள் முடிவெடுத்தாச்சு.. விஜய் வாய்ஸ் தர வேண்டியது மட்டும்தான் பாக்கி!

புதிய கூட்டணி

புதிய கூட்டணி

அப்போது விஜயகாந்த்தை கூட்டணிக்குள் கொண்டுவர நிறைய பாடுபட்டார் வைகோ. கொஞ்சம் விட்டிருந்தால் விஜயகாந்த் திமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கும். (ஒருவேளை அப்படி கூட்டணி ஏற்பட்டிருந்தால் விஜயகாந்த்துக்கு இன்றைய நிலைமை ஏற்பட்டிருக்காது) புதிய கூட்டணி அமைத்தபோது, விஜயகாந்த்தும், வைகோவும் ஒருவருக்கொருவர் நெகிழ்ந்து கொண்டனர், புகழ்ந்து கொண்டனர், மகிழ்ந்து கொண்டனர்!

சுதீஷ்

சுதீஷ்

அந்த சமயத்தில்தான், பாமக தொகுதியில் ஒத்துழைப்பு தராதது பற்றி விஜயகாந்த் வைகோவிடம் புலம்பி இருக்கிறார். வம்படியாக சுதீஷை சேலத்தில் நிற்கும்படி சொல்லுவதே அன்புமணிதான் என்றும் விஜயகாந்த் வைகோவிடம் புலம்பி உள்ளார். அப்போது வைகோ சொன்ன ஆறுதல் வார்த்தைகள்தான்.. "விடுங்க கேப்டன், நீங்க வேணும்னா பாருங்க.. அடுத்த சட்டமன்ற தேர்தலை நீங்களும் நானும் சேர்ந்துதான் நிர்ணயிக்கப் போறோம். நாம இனிமே ஒன்னா இருப்போம்.. கவலைப்படாதீங்க" என்பது!

பாமக கூட்டணி

பாமக கூட்டணி

இப்படி கூடி குலாவிய வைகோவும், விஜயகாந்த்தும் இன்று என்ன ஆனார்கள்? யாரால் கட்சியை விட்டு வெளியேறினாரோ அதே கட்சியில், அவராலேயே சீட் வாங்கி கூட்டணி வைத்துள்ளார் வைகோ. யாரையெல்லாம் அன்றைக்கு திட்டினாரோ அதே அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவுடன் உறவை வைத்துள்ளார் விஜயகாந்த்!

துணிச்சல்

துணிச்சல்

கூட்டணியில் இருந்தும் இவர்கள் குரல்கள் கம்மி போயுள்ளது.. பலம் குறைந்து போயுள்ளது.. செல்வாக்கு சரிந்து போயுள்ளது! இதற்கெல்லாம் என்ன காரணம்? சில முக்கிய முடிவுகளை, முக்கிய சந்தர்ப்பங்களில் சரியாக எடுக்க தெரியாததா? அல்லது யாரையுமே எதிர்க்கும் துணிச்சலை இழந்து வருவதா? என தெரியவில்லை.

மனித நேயம்

மனித நேயம்

ஆனால் அரசியல் சாணக்கியத்தனம் நிறைந்தவர் வைகோ என்றால், மிகச்சிறந்த மனித நேய மிக்கவர் விஜயகாந்த்! போன தேர்தலில் உரக்க குரல் கொடுத்தவர்கள், இந்த தேர்தலில் சுவடு இல்லாமல் போயுள்ளதுதான் வரலாறு நமக்கு உணர்த்தும் அரசியல் பாடம்!

English summary
There was a thick and fine relationship between DMDK Leader Vijayakanth and MDMK General Secretary Vaiko in 2014 MP Election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X